நீங்கள் எப்போதும் பணப் பிரச்சனையில் சிக்காமல் இருக்க இதை இப்படி செய்யுங்கள் போதும் !! கோடி கோடியாய் பணம் சேரும் !!

பணத்திற்கு அதிபதியாக விளங்கும் குபேரர் மகாலட்சுமிக்கு இணையாக பார்க்கப்படுகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இப்போது அவரின் வழிபாடுகள் பெருகி வருகின்றன என்றே கூறலாம். மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள், கடைகள், நீங்கள் ஷாப்பிங் செய்யும் இடங்கள் போன்றவற்றில் முன்புறத்தில் குபேரன் சிலை நிறுவப்பட்டிருப்பதை நாம் நிறைய இடங்களில் காண முடிகிறது. அந்த அளவிற்கு குபேரரை பற்றிய ஆன்மீக உண்மைகள் இன்று பலருக்கும் தெரிந்து வருகிறது. பணம் அதிகம் கொழிக்கும் இடங்களில் குபேரர் நிச்சயம் இருப்பார். அவரை வணங்குபவர்களுக்கு பணத்தடை என்பது இருக்காது என்று கூறலாம். உங்களுக்கு எப்போதும் பணப் பிரச்சினை வரக்கூடாது என்று நினைத்தால் குபேர எந்திரத்தை தங்கம், வெள்ளி அல்லது ஐம்பொன் போன்ற உலோகங்களில் செய்து வைத்துக் கொள்ளலாம்.

தங்கம், வெள்ளி வாங்கும் அளவிற்கு உங்களிடம் போதிய வசதி இல்லை என்றால் ஐம்பொன் அல்லது செப்பு தகடுகளால் ஆன குபேரன் எந்திரத்தை வாங்கி வைத்துக் கொள்ளலாம். இதன் விலை குறைவாகத் தான் இருக்கும். ஆனால் உண்மையான குபேர எந்திரத்தை பார்த்து தேர்ந்தெடுத்து வாங்குவது மிகவும் முக்கியம். குபேர எந்திரம் ஏற்கனவே வைத்திருப்பவர்கள் அதனை சரியாக வழிபாடுகள் செய்ய வேண்டும். புதிதாக வாங்க இருப்பவர்களும் இப்படி வழிபாடுகள் செய்தால் கோடி கோடியாய் செல்வம் செய்வது நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள். குபேர எந்திரத்தை வாங்கியவுடன் முதலில் பூஜை அறையில் தான் வைக்க வேண்டும். பின்னர் பணம் வைக்கும் இடத்தில் மாற்றி வைத்துக் கொள்ளலாம். பூஜையின் பொழுது குபேர எந்திரத்தை வெளியே எடுத்து பூஜை அறையில் வைக்க வேண்டும்.

பூஜைகள் முடிந்ததும் மறுநாள் மீண்டும் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடலாம். மேற்கூறிய இந்த உலோகங்களில் செய்யப்பட்ட எந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. நீங்கள் குபேர எந்திரத்தை வீட்டில் வைத்து குபேர மந்திரத்தை ஜெபித்து வர அந்த யந்திரம் உருவேற்ற படுகிறது. அதனால் அந்த எந்திரத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக சக்தி வருகிறது. நீங்கள் செய்யும் வழிபாடுகளிலும், மந்திரத்திலும் தான் யந்திரத்திற்கு சக்தி பிறக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். குபேர மந்திரத்தை 108 முறை தினமும் உச்சரிக்கலாம். குபேர எண் வீட்டில் பூஜை அறையில் வரைந்தும் வைக்கலாம் இதனால் பணத்தட்டுபாடு வராது. முழுமுதற் கடவுளான விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி இந்த எந்திரத்தை வைத்து வழிபடலாம்.

குபேரனுக்கு நிவேதனமாக தேன், வெல்லம், உலர் பழங்கள் படைக்கலாம். பூஜை செய்யும் பொழுது எந்திரத்திற்கு மலர்களாலும், மஞ்சள் கலந்த அரிசி எனப்படும் அக்ஷதையினாலும் அர்ச்சனை செய்ய வேண்டும். கற்பூர ஆரத்தி காட்டும் போது இந்த யந்திரத்திற்கும் சேர்த்து கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபட வேண்டும். நாணய அர்ச்சனைகள் முறையாக குபேரனுக்கு செய்து வரும் பொழுது இந்த எந்திரத்தை உடன் வைத்துக் கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்த பலன்களை தரும். செல்வாதிபதி குபேரன் பெருமாளுக்கு திருமண உதவிக்காக கடன் கொடுத்தது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் குபேரனிடம் லங்காதிபதி இராவணன் கூட கடன் பெற்று இருக்கிறார் தெரியுமா? அத்தகைய சிறப்பு வாய்ந்த குபேர எந்திரத்தை நாம் வைத்து வழிபடுவதால் நம்முடைய கடன்கள் தீரும் என்பது ஐதீகம். படிப்படியாக தொழில் வளர்ச்சி ஏற்பட்டு வருமானம் பெருகி நாமும் குபேரனைப் போல் செல்வந்தர்களாக ஆகலாம்.