பிக்பாஸ் குரலில் பேசுவது யார்…..? அவரே பேசி வெளியிட்ட வீடியோ உற்சாகத்தில் ரசிகர்கள்….ஒருவழியாக வெளியே வந்த தகவல்…

பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வந்த பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது விஜய் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்துவருகிறது விஜய் டிவியில் பிரமோ வீடியோவில் கேட்கும் குரல் மக்களுக்கு மிகவும் பரிச்சயமானது தான். அந்த கம்பீரமான குரலுக்கு பின்னால் இருக்கும் அவரது முகத்தை இதுவரைக்கும் பெரும்பாலானோர் கண்டதில்லை.

இந்த பிரம்மாண்ட குரலுக்குச் சொந்தக்காரர் பெயர் கோபி நாயர் என்பது மட்டுமே நமக்கு தெரியும் அவர் இயக்குனராக பணிபுரிய வேண்டும் என்று சென்னை வந்தார் வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் குரல் வளத்தை பார்த்த இயக்குனர்கள் டப்பிங் ஆர்டிஸ்டாக அவர்களை பயன்படுத்தி வந்தனர் ஆனால் பிக் பாஸ் வீட்டில் பேசுவது அவர் அல்ல.தற்போது யார் அந்த குரளுக்கு சொந்தகாரர் என்று தெரிந்துள்ளது.

பிக் பாஸ் ஆக பேசுவது இவர்தான் என்று பலபெயர்களில் பெயர்கள் அடிபட்டது அதில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்குபெற்ற கோகுல் என்பவரும் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுப்பாளரான ரிஷி என்பவரும் தான் பிக் பாஸ் என்று பலராலும் கூறப்பட்ட நிலையில்
மானாட மயிலாட கோகுல் அந்த தகவலை மறுத்து இருக்கிறார் ரிஷி தான் அந்த குரலுக்கு சொந்தக்காரர் என்றும் இதுவரை தெளிவாக தெரியவில்லை.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் குறளுக்கு உண்மையான சொந்தக்காரர் யார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது அவருடைய பெயர் சச்சிதானந்தம்அவர் பாலிவுட்டில் வேலை செய்து வருகிறாராம் தற்போது அவரே பேசி வீடியோ ஒன்று வெளியிட்டு உள்ளார் வீடியோ கீழே உள்ளது.