தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக போட்டியாளராக கலந்து கொள்ளும் திருநங்கை !! அட இவங்க தானா அது ??

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது அதில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களாக சக்கைப் போடு போட்டு வருகிறது பிக் பாஸ் தமிழ் மட்டுமின்றி மலையாளம் ஹிந்தி தெலுங்கு என பல்வேறு மொழிகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது சமீபத்தில் நடந்து முடிந்த நான்காவது சீசனில் ஆரி வெற்றி பெற்றிருந்தார்.

கடந்தாண்டு கூட பிக்பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்று செய்திகள் வெளியாகி வந்தது ஆனால் அதனை முற்றிலுமாக மருத்தது எண்டிமொல் நிறுவனம். இப்படி ஒரு நிலையில் அடுத்த சீசன் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது பல பேர் சன் டிவியில் ஒளிபரப்பாக போகிறது என்று கூட கூறிவந்தனர் ஆனால் இது அனைத்துமே உண்மை அல்ல என தற்போது செய்தி தெளிவாகியுள்ளது பிக் பாஸ் தமிழ் சீசன் 5 கண்டிப்பாக விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக போகிறது.

இதை சிம்பு தொகுத்து வழங்க போகிறார் என்று வந்த செய்தியும் பொய்யாகவே பார்க்கப்படுகிறது நிச்சயம் கமல்ஹாசன்தான் இந்த சீசனும் தொகுத்து வழங்குவார் என்றும் தகவல்கள் வந்துள்ளது தற்போது இதற்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யும் படலத்தை தொடங்கியுள்ளது விஜய் டிவி நடிகை ஷகிலா கன்னடத்தில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளராக கலந்து கொண்டு 26 நாட்களில் வீட்டினுள்ளே இருந்திருக்கிறார் அதனால் அவர் தமிழ் சீசன் கலந்துகொள்ளப் போவதில்லை என கூறியதாகவும் அவருக்கு பதிலாக அவரது வளர்ப்பு மகளான திருநங்கையான மிலாவை கலந்து கொள்ள வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.