நகைகள் அடமானம் போவதற்கு இது கூட ஒரு காரணமாக இருக்கலாம் !! பௌர்ணமி அன்று இப்படி செய்தால், நகை அடகு கடைக்கு போக வாய்ப்பே இல்லை !!

நம் வீட்டில் இருக்கும் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும், அவர்களுக்கு தங்க நகைகளை வாங்கி சேர்க்க வேண்டும் என்றுதான் ஆசை, கட்டாயம் இருக்கும். நம் வீட்டின் ஐஸ்வர்யத்தை, நிலைநிறுத்தக் கூடிய சக்தி, இந்த ஸ்வர்ணத்திற்கு உண்டு என்று கூட சொல்லலாம். நம்முடைய வாழ்க்கையில் மேலும் மேலும் முன்னேற்றம் ஏற்பட வீட்டில் தங்க நகைகள் சேர்ந்து கொண்டே இருப்பதும், ஒரு நல்ல சகுனமாக சொல்லப்பட்டுள்ளது. முடிந்தவரை நம் வீட்டில் இருக்கும் தங்க நகைகளை அடகு வைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். தங்கத்தை அடமானம் வைப்பது, நம் வீட்டில் இருக்கும், அதிர்ஷ்ட லட்சுமியை, மகாலட்சுமியை கொண்டுபோய் வெளியே விடுவதற்கு சமமாக சொல்லப்பட்டுள்ளது. நம்மிடம் இருக்கும் தங்க நகைகள் அடிக்கடி அடகு போவதற்கு என்ன காரணமாக இருக்கும்? சில பேர் தங்கம் வாங்கிய நேரம் அவர்களுக்கு மேலும் மேலும் தங்கத்தை சேர்க்கும். சில நேரங்களில் தங்கம் வாங்கினால், அதற்கு பின்பு ஒரு குண்டுமணி தங்கத்தை கூட நம்மால் வாங்க முடியாது. அதுமட்டுமல்லாமல், வாங்கிய நகையை போட்டு அழகு பார்ப்பதற்குள், அடகு கடைக்கு சென்று விடும். இதற்கு என்ன காரணம்?

இந்த இரண்டு கேள்விகளுக்கான காரணத்தையும், அதற்கான பரிகாரத்தையும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்முடைய தங்கநகை, அடிக்கடி அடகு போகின்றது என்றால், அந்த நகையில் இருக்கக்கூடிய தோஷம் தான் காரணம். அடுத்தவர்களுடைய கண் திருஷ்டி அந்த நகையில் விழுந்திருக்கலாம். அப்படி இல்லையென்றால், நீங்கள் வாங்குவதற்கு முன்பாக வேறு ஒருவர் அந்த நகையை வாங்க வேண்டும் என்று நினைத்து, வாங்க முடியாமல் இருந்திருக்கலாம். அப்படி இல்லை என்றால், உங்களுக்கு அந்த நகையை யாராவது பரிசுப் பொருளாக கொடுத்திருக்கலாம். பரிசுப் பொருளாக கொடுக்கப்பட்ட அந்த தங்க நகையானது, மன திருப்தியோடு கொடுக்கப்படாமல் இருந்தாலும் கூட, அந்த தோஷம் உங்கள் நகையை தாக்கியிருக்கும். சில பேர் எல்லாம் சீர் செய்ய வேண்டுமே என்பதற்காக, கடமைக்காக, வேறுவழியில்லாமல் கடன் வாங்கி கூட தங்க நகையை சீராக வைப்பார்கள். அப்படி நமக்கு சீராக வந்த பொன்னகை, அடுத்தவர்களுடைய திருப்தி இல்லாமல் தானே நம் கைக்கு வருகிறது.

