பாலாவிற்கு ரெட்கார்ட் வெளியேர போகிறாரா.. விஜய் தொலைக்காட்சியை கேட்டு கொண்ட நடிகர்…?

விஜய் டீவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே கடந்த சீசன்களை விட இதில் சன்டைக்கும் சர்சைக்கும் குறைவில்லாமல் அனல் பறக்கிறது என்றே சொல்லி ஆக வேண்டும்.பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டமாக இருக்கும் டாஸ்க்குகள் கூட ஜாலயாகதான் இருக்கும் ஆனால் இந்த சீசனில் ஆரி மற்றும் பாலா சண்டை காட்சிகள் சினிமாவை மிஞ்சும் விதமாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும்.

அனால் கடந்த சில தினங்களாக ஆரியும் பாலாவும் பழசை எல்லாம் மறந்து அண்ணன் தம்பி போல பழகி வந்தார்கள் இதற்கிடையே ஆரி பாலாவை பற்றி மற்றவர்களிடம் குறை சொல்லி கொண்டுதான் இருக்கிறார்.ஆரம்பத்தில் தொட்டால் பற்றி கொள்ளும் அளவிற்கு ஆக்ரோஷமாக இருந்த பாலா திடிரென்று அமைதியாக மாறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.பீரிஸ் டாஸ்கில் ஆரியின் மகள் பாலாவிற்கு முத்தம் கொடுத்த காட்சி ரசிகர்களை நெகிழ செய்தது.

ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சுவாரஸ்யம் குறைவாக இருந்த இருவரை காரணத்தோடு நாமினேட் செய்யும் போதே ஆரிக்கும் பாலாவுக்கும் கருத்து மோதல் வந்தது. சக போட்டியாளர்கள் அனைவரும் சோ்ந்து ஆரி மற்றும் பாலாவை ஓய்வு எடுக்கும் அறைக்கு அனுப்பி வைத்தனர். உள்ளே இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாலாவை ஆரி சோம்போரி என்று சொல்ல அமைதியாக இருந்த பாலா மீண்டும் தனது சுபாவத்தை வெளிப்படுத்தி எல்லை மீறி நடந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து இது குறித்து பேசிய கமல் பாலாவை வருத்தெடுத்தார் ஆனால் பாலாவை கமல் கேட்ட கேள்விகளுக்கு எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை என வேண்ட வெறுப்பாக பதில் கூறியது சர்சையை கிளபடபியது. இதற்கு கருத்து தெரிவித்துள்ள நடன இயக்குனர் மற்றும் நடிகரான சதீஷ், பாலா பேசிக் கொண்டிருக்கிறது கமல் சாரிடம் என்பது தெரிகிறதா எனவும் ஆரியை பார்த்தால் காண்டாக இருக்கிறது என கூறும் பாலா மக்களிடம் தன்னை பார்தால் எப்படி இருக்கிறது என்று கேட்டால் விடை தெரியும் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.