நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் பச்சை கற்பூர தீபத்தை எப்படி ஏற்றுவது ?? நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா ??

பச்சைக் கற்பூரத்தின் மகிமை என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் இந்த பொருளை முறையாக பயன்படுத்தினால் மட்டுமே நல்ல பலனை பெற முடியும். பச்சை கற்பூரத்தை அனாவசியமாக எந்த ஒரு பரிகாரத்திற்கும் பயன்படுத்தி விடக்கூடாது. ஏனென்றால் தவறான முறையில் இந்த பச்சை கற்பூரத்தை பயன்படுத்துவதன் மூலம், நமக்கு கிடைக்கக்கூடிய பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. யாரும் பயப்பட வேண்டும் என்பதற்காக இப்படி சொல்லப்படவில்லை. தவறான முறையில் இந்த பச்சை கற்பூரத்தை பயன்படுத்துவதன் மூலம் எந்த ஒரு பாதிப்பும் யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான். சரி. இந்த பச்சை கற்பூரத்தை வைத்து வீட்டில் தீபம் ஏற்றுவதன் மூலம் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.

பச்சை கற்பூரத்தை வைத்து வீட்டில் தீபத்தை எப்படி ஏற்றுவது? இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். முதலில் நாட்டு மருந்து கடைகளில் இருக்கும் பச்சை கற்பூரத்தை வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். பச்சை கற்பூரத்தை நம் கைகளிலேயே சிறிதாக நொறுக்கிக் கொள்ளலாம். அதாவது தூள் செய்து கொள்ள வேண்டும். எண்ணெயில் முழுமையான பச்சை கற்பூரத்தை போட்டால் அது கரையாது. தூளாக்கிய பச்சை கற்பூரத்தை தீபம் ஏற்றும் நல்லெண்ணெய் பாட்டிலுக்குள் போட்டு விட வேண்டும். சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை எடுத்துக் கொண்டால் போதும். ‘நிறைய பச்சைக் கற்பூரத்தை எண்ணெயில் போட்டால் தான் நிறைய பலன் கிடைக்கும். குறைவாக பச்சை கற்பூரத்தை எண்ணெயில் போட்டால் குறைவான பலன் கிடைக்கும்’. என்றெல்லாம் கிடையாது. சிறிதளவு பச்சை கற்பூரத்தை நீங்கள் தீபமேற்றும் நல்லெண்ணையில் கலந்து விட்டாலே போதுமானது.

அதன் பலனை நீங்கள் கண்டிப்பாக பெற முடியும். நல்லெண்ணெயுடன் பச்சைகற்பூர தூளை கலந்து விட்டு நன்றாக குலுக்கி விட்டுக் கொள்ளுங்கள். பச்சை கற்பூர தீபம் ஏற்றும் நல்லெண்ணெய் தயார். அவ்வளவுதான். உங்கள் வீட்டு பூஜை அறையில் தினம்தோறும் தீபம் ஏற்றும் போது, நீங்களே தயாரித்த பச்சைக்கற்பூர எண்ணெயை பயன்படுத்தி தீபம் ஏற்றிக் கொள்ளுங்கள். எண்ணைய் தீர்ந்துவிட்டால் திரும்பவும் இதே முறையைப் பயன்படுத்தி நல்லெண்ணையில் பச்சை கற்பூரத்தை கலந்து கொள்ளுங்கள். இந்த எண்ணெயில் தீபம் ஏற்றும் போது, ஒரு நல்ல நறுமணம் உங்கள் வீடு முழுவதும் பரவி இருக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியும், எதிர்மறை ஆற்றலும் தானாகவே விலகும். எந்த ஒரு மன கவலையும் இருக்காது.

சிலரது வீட்டில் அடிக்கடி பூஜை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும். அதாவது வெள்ளிக்கிழமை வரும்போது, நல்ல நாள் கிழமை என்று வரும்போது பூஜை செய்ய முடியாத சூழ்நிலை பெண்களுக்கு ஏற்பட்டுவிடும். மாதவிடாய் நாட்கள் வருவது இயற்கைதான். ஆனால் சில பெண்களுக்கு தொடர்ச்சியாக பூஜை செய்ய முடியாது சூழ்நிலை வரும். அதாவது நல்ல நாட்களில் மாதவிலக்கு வந்துவிடும். இப்படிப்பட்ட வீட்டிலும் இந்த முறைப்படி தீபமேற்றி வழிபடும்போது, உங்கள் வீட்டில் பூஜை நாட்கள் தவறவே தவறாது, என்பதை நீங்கள் தொடர்ச்சியாக இந்த எண்ணெயில் தீபமேற்றி பலனை அடைந்தால் தான் உணர முடியும். எந்தவிதமான பயமும் இல்லாமல் பச்சைக் கற்பூர எண்ணெயில் தீபம் ஏற்றி பாருங்கள். கைமேல் நிச்சயம் பலன் உண்டு. வீட்டில் இருக்கும் சண்டை சச்சரவுகள் நீங்கி மன அமைதி பெறுவதை உங்களாலேயே உணர முடியும்.