நீங்கள் வைக்கும் பூவை விநாயகர் விழுங்கினால் நினைத்தது நிச்சயம் நடந்துவிடும் !! பூவிழுங்கி அதிசய விநாயகர் பற்றி தெரியுமா?

இந்த உலகத்தில் பல அதிசயங்கள் நடந்த வண்ணம் தான் இருக்கிறது. எப்போது என்ன நடக்கும் என்று தெரிந்தவர்கள் யாரும் இல்லை. கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற வாதம் ஒரு பக்கம் இருந்தாலும் இது போன்ற அதிசயங்களை நிகழ்த்தும் வினோதங்கங்களும், வினோத தலங்களும் உண்டு. பிள்ளையார் பால் குடித்தார், அம்மன் கண் திறந்தார் என்று ஏகப்பட்ட வதந்திகள் வந்து மறைந்திருந்தாலும் இன்றும் இந்த கலியுகத்திலும் சில புராதன கோவில்களில் விஞ்ஞானிகளே விடை தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் நிலையையும் நாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். அப்படி ஒரு கோவிலை பற்றி தான் இந்த பதிவில் இனி காணவிருக்கிறோம். விடை தெரியாத பல கேள்விகளுக்கு பதிலாக இருப்பது ‘கடவுள்’. இறை சக்தியை மீறி மனிதனால் என்ன செய்து விட முடியும் என்று நினைக்கிறீர்கள்? அவனின்றி அனுவும் அசையாது. உங்களுக்கு என்ன பிரச்சனையாக இருந்தாலும் அதை மற்றவர்களிடன் பகிர்வதை விட இறைவனிடம் முறையிடுங்கள். பிரச்சனைகளை கொடுப்பதும் அவரே..

அதை தீர்க்க வழிக்காட்டுபவரும் அவரே.. இன்றைய கால கட்டத்தில் நாம் ஒருவரிடம் நம் குறைகளை கூறினால் உடனே அது பத்து பேருக்கு வேகமாக பரவி விடுகிறது. இது கொரோனா வைரஸ் விட ஆற்றல் மிக்கதாக இருக்கிறது. ஒவ்வொருவரும் அவர்கள் பிரச்சனையை பார்ப்பதில்லை. அடுத்தவர்கள் பிரச்சனைகளை பற்றி பேசி இன்பம் காண்கின்றனர். அதில் என்னதான் ஆர்வம் என்று தெரியவில்லை.தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை என்ற இடத்தில் திருச்சிற்றம்பலத்தில் புராதனவனேஸ்வரர் திருக்கோயில் அமைந்திருக்கிறது. இங்குள்ள சிவபெருமானுக்கு ‘பழமைவனநாதர்’ என்ற பெரும் உண்டு. அன்னை பெரியநாயகியாக காட்சி அளிக்கிறாள். இவருக்கு வஸ்திரம் சாற்றி அபிஷேகம் செய்தால் திருமணம் கைகூடும், குழந்தை வரம் கிட்டும். இங்கிருந்து சுமார் 15km தொலைவில் ‘எமன்’ வயல்வெளியில் மூலவராக தனி கோவிலில் வீற்றிருப்பது சிறப்பம்சமாக இருக்கிறது. இந்த இடம் பழங்காலத்தில் காட்டு பகுதியாக இருந்ததால் ‘புராதன வனேஸ்வரர்’ என்று அழைக்கபடுகிறார். இந்த இடத்தில் நெடுங்காலமாக சிவபெருமான் ஆழ்ந்த தவம் செய்து கொண்டிருந்த போது அசுரர்களின் அட்டகாசம் அதிகமானது.

அவரின் தவத்தை கலைக்க வேண்டி தேவர்களும், முனிவர்களும் பார்வதி தேவியிடம் முறையிட்டனர். பார்வதி தேவியோ மன்மதனை அழைத்து வருமாறு கோரினார். மன்மதன் வந்து ஈசன் மீது மலர்க்கணை தொடுத்தான். அதனால் தவம் கலைந்தார் ஈசன். இதனால் அந்த இடம் ”பூவனம்” என்ற பெயரில் இன்றும் இருக்கிறது. பாதியில் தவம் கலைந்த ஈசன் தமது மூன்றாவது கண்ணை திறந்தார். இதனால் மன்மதன் சாம்பாலாக பெற்றான். எனவே அவ்வூர் ‘மதன்பட்டவூர்’ என்று அழைக்கப்டுகிறது.பார்வதி தேவியும், தேவர்களும் ஈசனிடன் மன்மதன் செய்த காரியத்திற்கு தாங்களே பொறுப்பு என்பதையும், அவனை மீண்டும் உயிர்பிக்குமாறும் கேட்டுக் கொண்டனர். அவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி சிவபெருமான் மன்மதனின் சாம்பல் மீது பால் தெளித்தார். மன்மதனும் உயிர் பெற்றான். இந்த இடம் ‘பாலத்தளி’ என்று இன்று அழைக்கப்படுகிறது.

இந்த கோவிலில் இந்த நிகழ்விற்கு சான்றாக இன்றும் ‘காமன் கொட்டல்’ என்ற இடத்தில் காமன் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதே கோவிலில் இருக்கும் விநாயகர் சன்னிதியில் தான் பூவை விழுங்கும் விநாயகர் அருள் பாலித்து கொண்டிருக்கிறார். இந்த விநாயகரிடம் நம் வேண்டுதல்களை மனதில் வைத்து அவரது காது துவராத்தில் பூவை வைக்க வேண்டும். அப்படி நாம் எதை நினைத்து பூவை வைக்கிறோமோ அந்த வேண்டுதல் உடனே நிறைவேற பூவை விநாயகர் விழுங்கி விட வேண்டும் என்பது ஐதீகம். அப்படி விழுங்காவிட்டால் நினைத்த காரியம் தடைபடும். நிறைவேறாது என்று அர்த்தமாம். அதாவது காதில் பூவை வைத்தவுடன் இழுத்து கொண்டுவிடும். அப்படி நடந்தால் நினைத்தது நிறைவேறிவிடும் என்று நம்பப்படுகிறது.