நினைத்தது உடனே பலிக்க வெள்ளிக்கிழமையில் இந்த கயிற்றை மட்டும் வேண்டி கையில் கட்டிக் கொள்ளுங்கள் போதும் !!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவுகளும், ஆசைகளும் இருக்கும். இதெல்லாம் நடந்தால் நன்றாக இருக்கும் என்று மனதில் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். அது போன்ற விஷயங்களுக்கு சக்தி வாய்ந்த பரிகாரமாக இந்த பரிகாரம் அமையும். இதை பரிகாரம் என்று கூட சொல்ல முடியாது. சக்தி வாய்ந்த இந்த கயிற்றை கையில் கட்டிக் கொள்வதால் நினைத்தது அப்படியே பலிக்கும் என்பது ஐதீகம். இந்த கயிற்றை வெள்ளிக்கிழமையில் பூஜை அறையில் வைத்து முறையாக மந்திரம் உச்சரித்து கைகளில் கட்டிக்கொள்ள வேண்டும். இதை நமக்கு நாமே வீட்டிலேயே எளிதாக செய்து கொள்ள முடியும். அதை எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

கைகளில் கயிறு கட்டிக் கொள்ளும் அளவிற்கு வெள்ளை நூல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இத்தனை இழைகள் இருக்க வேண்டும் என்கிற எண்ணிக்கை எல்லாம் இல்லை. ஒற்றையாக இல்லாமல் சற்று தடிமனாக இருக்கும் வகையில் எடுத்துக் கொள்ளுங்கள். அதை வியாழக்கிழமை அன்று இரவே ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள் போட்டு குழைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கயிறை அதில் தோய்த்து வைத்து கொள்ளுங்கள். மறு நாள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழ வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீங்கள் சொல்லும் மந்திரங்கள் எளிதாக கிரகிக்கும் ஆற்றல் பிரபஞ்சம் முழுவதும் இருக்கும். அதனால் தான் பிரம்ம முகூர்த்த வேளையில் தினமும் எழுந்து பூஜைகள் செய்ய சொல்லப்படுகிறது. பிரம்ம முகூர்த்த வேளையில் நீங்கள் செய்யும் எல்லா காரியமும் வெற்றியுடன் முடியும்.

ஒரு நாள் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து கொள்வது ஒன்றும் அவ்வளவு கஷ்டமான காரியமல்ல. எழுந்து சுத்தமாக குளித்து முடித்து பூஜை அறையில் அமர்ந்து கொண்டு அந்த நூலை எடுத்து இடையிடையே விட்டு ஒன்பது முடிச்சுகள் போட்டு கொள்ள வேண்டும். ஒவ்வொரு முடிச்சு போடும் பொழுதும் கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். ஒன்பது முடிச்சுகள் போட்ட பின்பு உங்களின் நியாமான ஆசைகளையும், வேண்டுதல்களையும் இறைவன் முன் இரு கைகூப்பி வைக்க வேண்டும். மந்திரம்: நவக்ரஹ ஸ்வரூப ஸதா சுபமங்களகர க்ரஹ! ஸ்வரூபகம் கணபதயே நம! அதன் பின் அந்த கயிற்றை உங்களுடைய வலது கையில் கட்டிக் கொள்ள வேண்டும். இந்த கயிறு உங்களிடம் இருக்கும் வரை நீங்கள் நியாயமாக நினைக்கும் எந்த விஷயமும் அப்படியே பலிதமாகும்.

அதற்காக எதிர்மறையாக நீங்கள் எதையும் சிந்திக்க கூடாது. யாருக்கும் எந்த கெடுதலும் விளைவிக்காத எல்லா வேண்டுதல்களும் நிச்சயம் 100% பலிக்கும் என்பது நம்பிக்கை. அது தான் இந்த பரிகாரத்தின் மிகப்பெரிய சூட்சமம். இந்த கயிற்றின் சக்தியானது 48 நாட்கள் வரை இருக்கும். அதன் பின்பு குறைய ஆரம்பித்து விடும். எனவே அதன்பின் மீண்டும் ஒரு வெள்ளிக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த வேளையில் பூஜை அறையில் இதே போல் செய்து கட்டிக் கொள்ளுங்கள். நீங்கள் போட்டிருக்கும் 9 முடிச்சுகளும் ஒன்பது கிரகங்களை குறிக்க வல்லது. நவகிரகங்கள் இன்றி ஒரு மனிதனுக்கு எதுவும் இந்த பிரபஞ்சத்தில் நடப்பதில்லை. நவ கிரகங்களின் ஆதிக்கமும், கணபதியின் ஆசீர்வாதத்தால் உங்களுடைய கைகளில் இந்த கையிறை கட்டிக் கொள்வதால் கட்டுப்படுகின்றன. உங்களுக்கு இருக்கும் நல்ல அதிர்வலைகளை இது ஈர்த்து தரும். உங்களுடைய வேண்டுதல்கள் நிச்சயம் பலிதமாகும். நம்பிக்கையுடன் செய்து பாருங்கள்.