நாம் சாகப் போவதை முன்கூட்டியே சில அறிகுறிகள் நமக்கு சொல்லுமாம் !! அப்படி சில அறிகுறிகளும் அதன் பலனும் !!

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் என்றாவது ஒரு நாள் இறந்து தான் ஆக வேண்டும். இது இறைவன் வகுத்த நியதி. புராண நூல்கள் மனிதன் இறப்பதை எவ்வாறு உணர்வான்? என்பதை சில குறிப்புகளாக கூறுகின்றன. இது உண்மையோ? பொய்யோ? ஆனால் கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். ஒரு சில அறிகுறிகளை வைத்தே நாம் இன்னும் எத்தனை நாட்களில் இறக்க இருக்கிறோம்? என்பதை தெரிந்து கொள்ள முடியுமாம். வாருங்கள் அதைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம். 1. வானில் துருவ நட்சத்திரமும், சுக்கிரனும் நம் கண்ணுக்கு தெரியாத பொழுது அதிலிருந்து ஒரு ஆண்டுக்குள் மரணம் சம்பவிக்குமாம்.2. வேறு எந்த கிரகங்களும் இல்லாமல் வானில் தனியாக சூரியன் மட்டும் தெரிந்தால் அல்லது கிரகணம் இன்றி சூரிய கிரகணம் போல் கண்களுக்கு தெரிந்தால் அன்றிலிருந்து 11 மாதத்திற்குள் நம்முடைய மரணம் நிகழுமாம்.

3. மல ஜலங்கள் நம்முடைய கனவில் ஸ்வர்ணம் அதாவது தங்கங்கள் போன்று நாம் பார்க்க நேர்ந்து விட்டால் அன்றைய நாளில் இருந்து சரியாக பத்து மாதத்தில் நாம் இறக்க நேரிடும் என்கிறது. 4. நம்முடைய கனவில் பூதம், பிணம், தங்கம் போன்று ஜொலிக்கும் மரங்கள் அல்லது நாம் யாசகம் கேட்பது போன்றோ தெரிந்தால் அன்றைய நாளில் இருந்து சரியாக ஒன்பது மாதத்தில் நம்முடைய மரணம் நிகழுமாம். 5. குண்டாக இருப்பவர்கள் திடீரென சில நாட்களிலேயே உடல் இளைத்து விட்டாலும், ஒல்லியாக இருப்பவர்கள் அதேபோல் திடீரென சில நாட்களிலேயே பருமனாக மாறிவிட்டாலும் அவர்கள் எட்டு மாதங்களுக்குள் இறந்து விடுவார்களாம். 6. நம்முடைய கனவில் அல்லது விழித்த நிலையிலேயே நம்முடைய கால் சேற்றில் மாட்டிக் கொண்டு பாதி அளவு கால் வெளியே தெரியுமாறு தோன்றினால் அந்த நாளிலிருந்து 7 மாதத்திற்குள் நம்முடைய மரணம் சம்பவிக்கும்.

7. நிஜத்தில் அல்லது கனவிலோ நம்முடைய தலையில் காகம், கழுகு இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று அமர்வது போன்று தோன்றினாலும், உண்மையில் அமர்ந்தாலும் 6 மாதத்திற்குள் நாம் இறக்க நேரிடும் என்கிறது. 8. அதே போல் காகம் அல்லது குருவி போன்றவை நம்முடைய தலை மேல் விழுந்து விட்டாலோ, அது போல் கனவு வந்தாலோ ஐந்து மாதத்திற்குள் நம்முடைய மரணம் சம்பவிக்குமாம். 9. நம்முடைய நிழல் நம்மை போன்று இல்லாமல், வேறு ஒன்றாக நமக்கு திடீரென தோன்றி விட்டால் நான்கு மாதத்திற்குள் இறந்து விடுவோம். 10. விண்ணில் மேகம் இல்லாமல் மின்னல் தோன்றியதை நாம் பார்க்க நேர்ந்தாலும், இரவு நேரத்தில் வானவில் திடீரென தோன்றினாலும், இது நிஜத்தில் அல்லது கனவில் நடந்தாலும் மூன்று மாதத்திற்குள் நாம் இறந்து விடுவோம். 11. நீரில் நம்முடைய பிம்பத்தை பார்க்கும் பொழுது அதில் முகம் தெரியவில்லை என்றால் ஒரே மாதத்தில் நாம் இறந்து விடுவோம் அது போன்று கண்ணாடியிலும் தலையில்லாத பிம்பம் தெரிந்தால் மரணம் சம்பவிக்கும். 12. நம்முடைய உடலில் திடீரென பிணத்தின் வாடை அடித்தால் 15 நாட்களில் நாம் இறக்க நேரிடுமாம்.

13. குளித்து முடித்தவுடன் நம்முடைய உடல் சட்டென உலர்ந்து விட்டாலும், தண்ணீர் குடிக்கும் பொழுது உடனே நாக்கு உலர்ந்து போதலும் மரணத்தின் அறிகுறியே! இவ்வாறு நமக்கு நிகழ்ந்தால் 10 நாட்களில் மரணம் நிகழுமாம். 14. காதை மூடிக் கொண்டால் எப்போதும் ஒரு வித சத்தம் நமக்கு கேட்கும் அல்லவா? அவ்வாறு இல்லாமல் காதை மூடிக் கொள்ளும் பொழுது எந்த சத்தமும் கேட்காமல் நிசப்தமாக இருந்தால் விரைவில் மரணம் நிகழுமாம். இவையெல்லாம் நாம் கவனித்து பார்த்திருக்கிறோமா? என்று தெரியாது. இதெல்லாம் ஒருவருக்கு எப்போதும் நிகழ்வதில்லை. திடீரென நமக்கு நிகழும் பொழுது நம்மை அறியாமல் நமக்கு உள்ளுணர்வில் ஒரு பதற்றம் உண்டாகும். உதாரணத்திற்கு அவசரமாக வெளியே கிளம்பும் பொழுது கால் அல்லது தலை தட்டிவிட்டால் உடனே சிறிது நேரம் அமர்ந்து, தண்ணீர் குடித்து விட்டு செல்லுமாறு நம் முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். இதனால் நமக்கு ஆபத்து வருமா என்பது தெரியாது? ஆனால் சிறிது நேரம் அமர்ந்து விட்டு செல்வதால் நம்முடைய மனதில் கெட்ட அதிர்வலைகள் உண்டாகாமல் இருக்கும். அது போல் உள்ளது மேற்கூறிய இந்த விஷயங்களும். நடக்கும்! நடக்காது! என்பதை விட இது போன்று உங்களுக்கு நிகழ்ந்தால் சற்று எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள் அவ்வளவு தான்.