நீண்டகாலமாக இருந்து வரும், தீராத பிரச்சனைக்கு தீர்வு காண, சிவனை தினமும் இப்படி வழிபாடு செய்து வந்தால் போதும் !!

தீராத துன்பங்களுக்கு விடிவுகாலம் வர வேண்டும் என்றால், அதற்கான ஒரே வழி நம்பிக்கையான இறைவழிபாடு மட்டும் தான். எவரொருவர், கடைசி வரைக்கும் இறைவன் மேல் ஒரு துளி கூட நம்பிக்கை குறையாமல், எம்பெருமானின் பாதங்களை பற்றிக்கொண்டு இருக்கின்றாரோ அவரின் துயரங்கள், கட்டாயம் ஒரு நாள் காணாமல் போகும். விதிப் பயனால், கர்ம வினைப்பயனால் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கஷ்டங்களின் மூலம் நமக்கு பாதிப்பு குறைய சிவபெருமானை எப்படி வழிபட வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். யாருடைய மனசு சந்தோஷமாக இருக்கும் போதும், அந்த நேரத்தில் அவர்களிடத்தில் எந்த வரத்தை கேட்டாலும் பெற்றுவிடலாம். மனிதர்கள், சந்தோஷமாக இருக்கும் சமயத்தில் போய், நாம் ஒரு விஷயத்தைச் சொல்லும்போது அது நேர்மறை விளைவுகளை உண்டாக்கி, நல்ல பலனை நமக்கு தந்துவிடும் அதே போல் தான், இறைவனுடைய மனதையும் குளிர வைத்து விட்டால் மட்டுமே போதும்.

அந்த இறைவன் வரங்களை நமக்கு வாரி வழங்கி விடுவார். இதற்காக இறைவனும், மனிதனும் ஒன்று என்று சொல்ல வரவில்லை. இருப்பினும், அந்த காலங்களில் முனிவர்கள், நீண்ட காலம் தவமிருந்து, இறைவனின் மனதை குளிர வைத்து, வரங்களைப் பெற்றதை, வரலாற்றின் மூலம் நாம் அறிந்து இருக்கின்றோம் அல்லவா? அப்படித்தான் நம்முடைய வழிபாடும் இருக்க வேண்டும். தினமும் தொடர்ந்து உங்களுடைய வீட்டில் சிவ வழிபாடு செய்வதற்கு சிறிய அளவிலான ஒரு லிங்கத்தையும், அதனுடன் நந்தி தேவரையும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். பூஜைக்கு ஏற்ற உலோகங்களில் பூஜை ஜாமான்கள் விற்கும் கடைகளிலேயே, சிறிய அளவிலான சிவலிங்கங்கள் விற்க்கின்றது. அதையே வாங்கி பூஜை அறையில் வைத்துக்கொள்ளலாம்.

இந்த வழிபாட்டை கட்டாயம் தினம்தோறும் செய்ய வேண்டும். காலை 8 மணிக்கு முன்பாக செய்து விடுங்கள். சூரிய உதயத்திற்கு பின்பும் செய்யலாம் தவறு கிடையாது. அதாவது பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. தினமும் காலையில் எழுந்ததும் சுத்தமாக குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, சிவலிங்கத்திற்கும் நந்திதேவருக்கும் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். அபிஷேகம் என்றால் பெரிய அளவில் செய்ய வேண்டும் என்று அர்த்தம் இல்லை. தினம்தோறும் சுத்தமான தண்ணீரில், இரண்டு துளசி இலைகளை போட்டு, சிவபெருமானின் மனம் குளிர அபிஷேகம் செய்துவிட்டு, மஞ்சள் குங்கும பொட்டு வைத்து, பூ, வைத்து மனதார உங்களுக்கு இருக்கும் கஷ்டத்தை சொல்லி வேண்டிக் கொண்டாலே போதும்.

துயரங்கள் நிச்சயம் குறையும். இந்த அபிஷேகத்தை செய்யும்போது ‘ஓம்’ என்னும் மந்திரம் உங்கள் மனதில் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். வேறு எந்த சலனமும் இருக்கக் கூடாது. தண்ணீரைத் தவிர்த்து, உங்களால் பசும்பால், பன்னீர், வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்ய முடிந்தாலும் கூட தினம்தோறும் ஒவ்வொரு பொருட்களை வைத்து அபிஷேகம் செய்து கொள்ளலாம். அதிலும் தவறு கிடையாது. சிவபெருமானின் உச்சி குளிர வேண்டும். அது மட்டும் அவசியம். இதற்கு சுத்தமான தண்ணீரும், நம்பிக்கையான மனதும், உண்மையான பக்தியும் இருந்தால் மட்டுமே போதுமானது. தினந்தோறும் இரண்டு டைமண்ட் கற்கண்டுகளை நெவேதனமாக வைத்து விடுங்கள். அபிஷேகம் செய்த பின்பு சிவபெருமானின் மனம் குளிர்ந்த பின்பு, உங்களது வேண்டுதலை வைத்து வாருங்கள். பல வருஷமா உங்களுக்கு தீராத கஷ்டம் இருந்தாலும், அதற்கு தீர்வு கிடைக்கும் இந்த வழிபாட்டை மட்டும் நீங்க முயற்சி செய்து பாருங்கள்.