நீங்கள் இப்படி சாப்பிடும் பழக்கம் உள்ளவரா கண்டிப்பாக உங்களுக்கு தரித்திரம் தான் வந்து சேரும் !! என்ன செய்தாலும் பிறகு பணம் சேராது !!

சாப்பிடுவதில் என்ன சாஸ்திரம் வேண்டியிருக்கு! என்று நாம் நொந்து கொள்ளலாம். ஆனால் சாப்பிடுவதிலும் சாஸ்திரம் நம்மள வச்சு செய்யுது அப்படின்னு தான் சொல்லணும். எது கிடைச்சாலும், எப்படி வேணா சாப்பிடலாம் என்கிற மனப்போக்கு உங்களுக்கு இருந்தால், நீங்கள் தான் இந்த பதிவை முதலில் படிக்க வேண்டும். செல்வம் சேர்வதற்கும் நாம் சாப்பிடுவதற்கும் என்ன சம்பந்தம்? என்று குழம்பிப் போகலாம். நிறைய சம்பந்தம் இருக்கிறது என்பது தான் உண்மை. நாம் எப்படி சாப்பிட வேண்டும்? எப்படி சாப்பிடக்கூடாது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். சாப்பிடும் பொழுது முதலில் வழித்து சாப்பிடக்கூடாது. ஒரு சிலர் சாப்பிடுவதை பார்க்கும் பொழுது மற்றவர்களுக்கு அருவருப்பாக இருக்கும். அந்த அளவிற்கு நாகரீகம் இல்லாமல் சாப்பிடுவார்கள். இலையைத் துடைத்து நன்கு வழித்து விரலில் ஒட்டி இருப்பதைக் கூட விட்டு வைக்காமல் சப்பி எடுத்து விடுவார்கள். இதுபோல் சாப்பிடுபவர்களுக்கு நிச்சயம் தரித்திரம் தான் உண்டாகும் என்கிறது சாஸ்திரம். சாப்பிடுவதற்கு நிறைய சாஸ்திரங்கள் உள்ளன.

பசிக்கும் பொழுது மட்டுமே சாப்பிட வேண்டும். அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் நோய் சேரும். இதனால் ஆயுள் நிச்சயம் குறையும். எனவே வயிறு முட்ட ஃபுல் கட்டு கட்ட கூடாது. கிழக்கு நோக்கி சாப்பிட்டால் ஆயுள் பெருகும். தெற்கு நோக்கி சாப்பிட்டால் புகழ் உண்டாகும். மேற்கு நோக்கியபடி சாப்பிட்டால் உங்களுக்கு செல்வ வளம் பெருகும். வடக்கு நோக்கி மட்டும் சாப்பிடவே கூடாது என்கிறது சாஸ்திரம். நாம் சாப்பிடும் உணவில் மிளகு, சீரகம் கட்டாயம் இருக்க வேண்டும். மிளகு உடலில் இருக்கும் விஷத்தை முறிக்கும். சீரகம் உடம்பை சீராக வைத்திருப்பதால் சீர் + அகம் = சீரகம் என்று பெயர் வந்ததாம். இது குளிர்ச்சியை தரும். அதுபோல் வெந்தயம் சேர்த்துக் கொள்ளலாம். இரவு ஊற வைத்த வெந்தயத்தை காலையில் அந்த தண்ணீருடன் சேர்த்து பருகினால் உடலில் இருக்கும் மொத்த உஷ்ணமும் சர்ரென நீங்கி, உடல் குளிர்ச்சி அடைந்து விடும். இதனால் அன்றைய நாள் முழுவதும் டென்ஷன் இல்லாமல், யார் மீதும் கோபப்படமால் நிம்மதியாக இருக்கலாம். இஞ்சி சேர்ப்பதால் பித்தம் நீங்கி தலை சுற்றல் உண்டாகாமல் தடுக்கும்.

