நீங்கள் நினைத்த அளவிற்கு வருமானம் பெருகி வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க இந்த 3 பொருட்களை ஒன்றாக சேர்த்து வைத்தாலே போதும் !!

வீட்டில் பண புழக்கம் அதிகரிக்க, முதலில் வருமானம் பெருக வேண்டும். வருமானம் இல்லாமல் வீட்டில் எப்படி பணப்புழக்கம் பெருகும்? ஜீபூம்பா மந்திரம் போட்டவுடன் எங்கிருந்தோ எல்லாம் பணம் வருவதில்லை. நாம் உழைத்து சம்பாதித்தால் தான் பணம் வரும். ஆனால் என்ன தான் உழைத்து சம்பாதித்தாலும், சம்பாதித்த பணம் நம்மிடம் நிலையாக தங்குவதில்லை? இதற்கு என்ன காரணம் தெரியுமா? மகாலட்சுமி எல்லோரிடமும் நிரந்தரமாக தங்கி விடுவதில்லை. யாரிடம் அவளுக்கு பிடித்த அம்சங்கள் இருக்கிறதோ, அவர்களிடம் அவள் நிரந்தரமாக தங்குவாள். நான் கஷ்டப்பட்டு தான் சம்பாதிக்கிறேன், என்னால் கொஞ்சம் கூட சேர்த்து வைக்க முடியவில்லை என்று புலம்புபவர்கள் ஏராளம் நாம் பார்த்திருப்போம். அவர்கள் மகாலட்சுமிக்கு பிடித்த இந்த 3 பொருட்களை ஒன்றாக சேர்த்து இந்த இடங்களிலெல்லாம் வைப்பதால் வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அதை எப்படி செய்வது?

எந்தெந்த பொருட்களை கொண்டு என்ன செய்வது? போன்ற கேள்விகளுக்கு விடையை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள். வீடாக இருந்தாலும் சரி, தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடத்தில் இருக்கும் கல்லாப் பெட்டியாக இருந்தாலும் சரி, பணம் வைக்கும் பீரோ, பெட்டி, லாக்கர், மணி பர்ஸ், ஹேண்ட் பேக், வாலெட் போன்றவையும், பாட்டிமார்கள் உபயோகப்படுத்தும் சுருக்குப்பை, தாய்மார்கள் ரகசியமாக சேர்த்து வைக்கும் அஞ்சறை பெட்டி போன்றவையாக இருந்தாலும் சரி இந்த மூன்று பொருட்களை சேர்த்து அந்த இடத்தில் வைத்தால் மட்டுமே போதும். வேலை கிடைக்காதவர்களுக்கு மனதிற்குப் பிடித்த, நினைத்த வேலை உடனே கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு பணம் வைக்கும் இடங்களில் எல்லாம் இந்த பொருளை வைப்பதால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும், உற்பத்தித் திறனும், தொழில் விருத்தியும் நல்ல ஏற்றம் உண்டாகி முன்னேற்ற பாதையில் செல்லும். நீங்களே எதிர்பாராத அளவிற்கு உங்களுடைய வருமானத்தில் அதிக அளவில் லாபங்களை காண முடியும். இந்த பொருட்கள் தனித்தனியாக இருக்கும் பொழுது மிக சாதாரணமானவையாக இருந்தாலும், ஒன்றாக சேர்த்து வைப்பதால் இதனுடைய சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது.

பண ஈர்ப்பு விதியில் இந்த பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? என்கிற எதிர்மறை எண்ணத்துடன் இதை செய்யாதீர்கள். இப்படி செய்தால் நாம் நினைத்தது நடக்கும் என்கிற முழு நம்பிக்கையோடு செய்யுங்கள். செயல் + நம்பிக்கை இது தான் நல்ல பலனைத் தரும். வெறும் செயல் மட்டும் இருந்தால் அதில் எந்த பலனும் இல்லை என்பதை மறந்துவிடாதீர்கள். எல்லாம் சரி, அந்த மூன்று பொருட்கள் என்ன என்பதை பார்த்து விடுவோமா? நம் வீட்டில் பூஜைக்கு பயன்படுத்தும், திருப்பதி ஏழுமலையானின் தாடையில் தினமும் வைக்கப்படும் பச்சை கற்பூரம் தான் அது. 2 பச்சைக் கற்பூரத்துடன், 2 ஏலக்காய், 27 என்ற எண்ணிக்கையில் சோம்பு எடுத்துக் கொள்ளுங்கள். அதை சிறிய அளவில் சதுரமாக வெட்டி வைத்துள்ள மஞ்சள் துணியில் முடிந்து வைத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் கயிறால் இறுக்கமாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த மூட்டையை மேலே சொன்ன அத்தனை இடங்களிலும் ஒவ்வொன்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த இடம் முக்கியமானது என்பதைப் பொறுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதன் சக்தி ஆறு வாரங்கள் வரை மட்டுமே இருக்கும். அதன்பின் மீண்டும் புதியதாக மாற்றி விடுங்கள். இது உங்களிடம் இருக்கும் வரை உங்களுடைய வருமானம் படிப்படியாக பெருகும். இதை வைத்த ஒரு சில வாரங்களில் பண ரீதியாக நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ அது நிச்சயம் நடப்பதை நீங்களே காணலாம் என்பதை கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.