நம்ம வீட்டு சமையலறையில் இருக்கும் இந்த ஒரு பொருளே போதும் !! பூக்கவே பூக்கா இருக்க ரோஜா செடியில் கூட கொத்துக்கொத்தா பூ பூக்கும் !!

பூக்கவே பூக்காது என்று வெச்சுருக்க உங்க வீட்டு ரோஜா செடிக்கு, இந்த தண்ணீரை ஸ்பிரே செய்யலாம். அல்லது ரோஜா செடியில் பூ பூக்கிறது. ஆனால், அந்த மொட்டுக்களில், பூச்சு அரிப்பதால், பூக்கள் செழிப்பாக பெரியதாக வளருவதில்லை, இப்படிப்பட்ட பிரச்சனை உள்ளவர்களும் இந்த குறிப்பை பயன்படுத்தலாம். கட்டாயமாக எந்த வகை ரோஜா பூ செடிகளாக இருந்தாலும், காய்கறி செடியாக இருந்தாலும், அதில் பூ வைத்து, காய் காய்த்து அதிகப்படியான மகசூலைப் பெறுவதற்கு இந்த குறிப்பு உங்களுக்கு மிகமிக உபயோகமானதாக இருக்கும். இதில் பெரிய விஷயம் ஒன்றுமில்லை. நம் வீட்டில் சமையலறையில், சமையலுக்காக பயன்படுத்தும் பெருங்காயத்தை வைத்துதான் செடிகளை செழிப்பாக வளரச் செய்ய போகின்றோம்.

நம் வீட்டில் இருக்கும் செடிகள் பூக்காமல் இருப்பதற்கு, பூச்சிகள் பிரச்சனையும் ஒரு காரணம் தான். அந்த பூச்சிகளை உங்களுடைய செடியில் இருந்து நிரந்தரமாக விரட்டியடிக்க இந்த டிப்ஸ் பயனுள்ளதாக அமையும்.சிறிய நெல்லிக்காய் அளவு பெருங்காய கட்டியை எடுத்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை தூள் பெருங்காயத்தை பயன்படுத்த வேண்டாம். பெருங்காய கட்டியை எடுத்து, சிறிய உரலில் போட்டு மைய நசுக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு லிட்டர் அளவு தண்ணீரில், இந்த பெருங்காயத்தைப் போட்டு கரைத்து விட்டீர்கள் என்றால் 1/2 மணி நேரத்தில் தண்ணீரில், பெருங்காயத் துகள்கள் நன்றாக கரைந்துவிடும். அதன் பின்பு அந்த தண்ணீரை நன்றாக வடிகட்டி விட்டு, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, உங்கள் செடிகளுக்கு முழுவதுமாக, இலைகள், பூக்கள், தண்டுகள், வேர்கள், எல்லா இடத்திலும் படும்படி அடிக்கலாம்.

இதன் மூலம் பூக்கவே பூக்காமல் இருக்கக்கூடிய செடிகளும் கூடியவரையில் பூ பூக்க ஆரம்பிக்கும். உங்களுடைய வீட்டில் காய்கறி செடிகள் இருந்தால், அதில் சில பேரது வீட்டு காய்கறி செடிகளில், பெண் பூக்கள் போகவே பூக்காது. வெறும் ஆண் பூக்கள் மட்டுமே பூக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில், பெண் பூக்கள் பூக்க இந்த ஸ்பிரே மிகவும் உதவியாக இருக்கும். வாரத்திற்கு ஒருநாள் இந்த ஸ்பிரேவை அடிக்கலாம். ஒரு மாதத்திற்குள் உங்கள் செடிகள் செழிப்பாக வளருவதை உங்களால் காண முடியும். தேவைப்பட்டால் இந்த பெருங்காயம் கலந்த தண்ணீரை, ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் ஊற்றி, அதனுடன் எலுமிச்சை பழ தோல் இரண்டு துண்டுகளை போட்டு, 1/2 கப் தயிரை ஊற்றி, அந்த டப்பாவை, ஒரு மூடி போட்டு, மூடி வைத்துவிடுங்கள்.

மூன்று நாட்கள் இந்த தண்ணீர் நன்றாக புளிக்க விட வேண்டும். தினம்தோறும் அந்த டப்பாவை எடுத்து மூடியை திறக்காமல், இரண்டிலிருந்து மூன்று முறை குலுக்கி வையுங்கள். அதன் பின்பாக ஒரு வெள்ளைத்துணியில் இந்த தண்ணீரை வடிகட்டி, 1/2 கப் அளவு நுண்ணுயிர் சத்து நிறைந்த தண்ணீரோடு, 1 கப் அளவு நல்ல தண்ணீரை கலந்து, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, கூட செடிகளுக்கு ஸ்பிரே செய்து வரலாம். இதன் மூலம் செடிகளுக்கு அதிகப்படியான நுண்ணுயிர் சத்து கிடைக்கும். இப்படி புளிக்க வைத்த தண்ணீரை ஊற்றும் போது, மாதத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினால் போதும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.