நீங்க எந்த பொருள ஆசைப்பட்டு வாங்கினாலும் அது உங்களுக்கு ராசியே இல்லையா ?? அந்தப் பொருள் சிலருக்கு உடைந்து போகும் !! காணாமல் போகும் !! திருடு போகும் !!

நம்மில் சில பேருக்கு எந்த ஒரு பொருளை வாங்கினாலும், அதன் மூலம் அதிர்ஷ்டம் உண்டாகும். ஆனால், சில பேர் கைகளால் எந்த பொருளை வாங்கினாலும், அந்தப் பொருள் அவர்களிடத்தில், சில நாட்கள் கூட நிலைத்திருக்காது. அதுமட்டுமல்லாமல், அந்த பொருள் வாங்கிய நாள் முதல், அவரை பிரச்சனை பின்தொடர்ந்து கொண்டே இருக்கும். இப்படியாக நாம் வாங்கும் புதிய பொருட்களின் மூலமாகவும், நம்முடைய வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நாம் வாங்கும் பொருள், நமக்கு அதிர்ஷ்டத்தை தருவதற்கும், துரதிர்ஷ்டத்தை தருவதற்கும் நிறைய காரணங்கள் உள்ளது. அந்த வரிசையில், நாம் பொருளை வாங்க செல்லும் நேரம் நல்ல நேரமாக உள்ளதா! என்பதை கவனிக்க வேண்டும். இரண்டாவதாக, நம்முடைய ஜாதக கட்டத்தில், அந்த நாளில், புதிய பொருள் வாங்கக் கூடிய யோகம் இருக்கிறதா! என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் தான்!

ஆனால், எல்லா பொருட்களை வாங்கும் போதும், ஜாதக கட்டத்தில் நேரம் சரியாக இருக்கிறதா என்பதை நம்மால் பார்க்க முடியுமா? இது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான்! வீடு, நிலம், வாகனம், அல்லது வேறு ஏதாவது சொத்து, வாங்கும்போது வேண்டும் என்றால் ஜாதக கட்டத்தை பார்க்க முடியும். உதாரணமாக ஒரு செல்போன் வாங்குகிறீர்கள் என்றால், வாங்கிய 15 நாட்களிலேயே அந்த போன் திருடு போய் இருக்கும். இல்லை என்றால், கீழே போட்டு உடைத்து இருப்பார்கள்! சிலபேர் கைகளால் எந்த ஒரு பொருளை வாங்கி வைத்தாலும், அது சீக்கிரமாகவே பழுதடைந்து விடும். 10 வருடம் உழைக்க வேண்டிய பொருள், ஒரு வருடத்திலேயே பழுதாகி, அந்தப் பொருளை உபயோகப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அதாவது வீண்விரயம். இந்தப் பிரச்சினை நம்மில் பல பேருக்கு உண்டு. இப்படிப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு கண்திருஷ்டியும் ஒரு காரணமாக இருக்கும். உங்களுடைய ஜாதக கட்டத்தில் இருக்கக்கூடிய தோஷமும் காரணமாக இருக்கும். இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்ள சுலபமான ஒரு வழி உள்ளது.

அது என்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எந்து ஒரு தோஷத்தையும், எந்த ஒரு எதிர்மறை ஆற்றலையும் எந்த ஒரு கண் திருஷ்டியையும் போக்க கூடிய சக்தி இந்த பொருட்களுக்கெல்லாம் கட்டாயம் உண்டு. கண்ணாடி, மஞ்சள், தேன், பால், தண்ணீர், வாசனை மிகுந்த புஷ்பம், துளசி இலை, வில்வ இலை, அருகம்புல். நீங்கள் தங்கம் வாங்கினாலும் சரி, அல்லது சாதாரண பொருள் வாங்கினாலும் சரி. எந்த பொருளை வாங்கச் சென்றாலும், உங்கள் கையோடு ஒரு மஞ்சள் கிழங்கை எடுத்து செல்லுங்கள். எந்த ஒரு பொருளை வாங்குகிறார்களோ, அந்த பொருளை வாங்கிவிட்டு கூடவே, ஒரு கண்ணாடியையும் வாங்கிக்கொள்ளுங்கள். சின்ன சின்ன பொருட்களை எல்லாம் வாங்கிய பின்பு கண்ணாடியை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ள முடியாது. அதிகப்படியான பணம் கொடுத்து, வாங்கும் பொருட்களை வாங்குகிறீர்கள் என்றால், ஒரு சிறிய கண்ணாடியையும், காசு கொடுத்து, கடையிலிருந்து புதியதாக வாங்கிக் கொள்ளுங்கள். உங்களுடன் மஞ்சளை எடுத்து செல்லும்போது, உங்களுக்கு எப்படிப்பட்ட கெட்ட நேரம் நடந்து கொண்டிருந்தாலும், அந்த தோஷம் உங்களை தாக்காது.

யாருடைய கண்திருஷ்டியும், உங்கள் மேல் விழாது. மஞ்சளுக்கு உண்டான எதிர்ப்பு சக்தி அது. அதேபோல் நீங்கள் எந்த ஒரு பொருளை வாங்கிவிட்டு வீட்டுக்கு வரும்போது, கண்ணாடியுடன் வீட்டிற்குள் நுழையவேண்டும். நீங்கள் புதிதாக வாங்கிய, அந்தப் பொருளின் பிரதி பிம்பத்தை, உங்கள் கையிலிருக்கும் புது கண்ணாடியில் காட்டி விட்டீர்கள் என்றால், அந்த பொருளுக்கான அதிர்ஷ்டம் உங்களுடனே நிலைத்திருக்கும். எக்காரணத்தைக் கொண்டும் அந்த பொருள் வீண் விரயம் ஆவதற்கு வாய்ப்பு இல்லை. அதாவது, அந்தப் பொருளை மற்றவர்கள் பார்ப்பதற்கு முன்பு, நீங்கள் வாங்கிய அந்த புது கண்ணாடியில், அதனுடைய பிரதி பிம்பத்தைப் விழச் செய்ய வேண்டும் அவ்வளவுதான். இறுதியாக, ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர், பால், தேன், வாசனை மிகுந்த பூக்கள், உங்களிடம் எந்த இலைகள் கிடைத்தாலும் சரி, துளசியிலை, வில்வ இலை, அருகம்புல், இது மூன்றில் ஏதேனும் ஒன்று கிடைத்தாலும் போதும். அந்த தண்ணீரில் போட்டு, அந்த தண்ணீரை எடுத்து நீங்கள் வாங்கிய பொருளில் லேசாக தெளித்து விடுங்கள்! அவ்வளவு தான். எந்தப் பொருள் வாங்கினாலும் உங்களுக்கு இனி ராசி தான்! ஒரு முறை முயற்சி செய்துதான் பாருங்களேன்!