நடிகர் லிவிங்ஸ்டன் மகளா இது? பூஜா ஹெக்டேவுக்கே டஃப் கொடுக்கும் அரபிக் குத்து ஆட்டம்.!

தமிழ் சினிமாவில் 1982ல் பாக்யராஜ் நடிப்பில் வெளியான டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற படத்தின் மூலம் சிறு கதாபாத்திரம் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் நடிகர் லிவிங்ஸ்டன். இதனை அடுத்து ஒருசில படங்களில் சிறு ரோலில் நடித்து பின் சுந்தர புருஷன், சொல்லாமலே போன்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார். அதன்பின் கேப்டன் பிரபாகரன்,வாய்க்கொழுப்பு, வாலி, ஜாலி உள்ளிட்ட படங்களிலும் குணச்சித்திர வேடங்கள் உட்பட தமிழில் நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

அவருக்கு அடுத்து தன் மகள் ஜோவிதாவை சின்னத்திரை சீரியலிலும் நடிக்க வைத்து அறிமுகம் செய்து வைத்துள்ளார். பூவே உனக்காக என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வரும் ஜோவிதா சமீபத்தில் மேற்படிப்பாக செல்லவிருப்பதால் சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

இதன்பின் எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை ஈர்த்து வருவார். அந்தவகையில், பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து பாடலுக்கு பூஜே ஹெக்டே போல குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

By admin