அது கூட ஒரு வகையான தோஷம் தான். சில வீட்டில் எல்லாம் பெண் குழந்தைகளுக்கு, திருமணத்தின் போது டௌரியாக கொடுக்கும், நகைகள்கூட மன திருப்தியோடு கொடுக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட நகைக்கும் தோஷம் தாக்கப் பட்டிருக்கும். திருமணமாகி சென்ற அந்த பெண், அந்த நகைகளை எல்லாம் அடமானம் வைத்து விட்டு கஷ்டப்பட்டு கொண்டிருக்கும். ஆகவே, மன திருப்தியோடு தங்க நகையை எந்தவிதமான தோஷமும் இல்லாமல் வாங்கினால் தான், அதேசமயம் தங்கத்தை கொடுக்கும் போதும் மன திருப்தியோடு சந்தோஷமாக கொடுக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நமக்கு மேலும் மேலும் தங்கம் வாங்கும் யோகம் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. சரி, உங்கள் வீட்டில் தங்க நகை, வெள்ளி நகை ஒரு குண்டுமணி அளவு இருந்தாலும் பரவாயில்லை. அதில் இருக்கும் தோஷத்தை எப்படி நீக்குவது என்பதைப் பற்றியும் பார்த்து விடலாம். பௌர்ணமி தினத்தன்று மாலை 6 மணிக்கு மேல், இந்த பரிகாரத்தை செய்யலாம். இரவு 11 மணிக்கு முன்பு உங்களால் எப்போது முடியுமோ அப்போது செய்து வையுங்கள்.

முதலில் உங்கள் வீட்டில் இருக்கும் நகையை ஒரு மஞ்சள் துணியால் கட்டி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு தாம்பூலத் தட்டில் அம்மனை மனதார வேண்டிக்கொண்டு, மகாலக்ஷ்மியை மனதார வேண்டிக்கொண்டு, குலதெய்வத்தையும் வேண்டிக்கொண்டு, ஒரு கைப்பிடி உப்பையும், ஒரு கைப்பிடி பச்சரிசியையும் கலந்து வைத்து விடுங்கள். இந்த கலவையின் மேல் முடிந்து வைத்திருக்கும் மஞ்சள் துணியில் இருக்கும் தங்கத்தை வைத்துவிட வேண்டும் அவ்வளவுதான். இந்தத் தாம்பூலத் தட்டை, யார் கண்ணிலும் படாத ஒரு இடத்தில் பத்திரமாக வைத்து விடுங்கள். அலமாரியின் மேல் பகுதியில் வைத்து விட்டாலும் பரவாயில்லை. ஆனால் பத்திரமான இடத்தில் வைக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. யாராவது எடுத்துப் போகும் அளவிற்கு, கவனக் குறைவாக இருக்காதீர்கள். பவுர்ணமி தினமான அன்று இரவு முழுவதும், அந்த தங்க நகை பச்சரிசி உப்பு கலந்த கலவையின் மேலேயே இருக்கட்டும். அடுத்த நாள் காலை, எழுந்து குளித்து முடித்துவிட்டு, அந்த நகையை எடுத்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து, ஒரு தீபம் ஏற்றி விட்டு, மகாலட்சுமியை மனதார வேண்டிக் கொண்டு, மேலும் மேலும் தங்கம் சேர வேண்டும், நகை அடகு போகக்கூடாது, என்ற வேண்டுதலையும் வைத்து அந்த நகையை பத்திரமாக எடுத்து மீண்டும் உங்களது பீரோவில் வைத்துக்கொள்ளுங்கள். தங்கத்தில் இருக்கக்கூடிய எப்பேர்ப்பட்ட, எந்த தோஷமாக இருந்தாலும் அது தங்கத்தை விட்டு காணாமல் போய்விடும். தங்கம் மேலும் மேலும் சேரும். அந்த தங்க நகை அடகு கடைக்கு போக வாய்ப்பே இல்லை. உங்கள் வீட்டில் ஒரு வெள்ளிக்கொலுசு இருந்தால் கூட, சிறிய தங்க மூக்குத்தி இருந்தால் கூட, அதற்கு இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.