தேவைப்படவில்லை என குப்பையில் தூக்கி போடும் கொட்டாங்குச்சிக்குள் இவ்வளவு விஷயம் அடங்கியுள்ளதா ??

பொதுவாகவே நம் வீடுகளில் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும், ஒரு பொருள் தேங்காய். அந்தத் தேங்காயை துருவி எடுத்துக்கொண்டு, கொட்டாங்குச்சியை தூக்கி குப்பையில் வீசி விடுவோம். ஆனால், அந்த கொட்டாங்குச்சியில் எவ்வளவு கண்ணுக்குத்தெரியாத, உபயோகமான விஷயங்கள் அடங்கி உள்ளது என்பது நம்மில் பல பேருக்கு தெரியாது. அதிகப்படியான சத்துக்கள் நிறைந்த அந்த கொட்டாங்குச்சியை வைத்து நாம் எந்தெந்த வகையில் பயன் அடையலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலில் காலியான கொட்டாங்குச்சியை நெருப்பு மூட்டி எரித்துக் கொள்ள வேண்டும். மண்ணெண்ணெய் ஊற்றி எல்லாம் எரிக்கக் கூடாது. அப்படியே பற்ற வைத்து எரிக்க வேண்டும். முழுமையாக எரிந்து, கரியாகி தானாகவே அணைந்து, நன்றாக சூடு தனியட்டும். இப்போது எரிந்திருக்கும் அந்த கொட்டாங்குச்சி துண்டுகளை ஒன்றாக சேகரித்து, தண்ணீர் படாமல் மிக்ஸியில் அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பொடியை வைத்து தான் நாம், பலவகையான பயன்பாட்டினை தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்தப் பொடி நம் சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள பயன்படும். நீங்கள் அரைத்து வைத்திருக்கும் கொட்டாங்குச்சி தூளை, சிறிதளவு எடுத்து, அதனுடன் தேன் அல்லது எலுமிச்சை பழச்சாறு அல்லது தக்காளி பழச்சாறு, கலந்து பேஸ்டாக மாற்றி உங்களது முகத்தில் ஃபேஸ் மாஸ்காக பயன்படுத்தலாம். தேவையற்ற கரும்புள்ளிகள் உடனடியாக மறையும் என்பது குறிப்பிடத்தக்கது. முகத்தில் மட்டுமல்ல உங்களுடைய உடலில் எந்த இடத்தில் கருநிறம் அதிகமாக இருக்கின்றதோ அந்த இடத்தில் இந்த பேஸ்ட்டை 20 நிமிடங்கள் வரை போட்டுவிட்டு, அதன் பின்பு கழுவி விடவேண்டும். இப்படியாக, தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் உண்டு.எடுத்துக்காட்டாக, அக்குள் பகுதி கழுத்துப் பகுதி இந்த இடங்களில் கருநிறம் அதிகமாக இருக்கும் அல்லவா? அந்த இடங்களில் இந்த பேஸ்ட்டை, தொடர்ந்து தடவி, ஊற வைத்து 20 நிமிடங்கள் கழித்து கழுவி பாருங்கள்.

உங்களுடைய பற்கள் பழுப்பு நிறமாக இருந்தாலும், வாய் துர்நாற்றம் வீசினாலும் இந்த கொட்டாங்குச்சி பொடியை பிரஷ்ஷில் தொட்டு பல் தேய்த்து வந்தீர்கள் என்றால் உங்களது பல் வெள்ளை நிறமாக மாறும் என்பது குறிப்பிடதக்கது. இதோடு மட்டுமல்லாமல் பல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். பல் சொத்தை வருவதும் தடுக்கப்படும். இந்த கொட்டாங்குச்சி கரி தூளை தேங்காய் எண்ணெயோடு கலந்து விடுங்கள். அந்த எண்ணையை அடுப்பில் வைத்து லேசாக சூடுபடுத்தி, நன்றாக ஆறிய பின்பு வடிகட்டி விடவேண்டும். இப்போது அந்த எண்ணெயை தினந்தோறும் உங்கள் தலையில் தேய்த்து வந்தால் இளநறை சீக்கிரமாகவே மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களது முடியும் சீக்கிரமாக நறைத்து போகாது. இதையும் படிக்கலாமே அடிக்கிற வெயிலுக்கு ஏசி வேணும்னு தோனுதா? இத மட்டும் செஞ்சா ஏசி வாங்காமலே வீட்ட குளிர்ச்சியா வெச்சிக்கலாம். இந்த கொட்டாங்குச்சி கரித்தூளோடு விளக்கெண்ணெய் சேர்த்து, பேஸ்ட் போல் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.

சிறிய குழந்தைகளுக்கு மைக்கு பதிலாக, கெமிக்கல் கலக்காத இந்த கொட்டாங்குச்சி மையை பயன்படுத்திக் கொள்ளலாம். பெரியவர்களும் கண்களில் தீட்டிக் கொள்ளும் கெமிக்கல் கலந்த மைக்கு, பதிலாக இயற்கையான இந்த மையை பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. பொதுவாகவே இந்த கொட்டாங்குச்சியை சேகரித்து வைத்து, சில பேர், பழைய பொருட்கள் வாங்குவார்கள் அல்லவா? அவர்களிடத்தில் காசுக்கு போடுவார்கள். பழைய பொருட்களை வாங்குபவர்கள், இதை காசு கொடுத்து வாங்கி செல்வார்கள். இதற்கு காரணம் இது நல்ல உரம் என்பதால்தான். இந்த கொட்டாங்குச்சியின் ஓடை, நல்ல உரமாகவும் பயன்படுத்தலாம். நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த கொட்டாங்குச்சி கரித்தூளை உங்கள் வீட்டில் ஏதாவது செடிகள் வைத்திருந்தால், அதற்கு சிறிதளவு உரமாக போடலாம். நீங்கள் செடி வைத்திருக்கும் மண் கலவையோடு இதை சேர்த்து வைத்தீர்கள் என்றால், உங்கள் வீட்டில் வைத்திருக்கும் செடி நல்ல ஊட்டச் சத்தோடு வளரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ரோஜா செடி மல்லி செடி விதை போட்டால் நிறைய பூ பூக்கும் காய்கறிச் செடிகளுக்கு போட்டால் செழிப்பாக பெரியதாக காய்கறி வளரும்.