நீங்கள் சம்பாத்திபத்தை பார்த்து உங்களை சுற்றி உள்ளவர்கள் பொறாமை படுகிறார்களா ?? அந்த திருஷ்டியை போக்க ஐந்து மிளகு போதும் !!

மிகவும் கஷ்டப்பட்டு நேர்மையான முறையில் உழைத்து சம்பாதித்தாலும் கூட, அந்த பணமானது சில பேர் கையில் தங்காது. இதற்கு காரணம் அவர்களை சுற்றி இருப்பவர்கள் வைக்கும் கண் திருஷ்டி தான். அந்த பணத்தை சம்பாதிக்க நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்போம் என்பது, நமக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் பார்ப்பவர்களுக்கு நாம் பட்ட கஷ்டங்கள் கண்ணுக்குத் தெரியாது. நம் கையில் இருக்கும் பணம்தான் பளிச்சென்று தெரியும். இதன் மூலம் வரக்கூடிய வருமானத்தை முழுமையாக அனுபவிக்கும் சூழ்நிலை கூட சிலருக்கு ஏற்படாது. அதாவது அந்த வருமானத்தை வைத்து, புதிய பொருட்கள் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ முடியாமல், யாருக்கும் தெரியாமல் பொத்தி பொத்தி வைப்பார்கள். எவ்வளவு நாள் தான் இப்படியே இருப்பது என்று எண்ணி, அந்த பணத்தை வைத்து ஏதாவது ஒரு பொருளை வாங்கி விட்டால் அவ்வளவுதான்.

சுற்றியிருப்பவர்கள் கண்களாலேயே சுட்டு விடுவார்கள். பெரிய பெரிய பணக்காரர்கள் எல்லாம் வாழவில்லையா? என்ற கேள்வி சிலருக்கு எழலாம். ஆனால், அவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள பரிகாரம் செய்கிறார்களா? இல்லையா? என்பதை நாம் சென்று ஆராய்கிறோமா? இல்லையே! அவரவர் பாதுகாப்பிற்காக அவரவர் சில பரிகாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் சில பரிகாரங்களை செய்து தான் ஆக வேண்டும். அடுத்தவர்களின் வயிற்றெரிச்சல் நம் மீது படாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றிய ஒரு சுலபமான பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலில் 5 மிளகை உங்களது உள்ளங்கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் வீட்டு வாசலுக்கு சென்று, கிழக்கு நோக்கியவாறு நின்று, உங்களுடைய தலையை ஏழு முறை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும், சுற்ற வேண்டும். இறுதியாக மேலும் கீழுமாக 7முறை ஏற்றி இறக்க வேண்டும். அதன்பின்பு கையில் இருக்கும் 5 மிளகில், நான்கு மிளகுகளை 4 திசைகளிலும் தூக்கி வீச வேண்டும். கிழக்குப் பக்கம் ஒரு மிளகு, மேற்குப் பக்கம் ஒரு மிளகு, வடக்கு பக்கம் ஒரு மிளகு, தெற்கு பக்கம் ஒரு மிளகு. மீதம் உள்ள ஒரு மிளகை வானத்தை நோக்கி மேல் பக்கமாக தூக்கி வீசிவிட வேண்டும். இந்த மிளகை எவ்வளவு தூரமாக தூக்கி எறிகிறார்களோ அவ்வளவு தூரம் கண்திருஷ்டி உங்களை விட்டு விலகி ஓடி விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த பரிகாரத்தை அமாவாசை அன்றோ அல்லது ஞாயிற்றுக்கிழமை அன்றோ செய்யலாம். மாலை 6.30 மணிக்கு மேல் எப்போது வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம்.

வீட்டு வாசலுக்கு வெளியே, சென்று செய்யக்கூடிய பரிகாரம் என்பதால், உங்கள் தெருவில் ஜன நடமாட்டம் அடங்கிய பின்பு கூட, இரவு 10 மணிக்கு மேல் செய்து கொள்ளலாம். வீட்டில் மட்டும்தான் இந்த பரிகாரம் செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் கண் திருஷ்டி இருந்தால் கூட, தொழில் செய்யும் அந்த நபர், இந்த பரிகாரத்தை அவர் கடை வாசலிலோ, அலுவலக வாசலிலோ செய்வதில் தவறில்லை. கடையை அடைக்கும் போது அந்த கடையின் உரிமையாளர் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். குழந்தைகளுக்கும் கண் திருஷ்டியின் மூலம் பிரச்சினைகள் வரும். அப்படி இருக்கும் பட்சத்தில் குழந்தையின் தாய், இந்த பரிகாரத்தை குழந்தைக்கு செய்தாலும் நல்ல பலன் உண்டு. நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையாக ஒரே ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்து பலனை அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே பலனை உணர முடியும்.