நீங்கள் மற்றவர்களிடம் சொல்லும் இந்த 5 விஷயங்கள் கட்டாயம் உங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிடும் தெரிந்து கொள்ளுங்கள் !!

எல்லா விஷயத்தையும் என்னால் மனதில் வைத்துக் கொள்ள முடியாது. யாரிடமாவது கொட்டி தீர்த்து விட வேண்டும் என்பது எல்லோருடைய ஆசையாக தான் இருக்கும். ஆனால் இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது தான் மறுக்கவே முடியாத உண்மை. எல்லாவற்றையும் எல்லாரிடமும் சொல்ல வேண்டும் என்பது தேவையற்ற ஒன்று. இதனால் பின் விளைவுகள் ஏற்படக் கூடும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. நீங்கள் அதிகமாக நம்பிக்கை வைத்திருக்கும் நபர் கூட எல்லா நேரத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. நீங்கள் மற்றவர்களிடம் சொல்லும் இந்த 5 விஷயங்கள் கட்டாயம் திருஷ்டியாக மாறுமாம். அவை என்னென்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். முதலாவதாக நாம் யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாத முக்கியமான விஷயம் என்று பார்த்தால் அது நம்முடைய பொருளாதார நிலை தான். ஒரு சிலர் தம்பட்டம் அடித்துக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். நான் இதை வாங்கி இருக்கிறேன், அதை வாங்கி இருக்கிறேன், எனக்கு இவ்வளவு சொத்துகள் உள்ளது, என் அக்கவுண்டில் அவ்வளவு பணம் உள்ளது, எவ்வளவு பணம் உள்ளது என்று தற்பெருமை பேசிக் கொண்டு திரிவார்கள்.

இது நீங்கள் கட்டாயம் மாற்றிக் கொள்ள வேண்டிய ஒரு விஷயமாகும். தற்பெருமை பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. இதனால் கண்திருஷ்டி தான் ஏற்படும். மாற்றங்களின் கண் திருஷ்டி பொல்லாதது என்பார்கள். பின்னர் ஒரு விஷயத்தை நோக்கி புதிதாக உங்களுடைய பயணம் தொடங்க இருக்கிறது என்றால்! அதையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். புதிதாக ஒரு வேலை கிடைத்தாலும், பதவிகள் கிடைத்தாலும், வாய்ப்புகள் கிடைத்தாலும் அதனை சட்டென எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை. அந்த இலக்கில் நீங்கள் வெற்றி அடைந்த பின்னர் இதை நான் செய்தேன் அதனால் எனக்கு வெற்றி கிடைத்தது என்பதை தாராளமாக எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளலாம். அதில் எந்த தவறும் இல்லை. உங்களால் மற்றவர்களுக்கு அது ஊக்கம் அளிக்கும் விதமாக இருக்கும். ஆனால் அதற்கு முன்னரே அதைப் பற்றிய தகவல்களை தம்பட்டம் அடிப்பது தேவையில்லாத ஒன்று. உங்களுடைய உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்றால் அதையும் வெளியில் வாய் திறந்து, நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று யாரிடமும் கூறி விடாதீர்கள்.

ஆரோக்கியம் என்பது இறைவன் கொடுத்த கொடை. நீ என்ன இப்படி இருக்கிறாய்? நான் திடகாத்திரமாக நன்றாக இருக்கிறேன் பார்! என்பது திருஷ்டியாக மாறக்கூடும். அது போல் நீங்கள் செய்யும் நல்ல விஷயங்களை கூட மற்றவர்களிடம் நான் இதைச் செய்தேன்! அதைச் செய்தேன்! என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அப்படி சொன்னால் நீங்கள் செய்த புண்ணியம் பாவமாக மாறிவிடும். நல்ல எண்ணத்துடன் நீங்கள் தான, தர்மங்கள் செய்கிறீர்கள் என்றால் இயல்பாகவே உங்களுக்கு அதை வெளியில் சொல்ல கூடாது என்று தோன்றும். அப்படி தோன்றவில்லை என்றால் நீங்கள் மற்றவர்களின் பார்வையை உங்கள் பக்கம் திருப்ப வேண்டுமென்றே செய்கிறீர்கள் என்று தான் அர்த்தமாகும். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள்.

அது போல் நீங்கள் செய்வது தான் உண்மையில் பெரும் புண்ணியத்தை சேர்க்கும். ஐந்தாவதாக உங்களுடைய தனிப்பட்ட ரகசியங்களை தப்பி தவறி கூட நெருங்கிய நண்பர்களிடம் கூட சொல்லாமல் இருப்பது தான் உங்களுக்கு நல்லது. யாரிடமாவது சொல்லவில்லை என்றால் தலை வெடிப்பது போல் இருக்கிறதே! என்ன செய்வது? சொல்லியே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் நீங்கள் இருந்தால்! அதை இறைவனிடம் ஒப்படையுங்கள். உங்களுடைய இஷ்ட தெய்வத்தின் முன் நின்று, அவரை நண்பராக ஏற்றுக் கொண்டு உங்களுடைய ரகசியங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அப்படி நீங்கள் செய்யும் பொழுது நீங்கள் தவறான வழியில் செல்ல இருந்தாலும், உங்கள் மனநிலை மாறி நேர் வழியில் செல்வீர்கள். அதை விடுத்து நண்பர்கள் தானே என்று நம்பி நீங்கள் உங்கள் ரகசியங்களை சொல்லி விட்டால் அதுவே உங்களுக்கு பெரிய பிரச்சனையாக வந்து நிற்கும் மட்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.