பணவரவிற்கு தடையாக இருக்கும், கண்ணுக்குத் தெரியாத, எப்படிப்பட்ட வாஸ்து பிரச்சனையையும் சரி செய்ய, உங்கள் வீட்டு பீரோவில் இந்த ஒரு பொருளை, இப்படி வைத்தாலே போதும் …

ஒருவருடைய வீட்டில் வாஸ்து சரியாக அமையவில்லை என்றால், அந்த வீட்டில் கட்டாயம் பணப் பிரச்சனை இருக்கத்தான் செய்யும். சரிசெய்யக்கூடிய வாஸ்து பிரச்சினைகள் என்றால், அதை சுலபமாக சரிசெய்து விடலாம். சிலரால் சில பிரச்சினைகளை சரி செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும். சிலருக்கு, என்ன பிரச்சனை என்றே தெரியாது. ஆனால் பண கஷ்டம் இருக்கும். கண்ணுக்குத் தெரியாத வாஸ்து வினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை கூட, பஞ்சபூதங்களால் சரி செய்து விட முடியும் என்று சொல்கிறது சாஸ்திரம். பஞ்சபூதங்களை சரியாக வழிநடத்த கூடிய சக்தி, பஞ்ச லோகத்திற்கு உண்டு. உங்களுடைய வீட்டில் பண பற்றாக்குறைக்கு, என்ன காரணம் என்றே தெரியவில்லை! ஆனால் வீண் விரையங்கள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. கடன் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது. பணம் சம்பந்தப்பட்ட எப்பேர்ப்பட்ட பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றால், என்ன செய்வது என்று நீங்கள் மன குழப்பத்தில் இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

மிக சுலபமான பரிகாரம் இது. மஹாலக்ஷ்மியை வேண்டி கொண்டு, செய்யக்கூடிய இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று விரிவாக தெரிந்துகொள்ளலாமா?இந்த பரிகாரத்தை செய்ய வளர்பிறையில் வரும் வெள்ளிக்கிழமையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். 108 ஒரு ரூபாய் நாணயங்களை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். போலி இல்லாத, அசல் பஞ்சலோக நாணயங்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். நகைக் கடைகளுக்கு சென்று, பஞ்சலோக நாணயங்கள் என்று கேட்டால் ஐந்து உலோகத்தால் செய்த, 5 நாணயங்களை கொடுப்பார்கள். ஒரு சிறிய, குட்டி விநாயகர் சிலை. இந்த பூஜைக்கு தேவையான பொருட்கள் இவ்வளவுதான். உங்கள் வீட்டு பூஜை அறையில் காலை 6.00 மணி அளவில், ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, மகாலட்சுமியை மனதார வேண்டிக் கொண்டு ஒரு சிறிய கிண்ணத்தில், 108 ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாணயமாக எடுத்து மகாலட்சுமியின் பாதத்தில் சமர்ப்பணம் செய்து ‘ஓம் மகாலட்சுமியை நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

108 முறை மந்திரத்தை உச்சரித்த பின்பு, மகாலட்சுமி பாதத்தில் இருக்கும் 108 நாணயங்களையும் எடுத்து, மீண்டும் கிண்ணத்திலேயே போட்டுவிட வேண்டும். அதன் பின்பாக கடையிலிருந்து வாங்கி வைத்திருக்கும் பஞ்சலோக நாணயங்களை, இந்த ஒரு ரூபாய் நாணயத்தின் மீது வட்ட வடிவில் அடுக்கி வைத்து விடுங்கள். அதன் நடுவே விநாயகப் பெருமானை வைத்துவிட்டு, உங்கள் வீட்டு பீரோவில், இந்த கிண்ணியை, வாஸ்து பகவானையும், மகாலட்சுமியையும், விநாயகப் பெருமானையும், குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு, அப்படியே எடுத்து வைத்து விட்டாலே போதும். உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய எப்பேர்ப்பட்ட வாஸ்து பிரச்சனையையும் நீக்கக் கூடிய சக்தி இந்த பஞ்சலோக நாணயத்திற்கும், அந்தப் பிள்ளைக்கும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே ஒரு வெள்ளிக்கிழமை இந்த வழிபாட்டை செய்து தான் பாருங்களேன். லட்ச லட்சமாக செலவு செய்து தீர்க்கமுடியாத, கண்ணுக்குத் தெரியாத பிரச்சனை கூட, காணாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கையோடு செய்ய வேண்டிய பரிகாரம் இது. அனைவரும் இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து, பலன் அடைய வேண்டும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.