பல விதமான பண பிரச்சனைகளை தீர்க்கும் ஏலக்காய் !! இந்த மூன்று வார்த்தைகளை உச்சரித்தால் ஏலக்காயின் சக்தி பல மடங்கு அதிகரிக்கும் !!

பலவிதமான, பண பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு கிடைக்கும் என்ற தேடல் நமக்குள் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. எத்தனை பரிகாரம் செய்தும், பலன் இல்லை. என்னதான் செய்வது! என்று பணப்பிரச்சனைகளில் சிக்கி தவிப்பவர்களுக்கு, இந்த பரிகாரம் மிகவும் உதவியாக இருக்கும். இது ஒரு சுலபமான பரிகாரமாக இருந்தாலும், கை மேல் பலன் தரக்கூடிய சக்தி வாய்ந்த பரிகாரம் என்றே சொல்லலாம். மகாலட்சுமி அம்சம் பொருந்திய, இந்த ஏலக்காய் பரிகாரத்தை எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம். மகாலட்சுமியோடு சேர்த்து, மகாவிஷ்ணுவை மனதில் நினைத்துக்கொண்டு, செய்யப் போகின்ற பரிகாரம் இது. மனநிறைவோடு எப்படி செய்வது என்பதை பார்த்து விடலாமா? எப்போதும் போல ஒரு பரிகாரத்தை செய்வதற்கு முன்பு, உங்கள் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்துவிட்டு, ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விடவேண்டும். பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களுக்கு வாசனை மலர்களை சூட்டி அலங்காரம் செய்துவிடுங்கள்.

அடுத்தபடியாக, ஒரு சிறிய கிண்ணத்தில் 27 ஏலக்காய்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஏலக்காய் எப்போதுமே உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்க வேண்டும். நீங்கள் செய்யப் போகிற இந்த பரிகாரத்தையும் தொடர்ந்து 27 நாட்கள் விடாமல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த கிண்ணத்தில் இருக்கும் ஏலக்காயை ஒவ்வொன்றாக, எடுத்து 27 நாட்களுக்கும் பரிகாரத்திற்காக பயன்படுத்த போகின்றோம். முதல் நாள், கிண்ணத்தில் இருந்து ஒரு ஏலக்காயை எடுத்து, உங்களது வாயில் பல் இடுக்கில் கடித்து அடக்கி வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாயில் உமிழ்நீர் சுரக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் ‘ஓம் ஹரி ஓம்’ என்ற இந்த மூன்று வார்த்தைகள் கொண்ட, இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். ஏலக்காயின் வாசத்தோடு, நாம் உச்சரிக்க போகும் இந்த மந்திரம், நம் வேண்டுதல்களை உடனடியாக நிறைவேற்றி தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது, மந்திரத்தோடு சேர்ந்த ஏலக்காய் வாச உமிழ்நீர், உடலுக்குள் சென்று, அற்புதமான நேர்மறை ஆற்றலை நமக்குள் உருவாக்கித் தரும்.

அதாவது உங்களுக்கு இருக்கக்கூடிய பணக் கஷ்டங்கள் தீர வேண்டும், கடன் தொந்தரவு விரைவாக தீர வேண்டும், மகா லட்சுமியின் அருளும், மகாவிஷ்ணுவின் அருளும் என்றும் நிரந்தரமாக நம்மிடம் இருக்க வேண்டும், என்ற வேண்டுதலை வைத்து இந்த பூஜையை உங்கள் வீட்டில் செய்ய தொடங்குங்கள். 27 நாட்கள், 27 ஏலக்காய்களை, ஒவ்வொன்றாக எடுத்து உங்கள் வாயில் வைத்து, இதேபோல் மந்திரத்தை உச்சரித்து உங்கள் பூஜையை செய்து வர வேண்டும். 27 வது நாள் உங்களது பூஜையும் முடிந்து இருக்கும். உங்கள் கிண்ணத்தில் இருக்கும் ஏலக்காய்களும் தீர்ந்திருக்கும். கூடவே, உங்கள் வீட்டில் இருந்த பிரச்சனைகளும் காணாமல் போயிருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. ஏலக்காய் என்பது வாசத்திற்காக மட்டுமல்ல. எந்த ஊரு பிரார்த்தனையையும், வசியப்படுத்த கூடிய சக்தியும் இந்த ஏலக்காய்க்கு உண்டு என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதாக உங்களுக்கு மனநிறைவு இருந்தால், இந்த வழிபாட்டை 27 நாட்களோடு விட்டுவிட வேண்டாம். தினம் தோறும் உங்கள் வீட்டில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, மகாவிஷ்ணுவை மனதார நினைத்து, ஏலக்காயை வாயில் வைத்துக் கொள்ளாமல் கூட, ‘ஓம் ஹரி ஓம்’ மந்திரத்தை உச்சரிக்கும் பட்சத்தில், (இரண்டு ஏலக்காயை தினம்தோறும் மகாலட்சுமிக்கு நெய் வேகமாக படைத்துவிடுங்கள்.) உங்கள் வாழ்க்கையில், வாழ்நாள் முழுவதுமே பணப் பிரச்சனை வராமல் இருக்கும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.