பாலாவின் கட்டு மஸ்தான உடலின் மீது உள்ள ஆசையில் தான் ரம்யா பாலாவுக்கு சப்போர்ட் செய்கிறாரா..? கமலின் பேச்சால் கொதித்த பெண் சமுகம்….

இதுவரை 13 வாரங்கள் முடிவடைந்த நிலையில் ரேகா,வேல்முருகன்,சுரேஷ் சக்ரவர்த்தி,சுசித்ரா,சம்யுக்தா,ஜித்தன் ரமேஷ்,சனம் ஷெட்டி,அர்ச்சனா,நிஷா,அனிதா சம்பத்,ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர் போட்டி முடிய இன்னும் சில வாரங்களே உள்ளதால் போட்டியாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.இதற்கிடையே ரம்யா ஒரு தலை பட்சமாக செயல் படுகிறார் என கமல் கூறியுள்ளார்.

ரம்யா பாண்டியனுக்கு பிக்பாஸ் போட்டிக்கு வரும் முன்பே ஏராளமான ரசிகர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவர் பெயரை அவரே கெடுத்து கொண்டார் என்ரே சொல்ல வேண்டும் அதுவும் ஆரி விஷயத்தில் எப்போதும் அவர் தவறாகவே பேசிக் கொண்டிருக்கிறார் எனவும் கருத்து நிலவுகிறது.இதனாலே ஆரியின் ரசிகர்கள் இவரை நரி பாண்டியன் என்றும் விஷம் என்றும் கூறிவருகின்றனர்.

ரம்யா ஆரியை பற்றி கமலிடம் கூறியதாவது அரி எப்போதும் மற்றவர்களை குறை கூறி கொண்டே இருக்கிறார் ஆனால் அவரிடம் இருக்கும் குறைகளை சுட்டி காண்பித்தால் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார் எனவும் இந்த 90 நாட்களில் அவர் என் பார்வைக்கு போரிங்காக தான் தெரிகிறார் என்றும் எப்போதும் சண்டையிடும் போட்டியாளரவே இருக்கிறார் எனவும் கூறினார்.

அதற்கு குறிக்கிட்டு பேசிய கமல் ஆரி சண்டையிடுகிறார் என்றால் பாலாஜியும் அதையே தான செய்கிறார் அதை ஒன்றும் சொல்ல மறுக்கீறிர்கள் எனவும் ஒரு தலை பட்சமாக ரம்யா செயல்படுவதை குற்றம் சாட்டி பாலா உயரமும் உடற்கட்டும் பார்த்து மயங்கி அவரிடம் இருக்கும் குறை தெரியவில்லையோ என கேள்வி எழுப்பியுள்ளார்.இதற்கு பெண்களை கொச்சை படுத்தி பேசி விட்டதாக சமூக வலைதளங்களில் கமலை விமர்சித்து வருகின்றனர்.