பச்சைக் கற்பூரத்துடன் இந்த செடியின் இலையை சேர்த்து வைத்தால், உங்கள் கையில் இருக்கும் பணம் விரைவாக இரண்டு மடங்காகும் …

கையில் அதிகப்படியான பணம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் இப்படிப்பட்ட பரிகாரங்களை செய்து தான், பணக்காரராகின்றார்களா, என்ற சந்தேகம், பரிகாரங்களை தொடர்ந்து படிப்பவர்கள் மனதில் எழத்தான் செய்யும். பிறப்பிலேயே யோகத்தோடு பிறப்பவர்களுக்கு, பரிகாரங்கள் செய்து தான் பணம் சேர்க்க வேண்டுமென்ற அவசியம் இருக்காது. ஆனால், அவர்கள் தங்களிடம் உள்ள பணத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக, சில பல பரிகாரங்களை செய்து வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் நமக்கு அதிகப்படியான பணம் சேர வேண்டும் என்றாலும், நம் கையில் இருக்கும் இருப்பு, இரட்டிப்பாக்க வேண்டும் என்றாலும், என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தன ஆகர்ஷன சக்தி அதிகமாக இருக்கக்கூடிய ஒரு பொருள். நேர்மறை ஆற்றலை ஈர்த்து தன்னை சுற்றி எப்போதுமே லட்சுமி கடாட்சத்தை வைத்திருக்கும் ஒரு பொருள். இந்த இரண்டு பொருட்களை வைத்து தான் இந்த பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. நாம் எல்லோருக்கும் தெரிந்த, சுலபமாக கிடைக்கக்கூடிய, புதினா இலை மற்றும் பச்சை கற்பூரம். பரிகாரத்திற்கு இந்த 2 பொருட்களே போதும்.புதினா இலையை லேசாக கசக்கும் போது, அதிலிருந்து வெளிவரக்கூடிய வாசம் நேர்மறை ஆற்றலை அதிகரித்து தன ஆகர்ஷன சக்தியை உண்டு பண்ணுகின்றது. இந்த புதினா இலைகளோடு, பச்சை கற்பூரம் சேரும்போது பரிகாரத்தின் சக்தி, நேர்மறை ஆற்றல் நிறைந்து, இரண்டு மடங்காக பலனை கொடுக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. பச்சை கற்பூரத்தோடு 5 புதினா இலைகளை, லேசாக கசக்கி வாசம் வரும் அளவிற்கு கசக்கினால் மட்டும் போதும், ஒரு சிறிய டப்பாவில் இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்.

பச்சை கற்பூரம் கரைந்த பின்பு புதியதாக வைத்தால் போதும். புதினா இலைகளை மட்டும் வாசத்தை இழந்து, வாடிய உடன் மாற்றிவிட வேண்டும். ஒரு சிறிய டப்பா, அதில் 5 புதினா இலைகள், ஒரு பச்சை கற்பூர துண்டு அவ்வளவுதான். இதை ஒரு டப்பாவில் போட்டு, திறந்தபடி பணம் வைக்கும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம். சில பேருக்கு கடைகளில் வியாபாரம் சரியாக நடக்காது. கண்திருஷ்டி அதிகமாக இருக்கும். நன்றாக நடந்துகொண்டிருந்த வியாபாரம் திடீரென்று முடங்கிப் போயிருக்கும். இப்படியாக பல பிரச்சனைகள் உங்களுடைய சொந்த தொழிலிலோ அல்லது அலுவலகத்திலோ இருந்தால், நீங்கள் தொழில் செய்யும் இடமாக இருந்தாலும், அலுவலகமாக இருந்தாலும், ஒரு கண்ணாடி டம்ளரில் நல்ல தண்ணீரை நிரப்பி, அதில் இரண்டு புதினா இலைகளை கிள்ளிப் போட்டு, ஒரு பச்சைக் கற்பூரத்தையும் அந்த தண்ணீரில் கரைத்து விடுங்கள்.

இப்படி செய்யும்பட்சத்தில் அந்த இடத்தில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கப்பட்டு, கண் திருஷ்டி நீங்கி உங்களுடைய வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. தினம்தோறும் அந்த டம்ளரில் உள்ள தண்ணீரையும் புதினாவையும் மாற்றிவிட வேண்டும். சுலபமான பரிகாரம். பலன் கொடுக்கும் பரிகாரம். 5 நாட்கள் தொடர்ந்து செய்து பாருங்கள். உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருப்பது போல் தெரிந்தால், இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து பலன் அடையலாம். இல்லாவிட்டால் பரிகாரத்தை நிறுத்திவிடலாம் அவ்வளவு தான். முன்னேற்றத்திற்காக சின்ன சின்ன பரிகாரங்களை, முயற்சி செய்து பார்ப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.