நம் வீட்டில் தீய சக்தீகள் பெருக இதெல்லாம் தான் காரணம் !! அவற்றை நீக்க இதை செய்ய தெரிஞ்சிக்கோங்க ??

உங்கள் வீட்டில் சதா சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறதா? கணவன் மனைவிக்கு இடையே சண்டை, மருமகளுக்கு மாமியார், நாத்தனார்களுக்கும் சண்டை என்று ஏதாவது ஒரு பஞ்சாயத்து என்று நிம்மதி இல்லாமல் குடும்பம் போய் கொண்டிருக்கிறதா? அப்படி என்றால் உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகமாக இருக்கிறது என்று தான் அர்த்தம். வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் ஏற்பட என்ன காரணம்? அதை நீக்குவதற்கு என்ன செய்யலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வீட்டில் எதிர்மறை ஆற்றல் குடி கொண்டிருந்தால் அங்கு தடைபடுவது முதலில் பணமாக தான் இருக்கும். தொழில், வியாபாரத்தில் படுமோசமான நிலைக்கு தள்ளப்படுவோம். வேலை வாய்ப்புகள் இழக்க நேரிடும். வருமானம் குறையும்.

நினைத்ததை வாங்க முடியாத சூழ்நிலையில் தவித்துக் கொண்டு இருப்போம். வீட்டில் சண்டை, சச்சரவுகள் தொடர்ந்து ஏற்படும். இதற்கு முக்கிய காரணம் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் நிரம்பி உள்ளது தான். இப்படி வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்க என்ன காரணம் தெரியுமா? எங்கெல்லாம் பழைய பொருட்கள் அதிகம் சேர்ந்து தூசு, துரும்பு காணப்படுகிறதோ! அங்கெல்லாம் சனி பகவான் ஆட்சி செய்கிறார் என்பது ஜோதிட விதி. அது போல் நம் வீட்டில் எந்த இடத்தில் எல்லாம் புதிய பொருட்கள் பளபள என்று கண்களை கவரும் விதமாகவும், கண்ணாடி பொருட்களும் இருக்கிறதோ அங்கெல்லாம் சுக்கிர பகவான் ஆட்சி செய்கிறார் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் இருக்கும் குறிப்புகள். ஆணோ, பெண்ணோ ஒரு வீட்டில் எப்போதும் சுத்தமாக தன்னையும், தன் வீட்டையும் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். ஒரு சிலர் இரண்டு நாளுக்கு ஒருமுறை குளிப்பார்கள். இதெல்லாம் தரித்திரத்தை உண்டாக்கும்.

மிக மோசமான சூழ்நிலையில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு இருக்கும் பொழுது கூட நாம் குளிக்காமல் இருந்துவிடக் கூடாது. சுடுதண்ணீர் வைத்து சுத்தமான துணியால் உடம்பை துடைத்து எடுத்து விடவாவது செய்து விட வேண்டும். அது போல் வீட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தினமும் துடைப்பத்தை போட வேண்டும். ஒரு சிலர் பொருட்கள் இருக்கும் இடங்களை விட்டு விட்டு மற்ற இடங்களை மட்டும் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து விடுவார்கள். இவ்வாறு செய்வது மிகவும் தவறான செயலாகும். எந்த பொருட்களுக்கு அடியிலும் தேவையற்ற மற்ற பொருட்களை அடுக்கி குவித்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு முறை வீட்டை பெருக்கும் பொழுதும் அந்த பொருட்களுக்கு அடியிலும் ஒரு முறை பெருகி சுத்தமாகக் கூட்டிவிடுவது லட்சுமி கடாட்சத்தை நிலைக்கச் செய்யும்.

அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும். ஒரு சிலர் தலைவாறும் சீப்பு கூட சுத்தம் செய்யாமல் போட்டு வைத்திருப்பார்கள். இதெல்லாம் வீட்டில் தரித்திரத்தை உண்டாக்க வல்லது. வீட்டில் நின்று கொண்டு தலைவாரக் கூடாது வாசலுக்கு வெளியே சென்று தலையை வாரி விட்டு தான் உள்ளே வர வேண்டும். வீட்டிற்கு உள்ளேயே தலை வருவதால் அந்த தலைமுடி வீட்டை சுற்றிக் கொண்டிருக்கும் இதுவும் எதிர்மறை ஆற்றல் பெருக ஒரு காரணம் தான். வீட்டில் தேவையில்லாமல் இருக்கும் குப்பைகளை அவ்வப்போது அகற்றி விடுவது நல்லது. சில வீடுகளுக்கு பக்கத்தில் காலியிடங்கள் இருக்கும். காலியாக தானே இருக்கிறது? என்று குப்பைகளை கண்டபடி தூக்கி வீசுவார்கள். உங்கள் வீட்டிற்கு வரும் மகாலட்சுமியின் கண்களில் இந்த குப்பைகள் தென்பட்டால் நிச்சயம் வந்த வழியே சென்று விடுவாள். குப்பைகளை ஓரிடத்தில் போட்டு அதை தினமும் கொளுத்தி விடுவது தான் நல்ல செயலாகும்.