நான் அனாதை ஆகிவிட்டேன்…? ஷிவானியிடம் கதறி அழுத பாலாஜி…

விஜய் தொலைக்காட்சியில் கோலாகலமாக நடந்து முடிந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி அதில் மிகவும் பிரபலமான கன்டஸ்டன்ட்ஸ் ஆரி பாலாஜி ரியோ ஷிவானி அர்ச்சனா போன்றவர்கள் இந்நிலையில் பாலாஜியின் தந்தை திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்தது பிக் பாஸ் போட்டியாளர் களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது

பாலாஜியின் அண்ணன் ரமேஷ் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் RIP DAD என பதிவிட்டிருந்தார் அதே மாதிரி பாலாஜி முருகதாசும் இதுவும் கடந்து போகும் என்று உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார் அவரோட அப்பா இறுதி ஊர்வலத்தில் பாலாஜி முருகதாஸ் அழுகிற மாதிரியான போட்டோ ஒன்னு இப்ப வைரலாகி வருகிறது.

இதைத்தொடர்ந்து பாலாஜி ரசிகர்கள் ஆறுதலையும் இரங்கல் களையும் தெரிவித்து வந்துகிட்டு இருக்காங்க பிக்பாஸ் வீட்டிலேயே பாலாஜி தனது அப்பா அம்மா பத்தி சொல்லும்போது பல பேர் கண்கலங்கி அழுதார்கள் என்றே சொல்லலாம் அந்த அளவுக்கு பல துயரங்களை சந்தித்து இருக்காரு பாலாஜி.

அவங்க அம்மா இறந்து போன நிலையில் இப்ப அவரோட அப்பாவும் இருந்து போயிருக்காரு என்பது மிகவும் வருத்தத்திற்குரியது தற்போது பிக்பாஸில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பாலாஜி வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறி வருகிறார்கள் அதில் ஷிவானி சென்று ஆறுதல் கூறும் போது நான் அனாதை ஆகிவிட்டேன் என்று பாலாஜி கதறி அழுததாக தகவல் வெளியாகி உள்ளது.