பலமுறை முயற்சி செய்தும் இந்த ஒரு பிரச்சினைக்கு மட்டும் தீர்வு கிடைக்கவில்லையா ?? சக்தி வாய்ந்த இந்த இரண்டு பொருட்களையும் கொஞ்சம் வாயில போட்டுட்டு போங்க !!

சில பேருக்கெல்லாம் அதிர்ஷ்டம் என்பதே இருக்காது. ஒரு வேளைக்காக ஆயிரம் முறை அலைந்து திரிவார்கள். ஆனால், அந்த வேலை முடிந்த பாடாக இருக்காது. குறிப்பாக ஏதாவது ஒரு பத்திரத்தில் அரசாங்க அதிகாரி அல்லது வங்கி அதிகாரிகளின் கையெழுத்து தேவை என்றாலும், திருமணத்திற்காக வரன் பார்த்தாலும், வேலைக்கு நேர்காணலுக்கு சென்றாலும், எந்த ஒரு நல்ல காரியத்திற்காக சென்றாலும், அவர்களால் அதை விரைவாக முடிக்கவே முடியாது. இப்படிப்பட்டவர்களுக்கான பதிவு தான் இது. இது, நம் முன்னோர்கள் சொன்ன விஷயம் தான். நாம் எல்லோரும் அறிந்த நம் வீட்டிலேயே இருக்கக் கூடிய சுலபமான இரண்டு பொருள் தான்.

நமக்கெல்லாம் தெரிந்த அந்த இரண்டு பொருள் பொருள் என்ன? என்பதை பற்றியும், அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நம்முடைய முன்னோர்கள் ஏதாவது ஒரு நல்ல காரியத்திற்கு செல்வதாக இருந்தால், இனிப்பு சாப்பிட்டு விட்டு, செல்ல வேண்டும் என்று சொல்லுவார்கள். அதையே தான் நாமும் செய்யப்போகின்றோம். இனிப்பு பொருள் என்றால் வெறும் சர்க்கரையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு போவதில்லை. நாட்டு சர்க்கரை சிறிதளவு, வாங்கிக்கொள்ளுங்கள். அதில் முக்கியமாக ஏலக்காயை நன்றாக தூள்செய்து, இல்லை நன்றாக இடித்து கலந்து கொள்ள வேண்டும். நாட்டு சர்க்கரை முழுவதும் ஏலக்காயின் வாசம் நிறைந்திருக்க வேண்டும். நாட்டு சர்க்கரை என்பது இனிப்பு நிறைந்த ஒன்று. இனிப்புப் பொருளை சாப்பிட்டால் ஆற்றல் அதிகமாக கிடைக்கும் என்றும் சொல்லுவார்கள். வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்.

ஏலக்காய்க்கு மகாலட்சுமியின் அம்சம் அதிகமாகவே இருக்கின்றது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. இதுமட்டுமல்லாமல் ஏலக்காயானது அனைத்தயும் வசீகரிக்கும் தன்மை கொண்டது. வாசம் மிகுந்த இந்த ஏலக்காயை, பணப் பெட்டியில் வைத்தால் கூட பணத்தை ஈர்க்கும் என்பதையும் நாம் எல்லோரும் அறிந்திருப்போம். வசீகரிக்கும் சக்தி கொண்ட இந்த ஏலக்காயை பொடி செய்து, நாட்டு சர்க்கரையோடு கலக்கும் போது, அந்த நாட்டு சர்க்கரை அதிர்ஷ்டம் நிறைந்த ஒரு பொருளாக மாறிவிடுகிறது. நீங்கள் செல்லும் வேலையானது முதல் முறையிலேயே நல்ல முடிவுக்கு வர வேண்டும் என்றால், வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன்பு இந்த நாட்டு சர்க்கரையுடன் ஏலக்காய் சேர்த்த பொடியை இரண்டு ஸ்பூன் வாயில் போட்டுக்கொண்டு வெதுவெதுப்பான தண்ணீரை குடித்துவிட்டு, குலதெய்வத்தை நன்றாக வேண்டிக் கொண்டு, சென்றாலே போதும்.

நீங்கள் சென்ற காரியம் கட்டாயமாக வெற்றியடையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால், முயற்சி செய்து பாருங்கள். ஆனால், நீங்கள் செல்லக் கூடிய காரியம் நிறைவேற தேவையான முயற்சிகள் அனைத்தையும், நீங்கள் சரியாக செய்திருக்க வேண்டும். எந்த முயற்சியையும் செய்யாமல், நாட்டுச் சர்க்கரையையும், ஏலக்காயையும் சாப்பிட்டு விட்டு அந்த இடத்திற்கு சென்று விட்டு வேலை முடியவில்லை என்று சொல்லக்கூடாது. இடைவிடாத முயற்சிகள் இருக்கும் பட்சத்தில் தேவையில்லாத, கண்ணுக்குத் தெரியாத தடங்கல்களை தடுக்கக்கூடிய சக்தி இதற்கு உண்டு என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.