கடுகு உடலின் உஷ்ணத்தை ஒரே அளவில் சீராக வைக்க உதவும். அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் எல்லாத்தையும் சொல்லியாச்சு என்று தானே பார்க்கிறீர்கள்! ஆமாம் அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் அனைத்தும் நமக்கு மருந்து தான். சாப்பிடுவதற்கு முன்பு கை, கால், வாய் முதலியவற்றை தண்ணீர் கொண்டு அலம்பிவிட்டு வந்து அமர வேண்டும். காலில் இருக்கும் ஈரப்பதம் உலர்வதற்குள் உணவை சாப்பிடத் துவங்கி விட வேண்டும். சாப்பிடும் பொழுது பேசக் கூடாது, படிக்கக்கூடாது, மொபைல் போன் நோண்ட கூடாது, இடது கையை கீழே ஊன்ற கூடாது. சாப்பிடும் பொழுது வீட்டின் கதவு மூடி தான் இருக்க வேண்டும். வாசலுக்கு நேரே திறந்து வைத்துவிட்டு உட்கார்ந்து சாப்பிட கூடாது. வெளியில் இருந்தாலும் செருப்பு அணிந்து கொண்டு சாப்பிடக்கூடாது. நின்று கொண்டு சாப்பிடக் கூடாது. அரட்டை அடித்துக் கொண்டே சாப்பிடக்கூடாது. சாப்பிடும் பொழுது சாப்பாட்டில் மட்டும்தான் கவனம் இருக்க வேண்டும். அவசர அவசரமாக சாப்பிடாமல் ஒவ்வொரு பருக்கைகளையும் நன்கு மென்று சாப்பிட வேண்டும். சூரியன் உதயமாகும் பொழுதும், அஸ்தமனத்தின் பொழுதும் சாப்பிடக்கூடாது. இதைத்தான் கண்ட கண்ட நேரத்தில் சாப்பிடக் கூடாது என்பார்கள்.

நிலாச் சோறு சாப்பிடுவது நல்லது தான் என்றாலும் அதை பவுர்ணமியன்று கூட்டமாக அமர்ந்து உண்ணலாமே தவிர மற்ற நேரங்களில் நிலவின் ஒளியில் உண்ணக் கூடாது என்கிறது சாஸ்திரம். சாப்பிடும் பொழுது கோபத்துடன் சாப்பிடக்கூடாது, நடுவில் எழுந்து எழுந்து போய் திரும்ப வந்து சாப்பிடக் கூடாது, இருட்டான இடங்களில், நம் நிழல் படும் இடங்களில் அமர்ந்து சாப்பிடக்கூடாது. அதுபோல் தட்டை கையில் மற்றும் மடியில் வைத்துக் கொண்டு சாப்பிட கூடாது. படுத்து கொண்டே சாப்பிடக் கூடாது. புரச இலையில் சாப்பிடுபவர்களுக்கு நல்ல புத்தி கூர்மை இருக்குமாம். வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் அழகும், அறிவும் அதிகரிக்குமாம். செம்பு, வெண்கலம் போன்ற பாத்திரங்களில் சமைக்கக்கூடாதாம். நாம் சாப்பிடும் தட்டுகளை தவிர நம்மை சுற்றி இருக்கும் மற்ற உணவு பதார்த்தங்கள் அனைத்தும் மூடி தான் இருக்க வேண்டுமாம். இரவு நேரத்தில் கீரை, தயிர், நெல்லிக்காய், பாகற்காய், இஞ்சி, கஞ்சி போன்ற உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது. சாப்பிடும் உணவை பரிமாறும் பொழுது முதலில் சாதத்தை பரிமாறக்கூடாது. வேறு காய்கறிகள் அல்லது அப்பளம் வைத்துவிட்டு தான் சாதம் பரிமாற வேண்டும். அதுபோல் முதலில் வத்தல் அல்லது கீரை வைக்கக்கூடாது. அசுப காரியங்களில் மட்டும் தான் அவற்றை முதலில் வைப்பார்கள். இதுபோல் சாப்பிடும் உணவு விஷயத்தை தெய்வீகமாக எடுத்துக்கொண்டு சாப்பிட்டால் தீர்காயுள் மற்றும் செல்வ வளம் உண்டாகும் என்கிறது சாஸ்திரம்.