பணத்தை ஈர்க்கும் இந்த 4 பொருட்களையும் ஒன்றாக சேர்த்து இப்படி வைத்தால் நம் வீட்டிற்குள் பணம் வந்து கொண்டே இருக்கும் தெரியுமா !!

பணத்தை ஈர்க்க, பணமானது நம் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருக்க, பண வரவு அதிகரிக்க, பணத்தட்டுப்பாடு நீங்க, பணத்தை வசியம் செய்ய, இப்படி பணத்திற்காக பல பரிகாரங்கள், பலவகையில் சொல்லப்பட்டிருந்தாலும் பணத்தேவைகள் மட்டும் என்றுமே பூர்த்தி அடைவது இல்லை. ஏன் என்றால் இன்றைய சூழ்நிலையில் அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கே பெரும்பாடாக இருக்கிறது. ‘எதை தின்றால் பித்தம் தெளியும்’ என்ற அளவிற்கு நம் நிலமை மோசமாகிக் கொண்டே போகிறது. என்றால் அது பொய்யாகாது. எந்த பரிகாரத்தை செய்தால், நம்மிடம் இருக்கும் பணத்தை நம்மிடமே தக்க வைத்துக் கொள்ள முடியும்? என்ன பரிகாரம் செய்தால் நமக்கு வரவேண்டிய பண தொகையானது எந்தவித தடையும் இல்லாமல் நம்மை வந்து அடையும். என்பதற்கான தேடல் நம்மிடம் இருந்து கொண்டே இருக்கிறது.

காரணம் பற்றாக்குறை. உலகம் ஓடுகின்ற ஓட்டத்திற்கு ஈடு கொடுத்து ஓட வேண்டுமென்றால் சாமர்த்தியத்தோடு சேர்த்த சாதுர்யமும் அவசியம் தேவைப்படுகிறது. வேகத்தோடு சேர்ந்த விவேகமான யோசனைகளும் அவசியமாக தேவைப்படுகிறது. பணத்தை ஈர்க்கும் சாதுரியமான ஒரு பரிகாரத்தை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். பரிகாரங்கள் எதுவும் கண்மூடித்தனமாக சொல்லப்படுவது இல்லை. சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள எல்லா பரிகாரத்திற்கு ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. அதை நாம் உணர்வதற்கு எடுத்துக் கொள்ளக்கூடிய நேரம் தான் சற்று தாமதமாகவே தவிர, சாஸ்திரங்களும், சம்பிரதாயங்களும், பரிகாரங்களும் என்றுமே பொய்யானது இல்லை. இந்தப் பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள்.

வெள்ளைத் துணி(11 துண்டுகள்), பன்னீர், 6 தாமரை மணி, 6 முழு ஏலக்காய், 6 மொச்சை கொட்டை, 6 டைமண்ட் கற்கண்டு. தாமரை மணியை, தாமரை மணி மாலையாக வாங்கிக் கொள்ள வேண்டும். பதினோரு வாரத்திற்கும் அதிலிருந்து 6 மணிகளை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மேற்குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தும் தனித்தனியாக பார்த்தாலும், எல்லா பொருட்களும் பணத்தை ஈர்க்கும் தன்மை கொண்டதுதான். மகாலட்சுமிக்கு விருப்பமான பொருட்கள்தான். இந்தப் பொருட்கள் எல்லாம் ஒன்று சேரும் போது நம் வீடும் தன ஆகர்ஷன சக்தி கொண்ட வீடாக மாறும் என்ற நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். முதலில் நீங்கள் வாங்கிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து, காய வைத்துக் கொள்ள வேண்டும். ஒரே நாளில் 11 துணிகளையும் நனைத்து காய வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு துணியாக எடுத்து ஒவ்வொரு வாரமும் பரிகாரத்திற்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

பன்னீரில் நனைத்து காயவைத்த வெள்ளைத் துணியில், 6 தாமரை மணி, 6 முழு ஏலக்காய், 6 டைமண்ட் கற்கண்டு, 6 மொச்சை இவைகளை ஒன்றாக வைத்து ஒரு முடிச்சாக கட்டி கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு செய்வது மிகவும் நல்ல பலனைத் தரும். முடிச்சாக கட்டிய அந்த மூட்டையை உங்கள் வீட்டின் வடகிழக்கு மூலையில் மாட்டிவிட வேண்டும். இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யும்போது உங்களை யாரும் பார்க்கக்கூடாது. வடகிழக்கு மூலையில் மாட்டி வைத்திருக்கும் மூட்டையையும் யார் கண்களுக்கும் தெரியக்கூடாது. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வரை அந்த முடிச்சு அப்படியே இருக்க வேண்டும். மறுவெள்ளிக்கிழமை அன்று, பழைய மூட்டையை கொண்டு போய், அரச மரத்து அடியில் போட்டு விட வேண்டும். அதன் பின்பு, முதலில் மூட்டையை தயார் செய்தது போல், ஒரு புதிய முடிச்சை தயார்செய்து, மீண்டும், வீட்டில் வடகிழக்கு மூலையில் கட்டினால் போதும். இப்படியாக தொடர்ந்து 11 வாரம் இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள். முதல் வாரம் முடியும் போதே நல்ல மாற்றங்களை உங்களால் உணர முடியும்.