பிக்பாஸ் சீசன் 5-ல் என்ஜாய் என்சாமி பிரபலம் !!! எறங்கி அடிக்கும் விஜய் தொலைக்காட்சி !!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் விரைவில் அதன் சீசன் 5 ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்பது அனைவரும் அறிந்ததே சமீபத்தில் யூடியூபில் வெளியான என்ஜாய் என்சாமி என்ற பாடல் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் இந்த பாடல் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்த பாடலை சந்தோஷ் நாரயணன் மகள் தீயுடன் இணைந்து தெருக்குறள் அறிவு பாடியிருக்கிறார் அவர் ஏற்கனவே மாஸ்டர் பிகில் போன்ற படங்களில் பணியாற்றியவர் இந்தப் பாடலுக்கு சந்தோஷ்நாரயணன் இசையமைத்திருந்தார்.

தற்போது விஜய் டிவியில் ஆரம்பிக்க இருக்கும் பிக் பாஸ் 5 இவரிடம் பேச்சுவார்த்தையில் பெரும் தொகையை பேசிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது அப்படி எல்லாம் சரியாகி அவர் உள்யே வந்தால் பிக்பாஸ் வீட்டில் பாட்டுக்கு பஞ்சமே இருக்காது வேறலெவல் என்டர்டெயின்மன்ட் இருக்குமென ரசிகர்கள் பேசி வருகின்றனர்.