பணத்துக்காக தானே இப்படி எல்லாம் பண்றீங்க வெளுத்து வாங்கிய அனிதா சம்பத்தின் கோபமான பதிவுக்கு… ஜூலியின் ரியாக்சன் …

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது சமீபத்தில் நிறைவடைந்த இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் அதிகம் விமர்சிக்க பட்டார்கள் அதிலும் குறிப்பாக அர்ச்சனா ரம்யா பாண்டியன் அனிதா சுசித்ரா சம்யுக்த்தா என்று பல்வேறு போட்டியாளர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் பெரிதும் சமூக வலைத்தளங்களால் விமர்சிக்கப்பட்டு வருகின்றனர் அவர்களை விமர்சிப்பது மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினரையும் கேலி கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதனால் ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பேட்டிகளில் கூட பங்கு கொள்ளவில்லை இந்நிலையில் அனிதா சம்பத் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் யூடியூப் சேனல்கள் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார் யூடியூப் சேனல்கள் சிலர் தான் கூறிய கருத்துக்களை வேறு விதமாக தலைப்பிட்டு மக்களிடத்தில் வெறுப்பை எனக்கு தேடித்தந்த வருகின்றனர் இதனால்தான் நான் எந்த யூடியுப் சேல்களுக்கும் பேட்டிகள் அளிக்கவில்லை எனவும் கூறியிருக்கிறார்.

தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டுள்ள அனிதா யூடியூப் ரிவிய்வு என்ற பெயரில் நம்மளை நெகட்டிவாக பேசி வெறுப்பை உண்டாக்கி சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர் என கோபமாக பதிவிட்டுள்ளார் எங்களை விட ரிவிய்வு வீடியோக்களை போடுபவர்கள் தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என அனிதா சம்பத் பதிவிட்டிருக்கிறார் அதனை இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்துள்ள ஜூலி என்று பதிவிட்டு அதை ஷேர் செய்தது குறிப்பிடத்தக்கது.