நீங்கள் நல்ல பெயர் புகழ் பதவி வெற்றி செல்வம் எல்லாவற்றையும் ஒருசேர அடைய மகாலட்சுமி வழிபாட்டை இப்படித்தான் செய்தால் போதும் !!

நமக்கு கிடைக்கக்கூடிய நல்ல பெயராக இருந்தாலும், அவ பெயராக இருந்தாலும், அது நம் வாழ்க்கையின் சூழலையை பொறுத்தே, நம்மை வந்து சேர்கிறது. எடுத்துக்காட்டாக ஒருவர், பெரிய பதவியில் இருக்கின்றார், அதிகப்படியான பணம் சம்பாதிக்கிறார் என்றால், அவருக்குப் பெயர், புகழ் இப்படி எல்லா வகையான மரியாதைகளும் தானாக தேடி வரும். இப்படிப்பட்டவர்களுக்கு இந்த சமூகத்தில் கிடைக்கின்ற அந்தஸ்தே தனி தான்! பணம், பெயர், புகழ், பதவி, இது எதுவும் இல்லாத நல்ல மனிதராக இருந்தாலும் கூட, இந்த உலகத்தில் அவருக்கான சரியான அங்கீகாரம் கிடைக்கப் படுகிறதா? சரியான அந்தஸ்து கிடைக்கிறதா? என்று கேட்டால், அவ்வளவு உறுதியாக ‘அந்தஸ்து கிடைக்கும்’ என்று நம்மால் சொல்லிவிட முடியாது. நாம் யாரென்று இந்த உலகத்திற்கு நிரூபிக்க வேண்டும் என்றால், நல்லவர் என்ற அந்தஸ்தோடு, சேர்த்து பெயர் பணம் புகழ் பதவி எல்லாமும் தேவைப்படுகிறது. ஆகவே மேற்குறிப்பிட்டுள்ள அனைத்தும் ஒருவருக்கு கிடைக்க வேண்டுமென்றால், கட்டாயம் அவருக்கு மகாலட்சுமியின் ஆசீர்வாமும் இருக்க வேண்டும்.

நம்முடைய அந்தஸ்த்தை உயர்த்திக் கொள்ள, மகாலட்சுமியை தினந்தோறும் எப்படி வழிபாடு செய்தால், எல்லா வகையான செல்வ வளங்களையும் நாம் பெற முடியும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.இந்த வழிபாட்டிற்கு மகாலட்சுமியின் திரு உருவப்படமோ அல்லது மகாலட்சுமியின் சிறிய சிலையோ உங்கள் வீட்டில் கட்டாயம் இருக்கவேண்டும். ஒரு மரபலகையை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் சுத்தமான தாம்பூலத் தட்டு எடுத்துக்கொள்ளலாம். அடுத்ததாக குங்குமம், மஞ்சள், சந்தனம், பன்னீர், உதிரி மல்லிகைப்பூ 108, கொஞ்சம் பச்சரிசியில் அட்சதை, வெற்றிலை பாக்கு பழம் தீப தூப ஆராதனைகளை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நெய்வேதித்திற்க்கு கட்டாயம் பஞ்சாமிருதம் இருக்க வேண்டும். முதலில் மகாலட்சுமியின் சிலையாக இருந்தால் அதை மரப்பலகையில் நிறுத்தி வைத்துவிடலாம். அதுவே திருஉருவ படமாக இருந்தால், சுவற்றில் சாய்த்து வைத்துவிடுங்கள். மகாலட்சுமிக்கு மல்லிகைப் பூவால் அலங்காரம் செய்து விடுங்கள். மகாலட்சுமியின் முன்பு சிறிய கிண்ணங்களில் சந்தனம், குங்குமம், பன்னீர், அட்சதை, நெய்வேதியம் தீப ஆராதனைகளை அழகாக அடுக்கி வைத்து விடுங்கள்.

வெற்றிலை, பாக்கு, பழம் அதன் மேல் ஒரு பூ வைத்து மகாலட்சுமியின் முன்பு, இந்த தாம்பூலத்தையும் வைத்து விடுங்கள். மகாலட்சுமி இப்போது நீங்கள் செய்யக்கூடிய பூஜைக்கு தயாராக இருக்கிறார்கள். பூஜையை தொடங்கலாம். முதலில் தயாராக வைத்திருக்கும் அட்சதையை உங்கள் உள்ளங்கைகளை எடுத்து வைத்து, உங்கள் வேண்டுதல்களை வைக்க வேண்டும். அது உங்களுக்கான வேண்டுதல்களாக இருந்தாலும் சரி. அல்லது உங்கள் குடும்பத் தேவைக்கான வேண்டுதலாக இருந்தாலும் சரி. அதாவது உங்கள் கணவர், உங்கள் பிள்ளைகள், இப்படி யாருக்காக வேண்டும் என்றாலும் நம்முடைய வேண்டுதலை வைக்கலாம். அட்சதையை கையில் வைத்துக்கொண்டே, வேண்டுதல்களை மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டு, அந்த அட்சதையை மகாலட்சுமியின் முன்பு சமர்ப்பணம் செய்து விடுங்கள். அடுத்ததாக 108 எண்ணிக்கையில் இருக்கும் மல்லிகைப் பூவை, ஒவ்வொன்றாக எடுத்து, மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ஒரு முறை மல்லிகை பூ அர்ச்சனை! இன்னொரு முறை கிண்ணத்தில் இருக்கும் குழுமத்திலிருந்து ஒரு சிட்டிகை குங்குமத்தை எடுத்து, மகாலட்சுமியின், பாதத்தில் அர்ச்சனை செய்ய வேண்டும்.

(108 முறை மல்லிகை பூவையும் சமர்ப்பணம் செய்ய வேண்டும். 108 முறை குங்குமத்தையும் சமர்ப்பணம் செய்ய வேண்டும். புரிகிறதா! கீழ்க்கண்ட மந்திரத்தை உச்சரிக்கும்போது, ஒரு மல்லிகை பூ, ஒரு சிட்டிகை குங்குமம் இரண்டும் மகாலட்சுமிக்கு சமர்ப்பணம்.) அர்ச்சனை செய்யும்போது ‘ஓம் மகாலட்சுமியே நமஹ! ஓம் ஸ்ரீ லக்ஷ்மியே நமஹ! ஓம் ஜெய லட்சுமியே நமஹ!’ இந்த மூன்று மந்திரமும் சேர்ந்தது ஒரு மந்திரம். இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து குங்குமத்தினாளும், மல்லி பூக்களாலும் அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி மந்திரத்தை உச்சரித்து மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்யும்போது, மகாலக்ஷ்மியின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும் என்பதில் சந்தேகமே இல்லை. இறுதியாக தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். உங்களது பூஜை முடிந்தவுடன் அர்ச்சனை செய்த குங்குமத்தை தனியாக ஒரு டப்பாவில் போட்டு தினமும் நெற்றிக்கு இட்டுக் கொள்ளுங்கள். அர்ச்சனை செய்த பூவிலிருந்து, ஒரு பூவை மட்டும் எடுத்து தலையில் சூட்டிக் கொள்ளலாம். உங்களது வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமென்றால், இந்த பூஜையை 90 வார வெள்ளிக் கிழமைகள் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. முடிந்தால் தொடர்ந்து 90 நாட்கள் செய்தால், இந்த பூஜையின் பலனை நம்மால் அடைய முடியும். சூழ்நிலை காரணமாக இடையில் பூஜை செய்ய முடியவில்லை என்றால், அந்த வாதத்தை விட்டு விட்டு, மீண்டும் அடுத்த வாரம் பூஜையை தொடங்கலாம்.