பணம் உங்கள் கையில் தங்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதா ?? வேண்டாம் என்று சொன்னாலும் பணம் உங்களைத் தேடி வரும் அதிசயம் !!

எவ்வளவு பணத்தை சம்பாதித்தாலும், மனிதனுக்கு அதனுடைய தேவை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றது. இந்த மாதம் 10,000 ரூபாய் வருமானம் வருகிறது. 20,000 ரூபாய் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று மனது சொல்லும். அடுத்த மாதம் 20,000 ரூபாய் வந்தாலும் அது கட்டாயம் பத்தாது. இன்னும் அதிகம் வேண்டும் என்றுதான் நம்முடைய மனம் நினைத்துக் கொண்டே இருக்கும். இதற்கு என்னதான் முடிவு? பணத்தை பட்ஜெட் போட்டு சிக்கனமாக தானே செலவு செய்கின்றோம்? ஏன் நம் கைகளில் அது தங்கவே மாட்டேன் என்று சொல்கிறது? இதில் என்ன சூட்சம ரகசியம் தான் அடங்கியுள்ளது! என்று தெரியவில்லை. நீங்களும் இப்படித்தானே புலம்புகிறார்கள். உங்களுக்கும் பணத்தை ஈர்க்கும் சூட்சமத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது அல்லவா? தாராளமாக தெரிந்துக் கொள்ளலாம். வாருங்கள்! இந்த மாதம் உங்களுக்கு செலவுக்கான பட்ஜெட் 10,000 ரூபாய். ஆனால் உங்களுக்கு கிடைத்த வருமானம் ஒரு லட்சம் ரூபாய். இப்படி ஒரு தலைகீழ் மாற்றம் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? எல்லோரும் சந்தோஷ மழையில் நனைவோம் அல்லவா? இந்த மாற்றத்தை கட்டாயம் அனைவரது வாழ்விலும் கொண்டு வரலாம்.

ஆனால் இதற்கு என்ன செய்வது? நீங்கள் செய்யும் செலவினை பார்த்து பார்த்து, செலவு செய்தால் பணம் உங்கள் கைகளில் தங்கி விடாது. பணமும் பலமடங்கு பெருகாது. நீங்கள் செலவு செய்யும் நோக்கம் தான் உங்களுடைய வருமானத்தை அதிகப்படுத்துகிறது. நீங்கள் ஒரு தொழிலை ஆரம்பிக்கும் சமயத்தில் கூட, அதிலிருந்து கிடைக்கப்படும் லாபத்தை எதற்காக செலவு செய்யப் போகிறீர்கள் என்ற நோக்கம்தான் அடங்கியிருக்கும். நீங்கள் தொடங்கக் கூடிய தொழிலில் இருந்து 50 குடும்பங்களை காப்பாற்ற போகிறீர்கள். என்கிற எண்ணத்திலும், நோக்கத்திலும் தொழில் தொடங்கினால் நீங்கள் லாபமாக 10,000 ரூபாய் கேட்டாலும் 50,000 ரூபாய் உங்கள் கைகளுக்கு கிடைக்கும். இப்படி யோசிக்காமல், நமக்கு வரக்கூடிய வருமானத்தை வைத்து எப்படி சிக்கனமாக பட்ஜெட் போட்டு செலவு செய்வது. இந்த செலவு வந்து விடுவோமா? அந்த செலவு வந்துவிடுமோ? என்ற அந்த பயம், உங்களுக்கு வரக்கூடிய வருமானத்தை பிரபஞ்சத்திலிருந்து வர விடாது. நிறுத்துவிடும். காரணம், அந்த பதட்டம்.

