தொலைந்த பொருட்களையும், கொடுத்த கடனையும் திரும்பப்பெற இப்படியும் ஒரு வழி உள்ளதா ?? இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே !!

சில விலை உயர்ந்த பொருட்களையோ அல்லது ராசியான பொருட்களையோ, நம்முடைய கவனக்குறைவினால் தொலைத்து இருப்போம். சில பேர் கொடுத்த கடனை வசூல் செய்ய முடியாமல் தவித்து வருவார்கள். இப்படி இந்த இரண்டு சூழ்நிலையில் இருப்பவர்களுக்குமே உடனடியாக இறைவழிபாட்டின் மூலம், நல்ல தீர்வினை பெறமுடியும். எந்த இறைவனை, எந்த தினத்தில் எப்படி வழிபாடு செய்தால், தொலைந்த பொருளை மீண்டும் அடைய முடியும், கொடுத்த கடனை மீண்டும் வசூல் செய்ய முடியும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஹனுமனை நினைத்துதான் இந்த பரிகாரத்தை செய்யப்போகின்றோம். அனுமனை நினைத்து தொடங்கக் கூடிய காரியம் எதுவுமே தோல்வியில் முடியாது. நினைத்த காரியம் நிச்சயம் ஜெயம் தான். முறைப்படி அந்த ஹனுமனை வியாழக்கிழமை அன்று மூல நட்சத்திரத்தில் வழிபட்டு, இந்த பரிகாரத்தை செய்வது இரட்டிப்பு பலனை நமக்கு கொடுக்கும்.

உங்களுக்கு தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்க வேண்டும் என்றாலும் சரி, அல்லது கொடுத்த கடனை மீண்டும் வசூல் செய்ய வேண்டும் என்றாலும் சரி, முதலில் ஒரு மட்டைத் தேங்காயை வாங்கிக்கொள்ளுங்கள். சுத்தமான மஞ்சள் நிற துணி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ரூபாய் நாணயம், பரிகாரத்திற்கு தேவையானது இந்த மூன்று பொருட்களும் தான். உங்கள் வீட்டு பூஜை அறையில் அனுமனை மனதார வேண்டிக் கொண்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, முதலில் இந்த மட்டை தேங்காய்க்கு மேல் கொஞ்சம் மஞ்சளும் குங்குமம் வைத்துக் கொண்டு, தயாராக வைத்திருக்கும் மஞ்சள் துணியின் மேல் தேங்காய் வைத்து, ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்து அந்த மஞ்சள் துணியில் மூட்டை கட்டி விடுங்கள். தேங்காயை படுக்க வைத்துக் கட்டக் கூடாது.

நிற்க வைத்து, மஞ்சள் துணியில் மேல் பக்கம் ஒரு நூல் போட்டு துணியை காட்டி விட்டீர்கள் என்றால் அப்படியே இருக்கும். இப்படியாக இந்த தேங்காயை முடிச்சு போடும்போது, உங்களது வேண்டுதலை அனுமனிடம் மனதார சொல்லி அதன் பின்பு முடிச்சுப்போட்டு பூஜை அறையிலேயே இந்த தேங்காயை வைத்து விடுங்கள். அவ்வளவு தான், தினம்தோறும் தீபமேற்றி சுவாமி கும்பிடும்போது உங்களுடைய பிரார்த்தனையை வைக்கவேண்டும். அதேபோல் தினம்தோறும் தொலைந்து போன பொருள் மீண்டும் கிடைக்கவும், கொடுத்த கடன் வசூலாகும் உங்களது முயற்சியும் முழு மூச்சோடு இருக்க வேண்டும். தேங்காயை கட்டி வைத்து விட்டோம், தானாக பொருள் உங்களை தேடி வரும் என்றெல்லாம் நம்பக்கூடாது. நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் துரிதமாக நடைபெற, தடைகள் உங்களை தடுத்து நிறுத்தாமல் இருக்க, இது ஒரு சிறப்பான வழிபாடு. சரி இந்த முடிச்சை கட்டிவைத்த குறிப்பிட்ட சில நாட்களிலேயே அந்த பொருள் உங்களுக்கு கிடைத்துவிடும் என்பதற்கான அறிகுறிகள் நிச்சயம் தெரியும்.

அதாவது 11 நாள் அல்லது 27 நாட்கள் தொடர்ந்து வேண்டுதலை வைத்து வாருங்கள். உங்களுக்கு எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்றால், தொலைந்துபோன பொருளாக இருந்தாலும் சரி, கொடுத்த கடனாக இருந்தாலும் சரி, உங்கள் கைகளுக்கு மீண்டும் கிடைப்பது என்பது கொஞ்சம் சிரமமான விஷயமாக மாறிவிடும். உங்களுடைய வேண்டுதல் நிறைவேறி விட்டால், இந்த மட்டை தேங்காயை எடுத்துக்கொண்டு ஹனுமன் கோவிலுக்கு சென்று, உடைத்து கோவிலில், உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். வேண்டுதல் நிறைவேறவில்லை என்றால் என்ன செய்வது? ஒரு குறிப்பிட்ட சில நாட்கள் கழித்து, அந்த தேங்காயின் முடிச்சை அவிழ்த்துவிட்டு, இறைவனை நினைத்து, மீண்டும் உங்களுக்கு இப்படிப்பட்ட கசப்பான சம்பவங்கள் நடக்க கூடாது என்று வேண்டிக் கொண்டு, சுவாமியை நினைத்து தேங்காயை உடைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் முழுமனதோடு, முழு நம்பிக்கையோடு வேண்டுதலை வைக்கும் பட்சத்தில், நீங்கள் தொலைத்த அந்த பொருள், நீங்கள் கொடுத்த அந்த கடன், உங்களுக்கு நியாயமான முறையில் வந்து இருந்தால், கட்டாயம் நீங்கள் ஏமாற மாட்டீர்கள்!