நீங்கள் வெளியே கிளம்பும்போது அதிர்ஷ்டத்தை தரக்கூடிய 3 சகுனங்கள் எது ?? வாங்க நம்ம தெரிந்துகொள்ளலாமா ??

ஏதோ ஒரு நல்ல காரியத்திற்காக வீட்டில் இருந்து வெளியே கிளம்பி செல்கின்றோம். நல்ல சகுனம் வர வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்புதான். எவையெல்லாம் கெட்ட சகுனம் என்பதை, நாம் தெரிந்து கொள்வதற்குப் பதிலாக, என்னவெல்லாம் நம் கண்முன் தென்பட்டால், நமக்கு நன்மை நடக்கும் என்பதை பற்றி மட்டும் தெரிந்து கொள்வோம். அதுவே, நமக்கு நன்மை தரும். சகுனங்களில் சில பேருக்கு நம்பிக்கை இருக்கும். சில பேருக்கு நம்பிக்கை இருக்காது. நம்பிக்கை உள்ளவர்களுக்கான பதிவுதான் இது. சகுனத்தில், நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த பதிவை தொடர்ந்து படிக்க வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் வெளியே கிளம்பும்போது, திடீரென்று வாலை ஆட்டிக்கொண்டு, நாய் ஒன்று, உங்கள் முன்னே வந்து நின்றாலோ, அல்லது அந்த நாய் உங்கள் பின்னாடியே ஓடி வந்தாலும், அது ஒரு நல்ல சகுனமாக சொல்லப்பட்டுள்ளது.

பைரவரின் வாகனமாக சொல்லப்படும் இந்த நாய், நீங்கள் நல்ல காரியத்திற்கு செல்லும் போது உங்கள் எதிரே வந்து வாலை ஆட்டிக்கொண்டு நின்றால், அதற்கு சாப்பிட ஏதாவது பிஸ்கட்டை கொடுக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். அது மிகவும் நல்லது. அதாவது அதற்கு உணவு வைத்துவிட்டு, அதன் பின்பு நீங்கள், உங்கள் நல்ல காரியத்தை பார்க்க செல்லலாம். நீங்கள் வீட்டில் வளர்க்கும் நாய், உங்கள் முன்பு வந்து இப்படி செய்தால், அது ஏற்றுக் கொள்ளப்படாது. எதேர்ச்சையான சம்பந்தமே சகுனம். அதாவது, ரோட்டில் இருக்கும் ஒரு நாய் உங்களை கண்டு ஓடி வருகிறது என்றால், மட்டுமே அது நல்ல சகுனம். இதற்காக வீட்டில் வளர்க்கும் நாய் குறுக்கே வந்தால் அபசகுணமா? என்றெல்லாம் கேட்கக்கூடாது. நம் வளர்க்கும் நாய் தினம்தோறும் நம்மை கண்டால் ஓடி வரத்தானே செய்யும். அடுத்ததாக காகம். நீங்கள் வெளியே கிளம்பும்போது, உங்களின் இடது பக்கத்தில் இருந்து, வலது பக்கத்திற்கு காகம் பறந்து சென்றால், அது உங்களுக்கு அதிர்ஷ்டம், நல்ல சகுனம் என்று சொல்லப்பட்டுள்ளது.

பொதுவாகவே, காகம் தலையில் அடித்தால் கெட்டது நடக்கப் போகிறது என்று சொல்லுவார்கள். இருப்பினும், அந்த காகம் நாம் வெளியே கிளம்பும் போது, நம் எதிரே நம்மை கடந்து செல்லும் பட்சத்தில், அது நமக்கு அதிகப்படியான நன்மையை தரும். அடுத்ததாக மரத்தில் ஏதாவது ஒரு உயிரினம் மேலே ஏறுவது போல காட்சியைக் கண்டால், அது உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டத்தை தேடி தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஓணான் ஏறுவது, அணில் ஏறுவது அல்லது குரங்கு, பூனை போன்ற விலங்குகள் ஏறுவது போல், காட்சியை கண்டாலும் அது உங்களுக்கான ஏறுமுகம் என்று சாஸ்திர குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது. கட்டாயம் நீங்கள் வெளியே செல்லும் போது இவைகளையெல்லாம் பார்த்து விட்டுத்தான் செல்ல வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் இல்லை.

நீங்கள் கிளம்பும்போது, எதேர்சியாக இந்த காட்சிகள் எல்லாம் உங்கள் கண்களுக்கு தென்பட்டால், அது நீங்கள் செல்லக்கூடிய நல்ல காரியத்தை, நல்ல முறையில் நிறைவேற்றித் தருவதாக, அறிவுறுத்த கூடிய சம்பவங்கள் என்று அர்த்தம். இதன்மூலம், ஒரு மனத் திருப்தியோடு செல்வோம். அந்த மன நிம்மதியும், நேர்மறை எண்ணமும், நாம் செல்லக்கூடிய காரியத்தை வெற்றியாக்கிய தருவதற்கு, அதிக வாய்ப்பு இருக்கிறது அல்லவா? இந்த சகுனங்களை பார்த்துவிட்டுதான், நல்ல காரியத்திற்கு வெளியே செல்ல வேண்டும் என்று காத்திருந்தெல்லாம் கிளம்ப வேண்டும். இவைகளை எல்லாம் கண்முன் பார்க்காமல் சென்றால், நல்ல காரியம் நடக்காது என்பதும் இதற்கு அர்த்தமில்லை. வெளியே கிளம்பும்போது, இப்படிப்பட்ட சகுனங்கள் கட்டாயம் நம் எதிரே நடந்துதான் ஆகவேண்டும் என்று நினைக்காமல், இப்படிப்பட்ட சகுனங்கள் நம் கண் முன்னே வந்தால், மனநிறைவோடு அந்த காரியத்தை தொடங்கலாம் என்பதற்காகவே இந்த பதிவு.