நீங்கள் தினந்தோறும் நிம்மதி இல்லாமல் தவித்தால் இது தான் காரணம் !! இந்த தீபத்தை ஒரு முறை ஏற்றி பாருங்கள் எதிர்பாக்காத மாற்றம் ஏற்படும் !!

குடும்பத்தில் சதா சண்டை, சச்சரவுகள் ஏற்படுவது என்பது இயல்பான விஷயம் அல்ல. எப்போதாவது சண்டை வந்தால் பிரச்சனை இல்லை. எப்போதும் பிரச்சனை என்றால் எப்படி இருக்கும்? வாழ்க்கையையே வெறுத்துவிடும் நிலைக்கு கொண்டு போய் விடும். இதனால் சிலர் விரக்தியின் உச்சத்தில் இருப்பார்கள். குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் தொடர்ந்து பிரச்சனைகள் இருந்தால் கட்டாயம் அந்த இல்லத்தில் நெகடிவ் எனர்ஜி இருக்கும். நெகடிவ் எனர்ஜி என்பது பேய், பிசாசு எல்லாம் இல்லை. எப்படி தெய்வ சக்தி இருப்பது கண்களுக்கு தெரியாமல் இருக்கிறதோ அதே போல எதிர்மறை ஆற்றலை வெளிவிடும் நெகட்டிவ் எனர்ஜி சிஸ்டம்ஸ் கண்களுக்கு தெரிவதில்லை. பகல்-இரவு, தகிக்கும் சூரியன்-குளிரும் சந்திரன், தேவர்கள்-அரக்கர்கள் இவ்வாறு எதிர் எதிராக அனைத்திலும் அமைக்கப்பட்டது தான் இந்த பரபஞ்சம்.

நேர்மறை ஆற்றலை உள்வாங்கும் போது நமது உடலில் நல்ல எண்ணங்கள் விதையுண்டு மனதில் அமைதி இருக்கும். அதுவே எதிர்மறை ஆற்றலானது நம்மை சுற்றி வரும் போது தீய குணங்கள் நமக்குள் தோன்றி அதன் மூலம் பிரச்சினைகளை உருவாக்கும். இதற்கு மனமும் முக்கிய காரணமாக இருக்கும். வீட்டினுள் இருக்கும் எதிர்மறை ஆற்றலை அகற்றுவதற்கு எளிய வழிமுறை இருக்கிறது. அதை பற்றி இப்பதிவில் காண்போம். வெண்கடுகு, சமையலில் பெரும்பாலும் இடம் பெறுவதில்லை. ஆனால் அதன் பயன்பாடு ஆன்மீகத்தில் அதிகம் காணப்படும். தீய சக்திகள் வெண்கடுகிடம் நெருங்காது. இதற்கு காரணம் வெண்கடுகில் இருப்பது தேவகணங்கள், என்று சாஸ்திரம் கூறுகிறது. தேவ கணங்களின் வேலையே அசுர சக்தியை எதிர்ப்பது தான். தூபம் போடும் போது, சிறிது வெண்கடுகு போட்டால் அதன் வாசத்தில் கெட்டவைகள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்.

அதே போல் வெண்கடுகில் தீபம் ஏற்றினால் அனைத்து எதிர்மறை ஆற்றலையும் நீக்கிவிடும். வீட்டில் அற்புத மாற்றங்களை இந்த தீபம் ஏற்படுத்தும். இந்த வெண்கடுகு தீபத்தை எப்படி ஏற்றுவது என்று இனி காணலாம். உங்கள் மனம் நிம்மதி இல்லாமல் உழன்று கொண்டிருக்கும் வேளையில் இந்த தீபத்தை ஏற்றினால் நல்ல பலன் தரும். எப்போதெல்லாம் மனம் கவலை அடைகிறதோ அப்போதெல்லாம் சிறிது வெண்கடுகை எடுத்து கொள்ளுங்கள். சுத்தமான வெள்ளை காட்டன் துணியை சதுரமாக வெட்டி வைத்து கொள்ளுங்கள். அதில் வெண்கடுகை சிறிது போட்டு அத்துடன் சிறிய அளவில் பச்சை கற்பூரம் ஒன்றை வைத்து கொள்ளுங்கள். அதை மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றும் முடிப்பு எப்படி இருக்குமோ அந்த அளவிற்கு இருந்தால் போதும். வாசாலில் இருந்து தான் நெகட்டிவ் எனர்ஜி உள்ளே வருகிறது. எனவே உங்கள் வீட்டின் வாசலில் சிறிது அகலமான தட்டு ஒன்றை வைக்க வேண்டும்.

கண்ணாடி, பித்தளை, செம்பு என்று எந்த உலோகத்திலும் இருக்கலாம். அதன் மீது மண் அகல் ஒன்றை வைத்து கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணை ஊற்றி நீங்கள் செய்த வெங்கடுகு திரியை அதில் முழுக்க நனையும்படி வைக்கவும். உங்களது இஸ்ட தெய்வத்தை மனதார வழிபடுங்கள். உங்களுக்கு இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்து கொடுக்கும்படி வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் தீபம் ஏற்றுங்கள். வெண்கடுகு நன்றாக வெடிக்கும் போது உங்கள் மனதில் இருக்கும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் சக்திகள் அனைத்தும் நீங்குவதை நீங்களே உணர முடியும். தீபம் முழுவதும் எரிந்து முடியும் வரை அங்கேயே இருந்து வேண்டுதல் செய்யுங்கள். வீட்டையும், உங்களையும் சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல் விலகி ஓடும். குடும்பத்தில் அதுவரை இருந்த வந்த பிரச்சனைகள் அனைத்தும் அடியோடு நீங்கும். இதனை தினமும் ஏற்றினால் அதிவிரைவிலேயே நீங்கள் தேடிய நிம்மதி உங்களுக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.