பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி உடன் 30 வருடம் வாழ்வது அவ்வளவு ஈசி கிடையாது..? சுரேஷின் மனைவியாய் இது வைரலாகும் புகைப்படம்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக நடந்து முடிந்தது இதில் போட்டியாளராக பங்குபெற்ற சுரேஷ் சக்கரவர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மனைவியுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் சுரேஷ் சக்ரவர்த்தி பிரபல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகராக இருந்தாலும் பிக்பாஸ் மூலம் தான் அதிக அளவில் இவர் அறியப்பட்டார்.

ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் சினிமாக்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் ஆஸ்திரேலியாவில் ரெஸ்டாரண்ட் நடத்தி வந்தார், கே.பாலச்சந்தர் இயக்கிய அழகன் படத்தில் நடித்திருப்பார் சன் டிவியில் பிரபலமான 90ஸ் கிட்ஸ் பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை இயக்கியவர் இவர்தான். அதேபோல் எனக்குள் ஒருத்தி என்ற தொடரை எழுதி இயக்கி அதில் நடித்தும் இருக்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள அவர் இன்று 30 வது திருமண நாளைக் கொண்டாடுகிறார் எனவும் தனது மனைவியுடன் கல்யாணத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் சுரேஷ் சக்கரவர்த்தி மேலும் என்னுடன் முப்பது வருடம் வாழ்ந்தது சாதாரண விஷயம் இல்லை அதை செய்து காட்டியிருக்கிறார் எனது மனைவி என பெருமிதம் கொண்டு இருக்கிறார்.