நீங்கள் நினைத்தது உடனே நடக்க, நோய்கள் முற்றிலும் குணமாக அனுமனுக்கு இந்த தேங்காயை கொடுத்துப் பாருங்கள் !!

ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொரு வேண்டுதல்கள் இருக்கும். அதை நிறைவேற்றுவதற்கு பலரும் பல வழிபாடுகளை கடவுளிடத்தில் செய்கின்றனர். அந்த வகையில் நீங்கள் மனதில் நினைத்த ஒரு விஷயம் தடையின்றி நிறைவேறுவதற்கு ஹனுமாருக்கு இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். ஸ்ரீராமபிரானின் தீவிர பக்தரான ஹனுமர் பக்தர்கள் கேட்டதை உடனே தந்தருள்வார். அவரிடம் நாம் வைக்கும் பிரார்த்தனை ஆனது உடனே பலிக்கும் என்பது நம்முடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. அப்படியாக இந்த தேங்காயை அவருக்கு நாம் அர்ச்சனை செய்யும் பொழுது நம்முடைய வேண்டுதல்கள், நீண்ட நாள் ஆசைகள் போன்றவை உடனே நிறைவேறும்.

மிகவும் சக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். அனுமனுக்கு விருப்பமான பொருட்களில் நாம் எதை மனதார கொடுத்தாலும் அதை முழு மனதோடு ஏற்றுக் கொள்வார். அனுமனுக்கு உகந்த செந்தூரம் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். காரிய தடை ஏற்படாமல் இருப்பதற்கு, நீங்கள் அந்த காரியத்தை செய்யும் முன்னர் செந்தூரத்தை நெற்றியில் வைத்துக் கொண்டு செய்யுங்கள். உங்களுடைய நியாயமான கோரிக்கைகள் யாவும் உண்மையில் வெற்றி பெறுவதை பார்த்து நீங்களே ஆச்சரியப்பட்டு போவீர்கள். வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்கள், நினைத்த வேலை கிடைக்கவும், தொழிலில் இருக்கும் மந்த நிலை மாறி தொழில் விருத்தி பெறவும், வியாபார முன்னேற்றம் குறித்த கோரிக்கைகளையும், குடும்பத்திற்குள் அல்லது கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சினைகளை தடுத்து ஒற்றுமையுடன் வாழவும் நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒரு முழு தேங்காயை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் முழுவதுமாக மஞ்சளை தடவி கொள்ளுங்கள். தேங்காயின் மூன்று கண்களிலும் செந்தூரத்தை இட்டுக் கொள்ளுங்கள். அதே போல் உங்களால் முடிந்தால் இந்த மாலையையும் சேர்த்து அணிவித்து பாருங்கள். அரச இலைகள் 21 என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொண்டு தண்ணீரில் நன்றாக அலசிக் கொள்ளுங்கள். அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு மாலையாக கோர்த்துக் கொள்ளுங்கள். மாலை, மாவிலைத் தோரணம் கட்டுவது போல் இருக்க வேண்டும். அனுமாருக்கு சாற்றும் அளவிற்கு விட்டுவிட்டு கட்டுவது நல்லது. அரச இலை மாலை உங்களால் கட்ட முடியவில்லை என்றால் நீங்கள் ‘ஸ்ரீராமஜெயம்’ காகிதத்தில் எழுதி மாலையாக கட்டி கொண்டு செல்லலாம்.

இந்த பரிகாரத்தை சனிக்கிழமை அன்று அனுமன் கோவிலுக்கு சென்று செய்ய வேண்டும். மற்ற கிழமைகளில் செய்வதை விட அனுமாருக்கு உகந்த சனிக்கிழமைகளில் செய்வது மிகவும் விசேஷமான பலனைத் தரும். அனுமார் கோவிலுக்கு தான் சென்று இந்த தேங்காயை கொடுக்க வேண்டுமென்பதில்லை. உங்கள் அருகில் இருக்கும் மற்ற கோவில்களில் வீற்றிருக்கும் அனுமன் சன்னதிக்கு சென்று இந்த பரிகாரத்தை செய்து வரலாம். எந்த பரிகாரத்தையும் முழு நம்பிக்கையோடும், பக்தி சிரத்தையோடும் செய்ய வேண்டும். ஸ்ரீமன் நாராயணனின் பக்தராகிய அவருக்கு மிகவும் பிடித்த பொருட்களை நிவேதனமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் நீங்கள் அனுமன் கோவிலுக்கு சென்று வழங்கி வந்தால் நீங்கள் நினைத்த காரியங்கள் நிச்சயம் ஜெயம் அடையும்.