பாலாவை பார்த்து ஆரி சொன்ன வார்த்தை…. கடுப்பாகி எச்சரித்த பிரபல நடிகை …?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே கடந்த சீசன்களை விட இதில் சன்டைக்கும் சர்சைக்கும் குறைவில்லாமல் அனல் பறக்கிறது என்றே சொல்லி ஆக வேண்டும்.அப்படி இந்த வாரம் கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்க்கில் பாலா எதற்காக ஓடுகிறிர்கள் என்று கேட்க அதற்கு ஆரி ஓடிவந்து பிடிக்க வேண்டியதுதானே நீ ஆம்பள பையன் தானே என்று கேட்டார்.

இதை பார்த்த பாலா ரசிகர்கள் ஆரி இப்படி கேட்டு இருக்க வேண்டாம் கோபத்தில் அவர் கூட சில வார்த்தைகளை விடுகிறார் என்பது போல கமெண்ட் செய்து வருகின்றனர்.ஆரிக்கு கோபம் வந்தால் என்ன வேணா பேசுவார் ஆனால் பாலா பேசினால் மட்டும் தவறு என்று கூறுவது சரியா என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இந்நிலையில் இது பற்றி நடிகை ஸ்ரீபிரியா தற்போது ஒரு பதிவிட்டுள்ளார் அதில் பிக் பாஸ் வீட்டில் ஆரி மிகச்சிறந்த மனித தன்மையாக இருக்கலாம்.

ஆனால் பல சமயங்களில் அவர் மற்றவர்களை தூண்டி விடுகிறார் எனவும் தேவையில்லாத சில வார்த்தைகளை பேசிவருவதாகவும் அதாவது ஆம்பளை பொம்பளை என குறிப்பிட்டு கூறுவது மிகத் தவறான செயல். ஏன் ஆண்கள்தான் ஓடியாடி விளையாட முடியுமா எங்களால் முடியாதா ஆண்களால் சாதித்த முடியாததை கூட சாதித்த இவ்வளவு பெண்கள் இங்கு இருக்கையில் ஆறு இப்படி செய்தது மிக தவறு என்று காட்டமாக பதிவிட்டுள்ளார் ஸ்ரீபிரியா.