நல்லா இருந்த வாழ்கை திடீர்னு ஒண்ணுமே இல்லாம போயிருச்சா ?? உடனடியாக உங்களது பண பிரச்சனையை தீர்க்கும் சக்தி இந்த 2 இரண்டு வார்த்தைக்கு உண்டு !!

திடீரென்று நடக்கக் கூடிய எதிர்பாராத சம்பவங்கள் நம்முடைய வாழ்க்கையை சில சமயங்களில் புரட்டிப் போட்டுவிடும். அந்த வகையில், சில பேர் கொடிக்கட்டி வாழ்ந்திருப்பார்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் அளவிற்கு மனமும் அவர்களிடத்தில் இருந்திருக்கும். பணமும் அவர்களிடத்தில் இருந்திருக்கும். திடீரென்று ஏதோ ஒரு சூனியம் வைத்தது போல, எல்லா சொத்து சுகங்களையும் இழந்து வீதிக்கு வர கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கும். சிலபேருக்கு தொழிலில் எதிர்பாராத நஷ்டம் ஏற்பட்டு, கடன் பிரச்சனையில் சிக்கிக் கொள்வார்கள். நிலம், வீடு, சொத்து நகை எல்லாவற்றையும் அடமானம் வைத்து, விற்று கூட தங்களுடைய கடன் பிரச்சினையை சமாளிக்க முடியாத அளவிற்கு திணறி விடுவார்கள். விதி! யார் யாருக்கு என்னவெல்லாம் தலையில் எழுதி வைக்கப்பட்டு இருக்கிறதோ, அதை அனுபவித்து தானே ஆக வேண்டும்.

இருப்பினும் நமக்கு ஏற்படக்கூடிய எதிர்பாராத பண கஷ்டத்தை உடனடியாக தீர்ப்பதற்கு, சாஸ்திரத்தில் சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு சிறந்த, சக்தி வாய்ந்த குறிப்பை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுடைய ஜாதக கட்டத்தில் எப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலை இருந்தாலும், இந்த பரிகாரத்தை செய்யும் போது, வரக்கூடிய கஷ்டங்கள் கட்டாயம் குறையும் என்பதில் சந்தேகமே கிடையாது. மகாலக்ஷ்மியை மனதார வேண்டிக்கொண்டு, இந்த பரிகாரத்தை செய்ய தொடங்குங்கள் வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்தாலும் சரி, அப்படி இல்லை உங்களுக்கு பிரச்சனை அதிகமாக இருக்கின்றது எனும் பட்சத்தில் தினம் தோறும் காலை பிரம்ம முகூர்த்தத்தில் இந்த பரிகாரத்தை செய்தால் நல்லது தான்.

சிறிதளவு குங்குமத்தை ஒரு கிண்ணத்தில் எடுத்து கொஞ்சம் பன்னீர் விட்டு குழைத்து கொள்ளுங்கள். ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்து நான்கு பக்கங்களிலும் மஞ்சள் தடவிக் கொண்டு, இந்த குங்குமத்தை உங்களுடைய வலது கை மோதிர விரலால் தொட்டு அந்த காகிதத்தில் ‘ஸ்ரீம்’ என்று எழுதவேண்டும். இந்த ‘ஸ்ரீம்’ என்ற வார்த்தை மகாலட்சுமியை குறிக்கின்றது. ஒருமுறை குங்குமத்தால் அந்த பேப்பரில் எழுதி மகா லட்சுமி தாயாரின் முன்பு வைத்துவிட்டு ஒரு நோட்டு ஒரு பேனாவை எடுத்து ‘ஸ்ரீம்’ என்று தினம்தோறும் 108 முறை எழுதி வர வேண்டும். இந்த பரிகாரத்தை உங்களது பூஜை அறையில் அமர்ந்து செய்யலாம். மகாலட்சுமிக்கு வாசனை நிறைந்த பூக்களை அலங்காரம் செய்து விட்டு முடிந்தால் வெள்ளை நிறத்தில், ஏலக்காய் சேர்த்த பாயசத்தை நைவேத்தியமாக படைப்பது மிகவும் நல்லது.

சேட்டுகள் என்று சொல்லப்படும் வடமாநிலத்தவர்கள் மகாலட்சுமிக்கு வெள்ளை நிற பாயாசத்தை நிவேதனமாக படைப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. அவர்களில் பலபேர் பணக்கார யோகம் பெறுவதற்கு இதுவும் ஒரு காரணம். நீங்கள் கணக்கு எழுதி வைக்கும் நோட்டுப் புத்தகம், கல்லாப் பெட்டி, பீரோ, இப்படி எல்லா இடத்திலும் பன்னீரில் கரைத்த குங்குமத்தை தொட்டு, ‘ஸ்ரீம்’ என்று எழுதி வைப்பது அதிகப்படியான லாபத்தை கொண்டு வந்து சேர்க்கும். ஸ்ரீம் என்ற வார்த்தைக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி அதிகமாகவே உள்ளது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஸ்ரீம் என்று எழுதிய காகிதங்களை எல்லாம், ஒரு நூலில் மாலையாக கட்டி ஏதாவது ஒரு கோயிலில் உள்ள மரத்தில் மாட்டி வைத்து விடலாம், தவறொன்றும் கிடையாது. இப்படியாகத் தொடர்ந்து உங்களது பூஜை அறையில் ‘ஸ்ரீம்’ என்ற வார்த்தையை எழுதி, இழுந்த சொத்துக்களையும், பணத்தையும் திரும்பவும் விரைவாக மீட்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.