தீயசக்திகள் உங்கள் வீட்டின் உள்ளே வருவதற்கு வாய்ப்பே இல்லை !! இந்த 2 பொருட்களை சேர்த்து தெரு வாசப்படியில் 2 பக்கத்திலும் வைத்தால் போதும் !!

நம்முடைய சாஸ்திரத்தில் பாதுகாப்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, தெய்வங்களுக்கு கூட உள்ளது. எல்லா கோவில்களிலும் தெய்வங்களுடைய பாதுகாப்பிற்காக வைத்திருக்கும், துவாரபாலகர்களும், பலிபீடங்களுமே இதற்கு சாட்சி. துவார பாலகர்களின் அனுமதி இல்லாமல், எந்த ஒரு கெட்ட சக்தியும் கோவிலுக்குள் கட்டாயம் செல்லவே முடியாது. தீய சக்திகளை தடுத்து நிறுத்தக் கூடிய சக்தி துவார பாலகர்களின் கையில்தான் உள்ளது. அம்மன் கோவில்கள், பெருமாள் கோவில்கள், இப்படி பல கோவில்களில் துவார பாலகர்களை, பலி பீடங்களை நாம் பார்த்திருப்போம். மூலஸ்தானத்திற்கு வெளி பக்கத்திலோ அல்லது கோவில்களின் வெளிப்பக்கத்திலோ இரண்டு பெரிய உருவங்களைக் கொண்ட, கையில் ஆயுதங்களை ஏந்திய பாலகர்கள் நிற்பார்கள் அல்லவா, இவர்களே துவாரபாலகர்கள் ஆவர்கள்.

உலகத்தையே ஆளும் இறைவன் வசிக்கும் இடத்திற்கே, ஒரு பாதுகாப்பு சக்தி தேவைப்படுகிறது என்றால், நாமெல்லாம் மனிதர்கள். கட்டாயம் நம்முடைய வீட்டிற்கும் ஒரு பாதுகாப்பு தேவை அல்லவா, கோவில்களில் இருக்கும் துவார பாலகர்களை போலவே நம்முடைய இரு வாசல்களிலும் பாதுகாப்பு கவசத்தை நம்மால் ஏற்படுத்திக்கொள்ள முடியும். அது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பரிகாரத்திற்க்கு உங்கள் வீட்டில் இருக்கும் பச்சரிசியை கொஞ்சமாக மஞ்சள் தூள் போட்டு, லேசாக தண்ணீர் தெளித்து அதை பிசைந்து கொள்ள வேண்டும். அதாவது அட்சதை. தினம்தோறும் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்து விட்டு, வாசல் பெருக்கி கோலம் போட்ட பின்பு, உங்கள் நில வாசப்படியையும் துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, இரு கைகளை கூப்பி வணங்கி, இந்த அட்ச்சத்தையில் கொஞ்சம் போல் உங்கள் கைகளில் எடுத்து, முதலில் வாசல்காலின் வலப்பக்கம் போட வேண்டும்.

அதன் பின்பாக இடது பக்கம் இருக்கும் வாசல்களில் கொஞ்சம் போல அட்சதையை வைக்க வேண்டும். அதாவது அந்த அட்சதையை எடுத்து உங்கள் வீட்டு நிலை வாசற் படியில் இரண்டு பக்கத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக வைக்கப் போகிறீர்கள், அவ்வளவுதான். அந்த அட்சதையை போடும்போது, ‘ஓம் பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லி போடும் பட்சத்தில் ஈசனை பாதுகாக்கும் அந்த பைரவரே, உங்கள் வீட்டுக்கு காவலாக கட்டாயம் நிற்பார். அப்படி இல்லை என்றால் ‘ஓம் நரசிம்ஹாய நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லி இந்த அட்சதையை போடுவதிலும் தவறு ஒன்றும் கிடையாது. இப்படி செய்யும் பட்சத்தில் அந்த விஷ்ணு பகவானை பாது காக்கும் துவார பாலகர்களே, உங்கள் வீட்டிற்கு காவலாளியாக நிற்பார்கள்.

இப்படியாக உங்களுக்கு விருப்பமான தெய்வத்திற்கு உண்டான மந்திரத்தை உச்சரித்து உங்கள் வீட்டிற்கும் துவார பாலகர்களை நிறுத்தி வையுங்கள். தினம்தோறும் வாசலில் இருக்கும் அட்சதையை எடுத்து, கால் படாத இடத்திலோ, செடிகளிலோ போட்டுவிட்டு, மீண்டும் புதிய அட்சதையை இதே மந்திரத்தை உச்சரித்து போடுவது என்றுமே நம் வீட்டிற்கு நன்மையை தரும். அடுத்தவர்களுடைய கெட்ட பார்வை, கண் திருஷ்டி, கண்ணுக்கு தெரியாத காத்து கருப்பு இவைகள் நம் வீட்டிற்குள் நுழையவே முடியாது. இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம், நம் குடும்ப உறுப்பினர்களும் நிம்மதியான, பாதுகாப்பான சந்தோஷத்தைப் பெற முடியும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.