பிக்பாஸ் சரவணனுக்கு இரண்டாவது திருமணம் அதுவும் முதல் மனைவியே நடத்தி வச்ச பரிதாபம் .. காரணம் இதுதான்..

விஜய் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பாகி பரப்பரப்பாக வெற்றியடைந்த நிகழ்ச்சி பிக்பாஸ் இதன் மூன்றாம் பகுதியில் பருத்திவீரன் சித்தப்பு என்று அனைவராலும் அழைக்கப்படும் சரவணன் கலந்து கொண்டது அனைவரும் அறிந்ததே சமீபத்தில் அவருக்கு இரண்டாவது திருமணத்தை தன் முதல் மனைவியை நடத்தி வைத்தது குறித்து கண்ணீர் மல்க பேட்டி அளித்திருக்கிறார்.

சரவணன் முதல் மனைவி சூர்யா சரவணன் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் நாங்கள் இருவரும் ஒன்றாக கல்லூரியில் படித்தோம் அப்போதிலிருந்தே காதலித்தோம் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு இருந்தது பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம்தான் செய்து கொண்டோம் நன்றாக சென்று கொண்டிருந்த திருமண வாழ்வில் எங்களுக்கு குழந்தை இல்லை என்ற பிரச்சனை நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே போனது

நான் எவ்வளவு சிகிச்சை பெற்றும் எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை அவரது குடும்பத்தினர் திடீரென இரண்டாவது திருமணம் செய்ய அவரை வற்புறுத்தினார்கள் நிலைமையை புரிந்து கொண்டு நானும் அவரது நலனுக்காக அவர் திருமணத்தை நடத்தி வைத்தேன் தற்பபோது அவருக்கு குழந்தை உள்ளது ஆனாலும் எனது கணவர் மீது எனக்கு இன்னமும் பாசமுள்ளது அவர் மிகவும் நல்லவர் என நெகிழ்ச்சியுடன் கண் கலங்கக் கூறினார்.