பணத்தை ஈர்க்கும் பச்சை கற்பூரம் இதையெல்லாம் கூட செய்யுமா ?? ஆச்சரியமா தகவலா இருக்கே !!

பச்சை கற்பூரம் என்றாலே பணத்தை ஈர்க்கும் சக்தி படைத்தது என்பது பொதுவாக அனைவராலும் நம்பப்பட்டு வருகிறது. காலம் காலமாக செல்வம் கொழிக்கும் இடங்களில் எல்லாம் இந்த பச்சைக் கற்பூரம் முக்கிய பங்கு வகிக்கிறது. சாதாரண கற்பூரம் என்பது வேறு. அதை நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூஜைக்கான கற்பூரம். ஆனால் பச்சை கற்பூரம் என்பது முற்றிலும் வேறு. பார்ப்பதற்கு கல்கண்டு போல் காணப்படும் இந்த பச்சை கற்பூரம் எண்ணற்ற சக்திகளை தன்னுள்ளே கொண்டுள்ளது எனலாம். பச்சை கற்பூரம் நிகழ்த்தும் அதிசயங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை நீங்கள் பணம் வைக்கும் இடங்களில் போட்டு வைத்தாலே போதும்! பணம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை.

பெரிய பெரிய தொழிலதிபர்கள், நகை கடை வைத்திருப்பவர்கள் இந்த பச்சை கற்பூரத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். பணம் அதிகம் புழங்கும் இடங்களில் பச்சை கற்பூரம் இருந்தால் பணவரவை தடை செய்யும் கெட்ட அதிர்வலைகளை நீக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. அதனால் தான் தொடர்ந்து பணம் வைக்கும் இடங்களில் பச்சை கற்பூரம் இடம் பெற்று விடுகிறது. பச்சை கற்பூரத்தை எப்பொழுதும் மொத்தமாக வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் வைத்திருக்கக் கூடாது. ஒரு சிறு துண்டு பச்சை கற்பூரத்தை தண்ணீரில் போட்டு, சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து வீட்டு வரவேற்பறையில் அனைவருக்கும் தெரியும்படி வைத்து விடுங்கள். இதனால் வீட்டிற்கு வரும் அடுத்தவர்களின் பொறாமை கண்கள் வீட்டை தாக்குவதில்லை. கண் திருஷ்டி நீங்க இது சிறந்த பரிகாரம்.

எப்பொழுதும் உங்கள் பர்ஸ் அதில் கைப்பையில் ஒரு சிறு துண்டு பச்சை கற்பூரம் வைத்திருப்பது பண சேர்க்கையை உண்டு பண்ணும். பச்சை கற்பூரம் தெய்வீக மணம் வீசக்கூடியது. அவற்றில் இருக்கும் தெய்வீக சக்தி செல்வச் செழிப்பு உண்டாக்கும் என்பது ஐதீகம். நீங்கள் பணம் வைக்கும் பெட்டி அல்லது பீரோவில் ஒரு சிறு துண்டு கற்பூரத்தை பணத்தின் மேல் போட்டு வைப்பது பணவரவை ஈர்த்து தரும். பண வரவை அதிகரிக்கச் செய்யும் பச்சை கற்பூரம் உடலுக்கும் நன்மை செய்யக் கூடியவை. இனிப்பு பதார்த்தங்கள் செய்யும் கடைகளில் லட்டு போன்ற இனிப்பு வகைகளுக்கு சிறிதளவு பச்சை கற்பூரம் சேர்த்து செய்யப்படுகிறது. நம் வீட்டில் பூஜைக்கு தயார் செய்யும் சர்க்கரை பொங்கலில் ஒரு சிறு துண்டு பச்சை கற்பூரம் சேர்த்து செய்யலாம். பச்சை கற்பூரம் சளி, இருமல் போன்றவற்றை முற்றிலும் நீக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அதை பயன்படுத்தும் அளவு என்பது மிகக் குறைந்த அளவில் இருப்பது தான் நல்லது. பச்சை கற்பூரம் சிறிதளவு தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவினால் பொடுகு தொல்லை நீங்கும்.

குறிப்பாக பூஜை அறையில் ஒரு சிறு செம்பு அல்லது பித்தளை கிண்ணத்தில் 4 துண்டு பச்சை கற்பூரத்தை எப்போதும் வைத்திருப்பது லட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணும். முதல் மாதம் சம்பளம் வாங்குபவர்கள் அல்லது மாதாமாதம் நீங்கள் சம்பளம் வாங்கும் பொழுதும் கூட பூஜை அறையில் இருக்கும் இந்த பச்சை கற்பூரத்தின் மீது பணத்தை வைத்து அதன்பின் எடுத்து செலவு செய்தால் செல்வம், பணம் தடையின்றி வந்து கொண்டே இருக்கும். வியாபாரம் அல்லது தொழில் செய்யும் ஸ்தலங்களில் கல்லாப்பெட்டியில் சிறிதளவு இந்த பச்சைக் கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் லாபம் பன்மடங்கு பெருகும். ஒரு சில விஷயங்கள் நம் கற்பனைக்கு எட்டாத சக்திகளை கொண்டிருக்கும். அதுபோன்ற ஒரு சக்தி தான் இந்த பச்சை கற்பூரத்தில் நிறைந்துள்ளது. அதனால் நீங்களும் ஒரு முறை பச்சை கற்பூரத்தை இந்த முறைகளில் பயன்படுத்தி பார்த்து பலன் அடையலாம்.