நில வாசல்படியில் இந்த ஒரு பொருளை கட்டித் தொங்க விட்டாலே போதும் வீட்டில் சண்டை சச்சரவு வராது !! வீட்டில் தீராத கஷ்டம் இருந்து கொண்டே இருக்க, சண்டையும் ஒரு காரணம் !!

இந்த லோகத்தில் உயர்ந்தவர் தாழ்ந்தவர், நல்லவர் கெட்டவர், என்ற பாகுபாடெல்லாம் கிடையவே கிடையாது. கலிகாலத்தில் பணம் உள்ளவர், பணம் இல்லாதவர், இந்த இரண்டை மட்டும்தான் பார்த்து, இந்த உலகத்திலுள்ள மனிதர்கள் ஒருவரை வழி நடத்தி வருகின்றார்கள். ‘நீ பணம் உள்ளவனா, உனக்கு இந்த மரியாதை! நீ பணம் இல்லாதவனா உனக்கு இவ்வளவு தான் மரியாதை.’ இன்றைய சூழ்நிலை இப்படித்தான் ஓடிக் கொண்டிருக்கின்றது. இதனைத் தாண்டி மனிதநேயமும் மனிதாபிமானமும் ஒரு சிலரிடத்தில் மட்டும் உள்ளது என்பதையும் இந்த இடத்தில் நாம் நினைவுகூற வேண்டும். சரி, நம்முடைய வீட்டில் எப்போதுமே சண்டை சச்சரவு இருந்து கொண்டிருக்கின்றது என்றால், நம் வீட்டில் இருப்பவர்களுக்கே வெறுப்பு வந்துவிடும். எதற்காகத் தான் இந்த வீட்டில் வாழ்கின்றோமோ, என்று விரக்தி குணம் வந்துவிடும்.

வெளியே சென்ற கணவர், ‘இப்போது வீடு திரும்ப வேண்டுமா என்று யோசிப்பார்’ எப்படியும் வீட்டிற்குச் சென்றால் சண்டைதான் வரும் என்ற எண்ணத்தோடு வீட்டிற்குள் நுழைவார். தினசரி உங்கள் வீட்டில் பொழுது விடியும்போது சண்டை தொடங்கி விடுமா? பொழுது சாய்ந்து தூங்க செல்லும்வரை சண்டை ஓயவே ஓயாது? இப்படி இருக்கும் பட்சத்தில் மனிதர்களாலே அந்த வீட்டில் வாசம் செய்ய முடியாது. அப்படி இருக்க மகாலட்சுமியும் நிம்மதியும், சண்டை சச்சரவு உள்ள வீட்டில் எப்படி குடி கொள்ளும். இன்னிக்கே, இப்பவே இந்த முடிச்ச நில வாசப்படியில் கட்டி தொங்க விடுங்கள். ஒரு மஞ்சள் துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு சிறிய படிகார கல், பெரிய கோலி குண்டு சைஸில் இருந்தாலும் போதும்.

ஒரு சிறிய துண்டு வெட்டிவேர், நவதானியம் ஒரு கை பிடி அளவு, இந்த மூன்று பொருள்களையும் மஞ்சள் துணியில் ஒன்றாக வைத்து கட்டி, நில வாசப்படியில் தொங்க விட்டு விடுங்கள். இப்போதே இந்த பரிகாரத்தை செய்யலாம். வாரம் ஒருமுறை வியாழக்கிழமை அன்று, இந்த பொருட்களை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, அந்த மஞ்சள் துணியை துவைத்து உலர வைத்து, மீண்டும் இந்த மூன்று பொருட்களை புதியதாக வைத்து நில வாசப்படியில் கட்டி தொங்க விட்டு விடுங்கள். நிச்சயம் உங்கள் வீட்டில் நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கைதான் இருக்கும். இதோடு சேர்த்து உங்கள் வீட்டில் கட்டாயம் உருளியை வையுங்கள்.

சிறிய அளவிலான உருளியில், உதிரி புஷ்பங்கள்லோடு சேர்த்து, ஒரு சிறிய துண்டு வெட்டிவேரையும், நவதானியம் ஒரு கைப்பிடி அளவு, போட்டு, வரவேற்பறையில், கன்னி மூலையில் வைத்துவிட்டால், உங்கள் வீட்டிற்குள் நுழையும் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களின் ஆற்றல் உங்களை பாதிக்காமல் இருக்கும். உங்கள் வீட்டிலும் சந்தோஷம் நிம்மதி நிலை குலையாமல் இருக்கும். சதாகாலமும் சண்டை உள்ள வீட்டில் சாம்பிராணி தூபம் வாரத்திற்கு இருமுறை கட்டாயம் போட வேண்டும். அந்த சாம்பிராணி தூபத்தில், வில்வ இலை பொடி அல்லது துளசி இலை பொடியை சேர்த்து தூபத்தை போடுங்கள். எதிர்மறை ஆற்றல் கண்ணுக்கு தெரியாமல், காணாமல் போய்விடும். இந்த இரண்டு பொடிகளும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். சண்டே இல்லாத வீட்டில், காசு இல்லாத சூழ்நிலை இருந்தால், நிம்மதியான சூழல் நிலவும் பட்சத்தில், அந்த மகாலட்சுமி தானாக மனநிறைவோடு, நிரந்தரமாக வந்து அமர்ந்து விடுவாள் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.