பல மாதமாக ரோஜாச்செடி வளராமல் இருக்கிறதா ?? இந்த 3 விஷயங்களை மட்டும் கடைபிடித்து பாருங்கள் !! அப்புறம் நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு கொத்துக்கொத்தாக பூக்கத் துவங்கிவிடும்.

எத்தனை செடிகளை வளர்த்தாலும் ரோஜா செடி என்பது அனைவருக்கும் மிகவும் விருப்பமான செடியாக இருக்கும். ஆசை ஆசையாக வாங்கி வைக்கும் அந்த செடி வளரவில்லை என்றால் மனம் மிகவும் வேதனை பட்டுவிடும். ரோஜா செடி வளரவில்லை என்றால் அதற்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்று தான் அர்த்தம். ரோஜா செடியை பொறுத்தவரை முறையான பராமரிப்பு தேவை. ஏதோ வாங்கி வந்தோம், வளர்த்தோம் என்றெல்லாம் இருந்தால் அதில் ஒரு பூ கூட பூக்காது என்பது தான் உண்மை. பல மாதமாக அல்லது வருடக்கணக்கில் ஆன பட்டுப் போன ரோஜா செடியை கூட ஒரே மாதத்தில் வளர வைத்து பூக்களை பூக்க வைக்க முடியும். அதை எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ரோஜா செடி செழித்து வளர்வதற்கு மாட்டு சாணம் மிகச்சிறந்த உரமாக இருக்கும் என்பார்கள். மாட்டு சாணம் கிடைத்தால் அதை காயவைத்து வறட்டியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் வருடக்கணக்கில் பூக்காமல் இருக்கும் ரோஜா செடியை பூ பூக்க வைக்க, கோழி கழிவு மிகவும் உபயோகமாக இருக்கும். அதனால் கோழி கழிவுகளை கடைகளில் வாங்கியோ அல்லது சேகரித்தோ வைத்து காய வைத்துக் கொள்ளுங்கள். மண்புழு உரம் ரோஜா செடிக்கு நிறைந்த ஊட்டச்சத்தை கொடுக்கும் ஆற்றல் கொண்டது. ரோஜா செடி மட்டுமல்ல, பொதுவாகவே மண்புழு உரம் என்பது அனைத்து வகையான பயிர்களுக்கும், செடி வகைகளுக்கும் ஊட்டச்சத்தை கொடுக்க வல்லது. அதில் குறிப்பாக ரோஜா செடி செழித்து வளர மண் புழு உரம் பெரும் பங்கு வகிக்கும்.

இப்போது நீங்கள் காய வைத்து எடுத்து வைத்திருக்கும் மாட்டு சாணம் மற்றும் கோழி கழிவுகளை கம்பு கொண்டு உதிர்த்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களின் பூக்காத அந்த ரோஜா செடியை சுற்றிலும் இருக்கும் மண் கலவையை எடுத்து விடுங்கள். நீங்கள் எடுக்கும் பொழுது வேர்ப்பகுதி சேதப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வேர் பகுதிக்கு சேதமில்லாமல் சுற்றி இருக்கும் பகுதி மண்ணை மட்டும் கைகளால் எடுத்து எடுத்து விடுங்கள். ஒரு குழி போன்று ஆனதும் அந்த பகுதியில் நீங்கள் உதிர்த்து வைத்த உரத்தை போடவும். அதன் மேல் மண்புழு உரத்தையும் போடவும். லேசாக தண்ணீர் தெளித்து விடுங்கள். ரோஜா செடியை அதிக நிழல் இருக்கும் பகுதியில் வைத்து வளர்க்கக் கூடாது. நிழலும் வெயிலும் மாறி மாறி படும் இடத்தில் வைப்பது சிறந்தது.

தண்ணீர் தேங்கும் அளவிற்கு ஒரே அடியாக ஊற்றக்கூடாது. சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து ஈரப்பதத்துடன் எப்போதும் வைத்திருக்க வேண்டும். இது போல் நீங்கள் ஒரு முறை செய்து வைத்தால் போதும். அதன் பிறகு உங்கள் வீட்டில் வீணாக பயன்படுத்திவிட்டு தூக்கி எரியும் காய்கறி கழிவுகளை உரமாக்கி போட்டு வைத்தாலே போதும். ஒரு மாதத்தில் பூக்காத ரோஜா செடியும் வளர்ந்து முளைவிட்டு உங்களுக்கு பசுமையான இலைகள் விடத் துவங்கி விடும். அதன் பிறகு அடுத்த மாதத்திலேயே உங்களுக்கு பூக்கள் கொத்து கொத்தாக சூப்பராக பூக்க துவங்கிவிடும். ரோஜா செடியில் பூச்சி அல்லது எறும்பு தொல்லைகள் இருந்தால் வேப்பெண்ணையை தண்ணீரில் கலந்து பிரே பாட்டிலில் அடைத்து ஸ்ப்ரே செய்து வாருங்கள். அதுவே போதுமானது. அதன்பிறகு பாருங்கள் நீங்கள் விரும்பிய போதெல்லாம் உங்களுக்கு கண்களை கவரும் பெரிய பெரிய ரோஜாப்பூக்கள் கிடைக்கும். நீங்களும் செய்து பார்த்து பயனடையுங்கள்.