பணம் மட்டும் தான் வேண்டும் என்று மனம் சொல்லுகின்றதா ?? பணத்தைத் தவிர உங்களுக்கு வேறு எதன் மீதும் நம்பிக்கை இல்லையா ?? நீங்க மட்டும்தான் இத படிக்கணும் !!

சில பேருக்கு மனம் சொல்லிக் கொண்டே இருக்கும், ‘பணம் மட்டும் தான்’ வாழ்க்கைக்கு வேண்டுமென்று! இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய வாழ்க்கை போகும் பாதையில், எதையுமே நம்ப மாட்டார்கள்! தங்களுடைய குறிக்கோளை மட்டும் இலக்காகக் கொண்டு, பரிகாரங்கள், சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் எதையுமே பார்க்காமல், தங்களுடைய ஜாதக கட்டம் என்ன சொல்கிறது என்பதை கூட கேட்காமல், பணம்! பணம்! பணம்! என்று வெறித்தனத்தோடு ஓடிக் கொண்டிருப்பவர்கள் ஏராளமானோர்! கால சூழ்நிலை அப்படி ஆகிவிட்டது. யாரையும் குறை கூறிவிட முடியாது. இப்படி ஜாதக கட்டத்தில் பணம் அதிகமாக சம்பாதிக்கும் யோகம் இல்லாதவர்களுக்கும் கூட, பணமழை பொழிய வேண்டும் என்றால் என்ன செய்வது? உங்களுக்கு பரிகாரங்கள் மீதும் நம்பிக்கை இல்லை, ஜாதகத்தின் மீதும் நம்பிக்கை இல்லை என்றாலும் பரவாயில்லை. இதை ஒரு பிராயச்சித்தமாக செய்துதான் பாருங்களேன்! பணத்தை சேர்ப்பதற்கு இன்று நாம் பார்க்கப் போவது ஒரு உப்பு பரிகாரத்தை பற்றித்தான்.

ஆனால், இது மற்ற பரிகாரங்களை போன்று தாந்திரீக முறையும் அல்ல. மாந்திரீக முறையும் அல்ல! உங்களது கர்மவினைகளை சுத்தமாக மாற்றக்கூடிய பிராயச்சித்தம் என்று சொல்லலாம். சரி, பிராயச்சித்தத்தை எப்படி செய்வது என்று பார்த்து விடலாமா? மண் குடுவை இதற்கு கட்டாயம் தேவை. மண்ணினால் செய்யப்பட்ட சிறிய வடிவில் இருக்கும் பானையாக இருந்தாலும் சரி, அகலமான சட்டியாக இருந்தாலும் சரி. கொஞ்சம் சிறிய அளவில் புதியதாக வாங்கிக் கொள்ளுங்கள். முதலில் அதை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி விட்டு, உலர வைத்து விட்டு, மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து, பூ வைத்து, அலங்கரித்துக் கொள்ளுங்கள். அதற்குள் கல்லுப்பு கொட்டி நிரப்பிக்கொள்ள வேண்டும். கொஞ்சம் கூட நீங்கள் வைக்கப்போகும் மண் குடுவையில், குறைவில்லாமல் உப்பை கொட்டி நிரப்பி விடுங்கள். மாயிலைகள் 3, அந்த கல்லுஉப்புக்குள் சொருகி வைத்து விட்டால் போதும்.

உங்கள் வீட்டில் எந்த இடத்தில் வேண்டுமென்றாலும், நீங்கள் தயார் செய்த மண் குடுவையை வைத்துக்கொள்ளலாம். வீட்டில் தினந்தோறும் விளக்கேற்றி தூபம் காட்டும் பழக்கம் இருக்கும் அல்லவா? அப்படி தீபமேற்றும் போது அந்த தூரத்தை, இந்த கல்லுப்பு பானைக்கும் காட்டிக் கொள்ளலாம். அட, சாமி கும்பிட்ர பழக்கமே உங்களுக்கு இல்லையா, விட்ருங்க! அது ஒரு ஓரமா அப்படியே இருக்கட்டும். 11வது நாள், இந்த கல் உப்பை வைத்து என்ன செய்யப்போகின்றோம்? இதுதாங்க உண்மையான பரிகாரம். உங்கள் கையாலேயே ஏதாவது ஒன்றை சமைத்து, அந்த சாப்பாடில், உங்கள் கைகளிலேயே இந்த கல்லு பில் இருந்து வைகை பிடி அளவு எடுத்து போட்டு, அந்த பொருளை எல்லோருக்கும் தானமாக கொடுக்க வேண்டும். அதாவது, நீங்கள் அன்னதானம் செய்யப் போகின்ற சாப்பாட்டிற்கு, மண் குடுவையில் இருந்து உப்பை உங்கள் கையாலேயே, எடுத்து போட்டு, சமைத்து தானம் செய்து விட்டீர்கள் என்றால் உங்களுக்கு இருக்கக்கூடிய, பணவரவை தடுக்கக்கூடிய, எந்த பிரச்சினையாக இருந்தாலும், அது உங்களுடைய கர்ம வினையாக இருந்தாலும், அது உடனடியாக நீங்கிவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது. சாப்பாட்டை நீங்கள் தான் சமைக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை.

அந்த சமையலை யார் வேண்டு மென்றாலும் சமைக்கலாம். ஆனால், கட்டாயம் இந்த உப்பை, ‘யார் அதிக பணம் வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ’ அவர்கள் கைகளால் எடுத்து தான் போட வேண்டும் என்பது மட்டும் குறிப்பிடத்தக்க ஒன்று. உங்கள் சக்திக்கு தகுந்தவாறு அன்னதானம் செய்து கொள்ளலாம். வெறும் 3 பேருக்குத் தான் சாப்பாடு போட முடியும் என்றால், அந்த மூன்று பேருக்கு மனதார வயிறார சாப்பாடு போட்டு விடுங்கள். இல்லை உங்களால் 300 பேர் கொண்ட ஆசிரமத்திற்கு ஒருவேளை சாப்பாடு கொடுக்க முடியும் என்றால், அங்கு இருக்கும் அனைவருக்கும் அந்த உப்பைப் சமையலுக்கு பயன்படுத்தி, ஒரு முறை அன்னதானம் செய்து விடுங்கள்! இந்த பிராயசித்த பரிகாரத்தை யார் வேண்டுமென்றாலும் செய்யலாம். சாமி கும்பிட்றவங்க, சாமி கும்பிடாதவங்க, பரிகாரங்கள் மேல் நம்பிக்கை உள்ளவர்கள், நம்பிக்கை இல்லாதவர்கள், மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள், இப்படியாக பிராயச்சித்தத்தை தேட, எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.