நீங்கள் வாடகை வீட்டில் உள்ளவரா ?? வாடகையை இந்த முறையில் கொடுத்துப் பாருங்கள் !! சீக்கிரமே சொந்த வீடு வாங்கிடுவீங்க !!

வாடகை வீட்டில் இருப்பவர்கள் ஒவ்வொருவருக்குமே, சீக்கிரமாக ஒரு சொந்த வீடு கட்டி விட வேண்டும் என்ற எண்ணம் வரும். வாடகையாக கொடுக்கும் பணத்தை, வங்கியில் கடன் தொகையாக கட்டினால் வீடு நமக்கு சொந்தமாகும் என்ற இந்த எண்ணம் எல்லோருக்குமே உண்டு. ஆனால், வீடு கட்டுவதற்கான யோகம் வரவேண்டும் அல்லவா? அதற்கு என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நீங்கள் மாதந்தோறும் உங்கள் வீட்டு ஓனருக்கு தரக்கூடிய வாடகையை, செவ்வாய்க்கிழமை அன்று தர வேண்டும். குறிப்பாக செவ்வாய்க்கிழமை அன்று, மதியம் 12 மணிக்கு முன்பாக கொடுக்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.

வாடகை வீடாக இருந்தாலும் சரி. வாடகை கடையாக இருந்தாலும் சரி. எதுவாக இருந்தாலும், செவ்வாய்க்கிழமை வாடகை பணத்தை கொடுப்பது நமக்கு சொந்தமாக, சொத்து வாங்கும் யோகத்தை தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. சில பேர் செவ்வாய்க்கிழமை அன்று பணத்தை அடுத்தவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள். ஆனால், வாடகையை கொடுக்கலாம் என்று சொல்கிறது ஜோதிடம். அப்படியும் செவ்வாய்க்கிழமை அன்று, உங்களுக்கு வாடகை கொடுக்க மனது உறுத்தலாக இருந்தால், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று வாடகை கொடுக்க கூடாது என்று சொன்னால், உங்கள் கையில் இருக்கும் பணத்தை, பீரோவிலிருந்து முன்னாலே எடுத்து வெளியில் வைத்துக்கொள்ளலாம். அப்படியும் இல்லை என்றால், இந்த நவீன காலத்தில் எத்தனையோ வழிமுறைகள் வந்துவிட்டது. ஏ.டி.எம் ல் இருந்து பணத்தை எடுத்து வந்து, உங்கள் வீட்டிற்குள் எடுத்து வராமல், அப்படியே உங்கள் வீட்டு ஓனரிடம் கொடுத்து விடலாம்.

அல்லது ஆன்லைன் மூலம் டிரான்ஸ்ஃபர் பண்ணிக்கொள்ளலாம். உங்கள் மனதிற்கு எப்படி விருப்பமோ? அப்படியே செய்து கொள்ளலாம். இதோடு சேர்த்து இன்னொரு வேலையும் செஞ்சு பாருங்க! நீங்க செய்யப் போகின்ற இந்த சின்ன விஷயம், எல்லோர் மனதிலும் ஒரு எண்ணத்தை ஏற்படுத்தும். அந்த எண்ணமே உங்களை வீடு கட்ட வைத்து விடும். அது என்ன என்று சிந்திக்கிறீர்களா? ஒரு சிறிய விஷயம்தான். இதை எத்தனை பேர் நம்புகிறார்கள் என்பது தெரியவில்லை. இருந்தாலும், இது பலிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. உங்கள் வீட்டு கதவில் உங்கள் வீட்டு குடும்ப தலைவரின் பெயரை எழுதி ஒட்டி வைக்க வேண்டும். அதாவது நேம் போர்டு என்று சொல்வார்கள் அல்லவா? அதுதான்.

சிலபேர் வாடகை வீட்டில், இதை வைக்க அனுமதிக்கமாட்டார்கள். இருப்பினும், சிறிய அட்டை காகிதத்திலாவது உங்களது பெயரை அழகாக எழுதி, உங்கள் வீட்டு வாசலில் ஒட்டி வைத்து விடுங்கள். அதற்காக நீங்கள் இருக்கும் வாடகை வீடு, உங்களுக்கு சொந்தமாகி விட்டது என்பது அர்த்தம் கிடையாது. பார்ப்பவர்களுக்கு, அது உங்களுடைய சொந்த வீடு என்ற எண்ணத்தை ஏற்படுத்தி தரும். அந்த எண்ணமே நீங்கள் சொந்த வீடு வாங்குவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். எல்லாம் ஒரு நம்பிக்கை தானே! ஆனால், இது நிறைய பேருக்கு பலித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. ஒருமுறை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்! கூடவே, காசு வெளியே எடுக்க முடியாத, உண்டியலில் காசு சேர்த்துக் கொண்டே வாருங்கள். சேமிப்பு உயரும். நஷ்டம் அடைவதற்கு எதுவுமே இல்லை. முயற்சிப்பதில் தவறில்லை. என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.