நஷ்டம், கஷ்டம் என்ற வார்த்தைக்கே உங்கள் வீட்டில் இடம் இருக்காது உருளியில் இந்த பொருளை இப்படி வைத்தால் அந்த மகாலட்சுமியே வந்து, உருளியில் அமர்ந்து விடுவாள் !!

உங்களுடைய வீட்டில் வருமானத்திற்கு எந்த குறையும் இல்லை. ஆனால் கைக்கு வருகின்ற பணம் சேமிப்பில் தங்கவில்லை. ஏதாவது ஒரு வகையில் வீண் விரயமாகிக் கொண்டே இருக்கின்றது. நஷ்டம் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது என்றால், என்ன செய்வது. இதேபோல் நன்றாக நடந்து கொண்டிருக்கின்ற வியாபாரம் திடீரென்று யார் கண் பட்டதோ முடக்கமாகி, நஷ்டமாகி விட்டது. இப்படியாகப் பல வகையில் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது என்றால், சுலபமான முறையில், மகாலட்சுமியை நிரந்தரமாக நம் வீட்டில் தங்க வைக்க, இந்த ஒரு பரிகாரத்தை செய்து பாருங்கள். இந்த பரிகாரத்தை உங்களுடைய வீட்டிலும் செய்யலாம். உங்களது அலுவலகம், தொழில் செய்யும் இடம், கடை, எதில் வேண்டுமென்றாலும் செய்யலாம் தவறில்லை. நிச்சயம் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம், ஏதாவது ஒரு வகையில் வித்தியாசத்தை உங்களால் உணர முடியும். இது ஒரு சுலபமான வழி தான். நம்பிக்கையோடு உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும், செய்து பார்த்து பலன் அடையலாம்.

நம் எல்லோரது வீட்டிலும் இப்போதெல்லாம் அழகுக்காக, லட்சுமி கடாட்சம்திற்காக வைக்கப்படும் ஒரு பொருள் உருளி.இந்த உருளியில் சுத்தமான தண்ணீரை ஊற்றி, மேலே புஷ்பங்களை மிதக்க விட்டு, வீட்டின் வரவேற்பறையில் வைத்தால் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும் என்று சொல்லுவார்கள். அந்த உருளியில் நாம் மகாலட்சுமிக்கு பிடித்தமான ஒரு பொருளை சேர்க்கப் போகிறோம். அது என்ன பொருள் எப்படி சேர்க்க வேண்டும் என்பதை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு வெற்றிகளைத் தரும் வெட்டிவேர் தான் அது. வெட்டிவேரை வாங்கி மகாலட்சுமி பாதங்களில் வைத்து, தீபம் ஏற்றிவைத்து, மனதார வேண்டிக்கொண்டு, தொழிலில் நல்ல லாபம் கிடைக்க வேண்டும். வருமானம் அதிகரிக்க வேண்டும். அந்த வருமானம் கையில் நிலைத்திருக்க வேண்டும், என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பின்பாக அந்த வெட்டி வேரை எடுத்து உருளியில் இருக்கும் தண்ணீரில் போட்டு அதன் மேல் பூக்தளை மிதக்க விட வேண்டும்.

உங்களுக்கு தாமரைப் பூ கிடைக்கும் என்றால், அந்த வெட்டி வேரின் மேல், தாமரைப் பூவை வைப்பது, எதிர்பாராத யோகத்தை கொடுக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. காரணம், வெட்டிவேரின் மேல் உள்ள தாமரையில், மகாலட்சுமி தேவியே வந்து அமர்வார்கள் என்பது ஐதீகம். தாமரைப்பூ கிடைக்கவில்லை என்றால், மற்ற வாசனை நிறைந்த பூக்களை மிதக்க விடலாம். தினம்தோறும் தண்ணீரையும் பூவையும் மாற்றிவிடலாம். தாமரைப்பூவாக இருந்தால், எளிதில் வாடாது. ஆகவே, அந்த தாமரைப் பூவை இரண்டு, மூன்று நாட்களுக்கும் வைத்துக் கொள்ளலாம். தண்ணீரில் இருக்கும் வெட்டிவேர் அப்படியேதான் இருக்கும். மாதத்திற்கு ஒரு முறை அந்த வேரை மாற்றினால் மட்டுமே போதுமானது. இவ்வாறாக தொடர்ந்து உங்களுடைய உருளியில் கொஞ்சம் வெட்டி வேர், போட்டு வைத்து தான் பாருங்களேன், வாழ்க்கையில் வித்தியாசம் தெரிந்தால் இதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மன நிறைவு ஏற்படவில்லை என்றால் விட்டு விடுவதில் தவறொன்றும் கிடையாது. இந்த உருளியை உங்களது வீட்டின் கன்னி மூலையில் வைப்பது மிகவும் சிறப்பானது. அதாவது, உங்களது வீட்டின் தென்மேற்குப் பகுதியில் இந்த உறுளியை ஒரு டேபிளின் மீது வைத்துக் கொள்ளலாம், கால் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டின் படுக்கை அறை கன்னி மூலையில் அமைந்திருந்தால், அந்த படுக்கை அறையில் பீரோவை வைத்திருந்தால், அந்த பீரோ கண்ணாடியை பார்த்து, தலைவாருவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் தரித்திரம் உண்டாக இதுவும் ஒரு காரணமாக சொல்லப்பட்டுள்ளது.