தொழிலில் சிறப்பாக முன்னேற்றத்தை அடைந்து கஜானாவில் பணம் நிறைந்து இருக்க இந்த மூன்று பொருளை ஒன்றாக சேர்த்து வைத்தால் போதும்…!!

பொதுவாக நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றாலும், தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்றாலும், விடாமுயற்சி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. தொடர் தோல்விகளை சந்தித்தாலும், ஜெயிக்க வேண்டும் என்ற வெறியில், திரும்பத் திரும்ப முயற்சி செய்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் முதல் பாடம். இவை எல்லாவற்றையும் தாண்டி, நமக்கு அதிர்ஷ்டம் என்ற ஒன்றும், கை கொடுக்க வேண்டும், என்பதற்காக சில வழிபாட்டு முறைகளையும், சில பரிகாரங்களையும், சில பொருட்களை வைத்து செய்ய வேண்டும். முயற்சியோடு சேர்ந்த, பரிகாரம் தான், பலன் அளிக்குமே தவிர, உழைப்பே இல்லாத, முயற்சியே இல்லாமல், பணம் சம்பாதிக்க என்றைக்குமே பரிகாரங்கள் கை கொடுக்காது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு இந்த பதிவினை தொடங்கலாம். முதலில் தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்றால், யோக நரசிம்மர் வழிபாடு மிகவும் நன்மையை தரும்.

வாரம்தோறும் வரும் சனிக்கிழமைகளில் தொடர்ந்து, யோகா நரசிம்மர் கோவிலுக்கு சென்று, அவருக்கு துளசி மாலை அணிவித்து, துளசி அர்ச்சனை செய்து, வழிபட்டால் தொழில் இருக்கக்கூடிய எப்படிப்பட்ட பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை இப்போது நிலவி வருவதால், உங்களுடைய வீட்டில் வாரம்தோறும் வரும் சனிக்கிழமை அன்று, காலையில் தீபம் ஏற்றி வைத்து, அந்த தீபத்தை யோக நரசிம்மராக நினைத்து, வேண்டி, உங்கள் தொழில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும். அதிகப்படியான லாபம் கிடைக்க வேண்டும், என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். அடுத்ததாக, நீங்கள் தொழில் செய்யும் இடமாக இருந்தாலும், அல்லது அலுவலகமாக இருந்தாலும், உங்களது கடையாக இருந்தாலும், வாரம்தோறும் வரும் சனிக்கிழமைகளில், தொழில் செய்யும் இடத்தில், தீபம் ஏற்றி வைத்து யோக நரசிம்மரை வேண்டிக்கொண்டு, ‘யோக நரசிம்மம் சரணம் பிரபத்யே!’ இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். மந்திரத்தை உச்சரிக்கும் போது சில துளசி இலைகளை கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த மந்திரத்தை வீட்டில் உச்சரிக்கலாமா என்று கேள்வி, கட்டாயம் வரும். வீட்டில் உச்சரிப்பதில் எந்த ஒரு தவறும் கிடையாது. ஆனால், தொழில் செய்யும் இடத்தில், சனிக்கிழமை தோறும் இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால், உங்களுடைய தொழிலில் இருக்கக்கூடிய கண்திஸ்டி முழுமையாக நீங்கும். தொழில் அமோகமாக லாபத்தை தரும். எந்த வித தடைகளும் உங்களுடைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடாது. பணவரவு அதிகரிக்கும். இது வழிபாட்டுக்குரிய பரிகாரம். அடுத்து கல்லாப் பெட்டிக்கு வருவோம். எப்போதுமே, லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்று எண்ணி, ஒரு சிறிய டப்பாவில் ஒரு துண்டு பச்சை கற்பூரத்தையும், கிராம்பு, போட்டு தொழில் செய்யும் இடத்தில் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் கைகளில் துளசி இலைகளை வைத்து இருப்பீர்கள் அல்லவா, அந்த துளசியையும் இதே டப்பாவில் போடுங்கள். அந்த டப்பாவை மூடி போட்டு மூட வேண்டாம். துளசி, பச்சை கற்பூரம், கிராம்பு, இந்த 3 பொருட்களுடைய வாசனை, உங்களுடைய பணம் வைக்கும் பெட்டி முழுவதும், பரவியிருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு பரிகாரங்களையும் உங்களுடைய முயற்சியோடு சேர்த்து செயல்படுத்திப் பாருங்கள். நிச்சயம் தொழிலில் நீங்கள் முன்னேறிக் கொண்டே செல்வீர்கள், பணத்திற்கு பற்றாக்குறையே இருக்காது என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.