தொண்டைக்குழியில் கைவைத்து 9 முறை இப்படி சொன்னால் நினைத்தது நிறைவேறும் !!

நம் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறாமல் இருப்பதற்கு நம்முடைய எண்ணங்கள் தான் காரணம். முதலில் நம்முடைய எண்ணங்களை நேர்மறையாக வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். வாழ்க்கையில் ஏற்படக்கூடிய தோல்விகளுக்கு, நம்முடைய கர்ம வினை காரணமாக இருக்குமோ! அல்லது நாம் செய்த பாவங்கள் தடையாக நிற்கின்றதோ! ஜாதக கட்டத்தில் பிரச்சனைகள் இருக்கின்றதோ! இப்படிப்பட்ட பலவகையான சிந்தனைகள் நம்மை வெற்றி பாதையை நோக்கி செல்ல விடாமல் தடுக்கின்றது. ஆகவே எண்ண ஓட்டங்களை சீராக மாற்றி விட்டாலே நம் பிரச்சனையில் பாதி தீர்ந்து விடும். இதற்கு வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறிய ஒரு சிறந்த பயிற்சியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பயிற்சியை தொடங்குவதற்கு முன்பாக உங்களது மனதை முதலில் அமைதி படுத்திக் கொள்ளுங்கள்.

அமைதியான சூழ்நிலையில், அமர்ந்த நிலையில், உங்களது ஆள்காட்டிவிரலை தொண்டைக்குழியில் லேசான அழுத்தத்தில் வையுங்கள். நன்றாக அழுத்தி விடக்கூடாது. வேகம் கூடாது. லேசான அழுத்தம் மட்டுமே தர வேண்டும். உங்கள் ஆள்காட்டிவிரலை தொண்டைக் குழியில் வைத்தவாறு, உங்களது வேண்டுதல்களை கண்களைமூடி மனதார 9 முறை சொல்லுங்கள். தொண்டைக்குழியானது, தொண்டை சக்கரம் என்று சொல்லப்படுகிறது. அதாவது விசுத்தி சக்கரம் என்று அழைக்கப்படும் நம்முடைய தொண்டை குழியை தூண்டும் போது, நம்முடைய மனது விண்சக்தியோடு இணைக்கப்படுகிறது.விண்சக்தி தான் காற்று சக்தியாக மாறும். காற்று சக்தியானது அக்னி சக்தியாக மாறும். அக்னி சக்தி நீர் சக்தியாக மாறும். நீர் சக்தி மண் சக்தியாக உருவெடுக்கிறது. இப்படியாக பஞ்ச பூதங்களையும் அடக்கும் பயிற்சியாக இது கருதப்படுகிறது.

எல்லா சக்திக்கும் மூலாதாரமாக இருக்கும் விண்சக்தி யோடு நம்மை இனைக்கக்கூடிய இந்த பயிற்சியை அதிகாலை வேளையிலும், தூங்கச் செல்வதற்கு முன்பு, இரவு நேரத்திலும் செய்வது நல்ல பலனை தரும். தொண்டைக்குழியில் உங்களது எண்ணங்களை பதிவு செய்து விட்டீர்கள் ஆனால், அது உங்கள் உடம்பில் இருக்கும் செல்களுக்குள் சென்று உங்களது வேண்டுதலை, உங்களது முயற்சிகளை விரைவாக வெற்றியடையச் செய்ய தூண்டும் ஆற்றலைக் கொடுக்கும்.முறைப்படி தியானத்தின் மூலம் செய்யப்படும் எந்த ஒரு பயிற்சியாக இருந்தாலும் அது வெற்றி அடைய முறையான பயிற்சி தேவை. எந்த ஒரு பயிற்சியாக இருந்தாலும் தொடர்ந்து 48 நாட்கள் எடுத்து வந்தோமேயானால் அதிலிருந்து நம்மால் நல்ல பலனை பெற முடியும்.

மன அமைதி கிடைக்கும். குறிக்கோளை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் ஆற்றலுக்கு புத்துணர்ச்சி தரக்கூடியதுதான் இந்த பயிற்சி. மனதை ஒரு நிலைப்படுத்தி பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு கட்டாயம் வெற்றி உண்டு. இதேபோல் இரவு தூக்கம் என்பதும் நமக்கு அவசியம் தேவை. இரவு நேரத்தில் நாம் தூங்கும் சமயத்தில், தான் நம்முடைய உடலில் இருக்கும் எல்லா செல்களும் புத்துயிர் பெறுகின்றது. எவ்வளவு பயிற்சியை செய்தாலும், எவ்வளவு முயற்சிகளை எடுத்தாலும், இரவு நன்றாக தூங்க வில்லை என்றால், நம்முடைய எல்லா முயற்சிகளும் தோல்வியில் தான் போய் முடியும். குறிப்பாக இரவு 12 மணியிலிருந்து 3 மணி வரை தூங்கக் கூடிய தூக்கம் என்பது எல்லா மனிதருக்கும் மிகவும் அவசியம் தேவை. இந்த தூக்கத்தை இழப்பவர்களுக்கு, உலகில் இருக்கும் எல்லா நோய்களும் வந்து விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.