பதட்டமில்லாமல் பட்ஜெட் போட்டு வாழ முடியுமா? முடியும். “இவ்வளவு செலவு எனக்கு இருக்கிறது. இந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பணம் தேவை”. என்ன செய்வது? என்று யோசித்து முயற்சி செய்து கொண்டே இருங்கள். பணம் தானாக வந்து கொண்டே இருக்கும். நீங்கள் செலவு செய்யும் நோக்கமானது அடுத்தவர்களுக்கு ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். உங்களுக்கு கஷ்டம் வருகிறது. பணம் கைகளில் தங்க வில்லை என்றால் உங்களுக்கு சூட்சமம் தெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் நீங்கள் செலவு செய்யும் பணமானது அடுத்தவர்களுக்கு கொடுக்கும் இடத்தில்தான் இருக்க வேண்டுமே தவிர, நீங்கள் பெறுபவர்களாக இருக்கக் கூடாது. இதற்காக நமக்காக சொத்து சுகங்களை சேர்த்து வைத்துக் கொள்ளக் கூடாதா என்ற விதண்டாவாத கேள்வியெல்லாம் எழுப்பக்கூடாது. இவ்வளவு சொத்துக்களை நீங்கள் வாங்குவதன் மூலம், அடுத்தவர்களுக்கு என்ன பயன் இருக்கிறது?

என்பதை சிந்திக்கும் அந்த நோக்கம் உங்களை மேலும் மேலும் சொத்தை சேர்க்க வைக்கும். உங்களுக்கு கிடைக்கப்படும் வருமானத்திலிருந்து நீங்கள் எப்படி செலவு செய்யப்போகிறீர்கள் என்பதற்கான நோக்கத்தை தான் பிரபஞ்சம் உற்றுநோக்கி கொண்டிருக்கின்றது. அந்த நோக்கத்தின் சக்தியை, பிரபஞ்சத்தின் சக்தியானது பெற்று, உங்களிடம் பணமாக தருகிறது என்பதை மறந்துவிடாதீர்கள். இது ஒரு சின்ன சூட்சுமம் தான். எவ்வளவு பணம் வந்தாலும் தனக்கு தனக்கு என்று எடுத்து வைத்து, பார்த்து பார்த்து செலவு செய்தால் கூட கடைசியில் பார்க்கும்போது உங்கள் கல்லாபெட்டி காலியாகத்தான் இருக்கும். தாராளமாக செலவு செய்யுங்கள். ஆனால் அந்த நோக்கமானது அடுத்தவர்களை சந்தோஷப் படுத்துவதற்காக இருக்க வேண்டுமே தவிர, சுயநலமாக இருக்கக்கூடாது. பிரபஞ்சம் உங்களை உற்றுநோக்கி கொண்டிருக்கிறது. உங்கள் கையில் இருக்கும் பணம் வீண் விரையம் ஆகிவிடுமோ, என்று ஒரு பதட்டம் இருக்கின்றது அல்லவா?

அந்தப் பதட்டம் நேரடியாக பிரபஞ்சத்திற்கு சென்று, கையில் இருக்கும் பணத்தை அனைத்தையுமே காலி செய்துவிடும். பதட்டம் வேண்டாம். எந்தவித பதட்டமும் இல்லாமல் நல்ல நோக்கத்தோடு செலவு செய்யும் பணமானது இரட்டிப்பாக, பிரபஞ்சம் உங்களது கைகளில் திருப்பிக் கொடுத்து விடும். நீங்கள் சோதித்து பாருங்கள். இந்த ஒரு சின்ன சூட்சமத்தை நீங்கள் பின்பற்றித்தான் பாருங்களேன். எடுத்துக்காட்டாக, வீட்டை கட்டித்தரும் ஒரு காண்ட்ராக்டர், இந்த வீட்டைக் கட்டி தந்தால் ஒரு லட்சம் கிடைக்கும் என்ற எண்ணத்தோடு வேலை செய்வார். கட்டாயம் அவருக்கு அந்த ஒரு லட்சம் மட்டும்தான் கிடைக்கும். இந்த வீட்டில் வாழ்பவர்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற நினைப்போடு, அடுத்தவர்கள் வாழக்கூடிய வீட்டைக் கூட தான் வாழப்போகும் வீடாக கருதி சின்ன சின்ன நுணுக்கங்களை கூட பார்த்து பார்த்து கட்டும் காண்ட்ராக்டராக இருந்தால், அவர் கேட்காமலேயே, அவருக்கு 10 வேலையை வாங்கித் தரும். காரணம் அவருடைய நோக்கம் தான். பணம் கொட்ட தானே செய்யும். இப்போது உங்களுக்கு சூட்சமம் புரிந்திருக்கும் அல்லவா. இந்த சூட்சமம் பல பேருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் யார் தான் பின்பற்றுகிறார்கள்?