நான் பவர் ஹிட்டர் இல்லாதான். ஆனா இவங்க 2 பேரை பார்த்து கற்றுக்கொள்வேன் – புஜாரா நம்பிக்கை !!

புஜாரா என்றாலே டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் தான் சரியான வீரர் என்கிற பிம்பம் பல வருடங்களாக இருந்து வந்தது. புஜாராவால் அதிரடியாக ஆட முடியாது, அவரால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பவர் ஷாட்டுகளை அடித்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இயலாது என்று சில ஆண்டுகளாக கூறப்பட்டு வந்தது. இதன் காரணமாகவே,கடந்த சில ஐபிஎல் தொடர்களில் எந்த அணியும் அவரை எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் இம்முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பூஜாராவை 50 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆட உள்ள புஜாரா தற்போது வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ வைரலாக பரவியது அதில் புஜாரா பந்தை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார் என்னால் டி20 போட்டியில் அதிரடியாக ஆட முடியாது ஆனால் டைமிங்கில் அதை நான் சரி செய்வேன்.

என்றும் டி20 போட்டியில் மிகச் சரியான விதத்தில் விளையாடினால் அணிக்கு தேவையான ரன்களை எடுக்க முடியும் எனவும் அதற்கு எடுத்துக்காட்டு கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் அவர்களிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்வேன் எனவும் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் நான் பார்த்திருக்கிறேன் அவர்களைப் போல் பந்தை எந்த டைமிங்கில் ஆட வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்கிறேன் அதனால் டி20 போட்டியிலும் என்னால் சிறந்த முறையில் விளையாட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் புஜாரா.