பித்ரு தோஷத்தால் பரம்பரை பரம்பரையாக தீராத பிரச்சனைகளை அனுபவித்து வருபவர்களா நீங்கள் உங்களுக்கும் விடிவு காலம் உண்டு…. இந்த பரிகாரத்தை செய்தால் போதும் !!

சிலபேரது ஜாதக கட்டத்தில் இருக்கக்கூடிய பூர்வபுண்ணியம் தோஷம், பித்ரு தோஷம், பித்ரு சாபத்தாலும், வம்சாவழிப் பிரச்சனைகளை அனுபவித்து கொண்டு இருப்பார்கள். தலைமுறை, தலைமுறையாக, அந்த குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் ஆகாமல் இருக்கும், அல்லது அந்த குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு வாரிசு இல்லாமல் இருக்கும். நிரந்தரமான வருமானம் இருக்காது. நல்ல தொழில் அமையாது. பணப் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். சில பேருக்கு தீராத உடல் உபாதைகளால் மருத்துவ செலவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இப்படி பரம்பரை பரம்பரையாக நிம்மதி இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வந்திருப்பார்களாவர்களாக இருந்தாலும் கூட, ஆன்மீகத்தில் இதற்கு ஒரு சுலபமான வழிபாட்டு தீர்வு உண்டு. ‘ராம’ நாமத்திற்கு உள்ள மகிமையை, நாம் எல்லோருக்கும் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அந்த ராம நாமத்தை கோடிமுறை உச்சரிப்பவர்களுக்கு எப்பேர்ப்பட்ட தோஷமும் விலகி விடும் என்று, காஞ்சி மகா பெரியவா அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பாராம். ஆகவே, தோஷம் உள்ளவர்களாக இருந்தாலும் சரி, தோஷம் இல்லாதவர்களாக இருந்தாலும் சரி, முடிந்தவரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள். நமக்கு அது கோடி புண்ணியத்தை தேடித்தரும். பித்ரு சாபம் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்களுடைய வீட்டின் அருகிலிருக்கும் சிவன் கோயிலில், இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். 108 நாட்கள் தொடர்ந்து தினம்தோறும், பசும் பால் வாங்கி கொடுத்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அதனுடன் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டியது அவசியம். பாக்கெட் பால் வாங்கி கொடுப்பதில் பயனில்லை. கட்டாயம் பசு மாட்டு பால் வாங்கிக் கொடுக்கும் பட்சத்தில், உங்களுக்கு இருக்கக்கூடிய தீராத பிரச்சனைகளுக்கு கட்டாயம் விடிவுகாலம் பிறக்கும்.

இந்த பரிகாரத்தை தொடங்கிய 15 இலிருந்து 20 நாட்களுக்குள்ளாகவே, நடைபெறக்கூடிய மாற்றத்தை உங்களால் உணர முடியும்.யாருடைய கையால் இந்த பரிகாரத்தை, செய்யத் தொடங்குகிறார்களோ, அவர்களின் பிறந்த நட்சத்திர தினத்தன்று, பரிகாரத்தை தொடங்குவது மிகவும் சிறப்பானது. 108 நாட்களில், இடையிடையே சூழ்நிலை சந்தர்ப்பம் காரணமாக உங்களால் கோவிலுக்கு சென்று சிவபெருமானை தரிசனம் செய்ய முடியவில்லை என்றாலும், உங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை, பால் வாங்கிக் கொடுக்கச் செய்து, வில்வ இலையால் அர்ச்சனை செய்து விட சொல்லுங்கள். 108 நாட்களும் கட்டாயம் தவறவே கூடாது. ஆனால் சில தீர்க்கமுடியாத சாபங்களும் இந்த லோகத்தில் இருக்கத்தான் செய்கிறது என்பதையும் இந்த இடத்தில் நாம் நினைவு கொள்ள வேண்டும்.

இருப்பினும் பரிகாரத்தை செய்வதன் மூலம் பிரச்சினைகள் குறையும் அல்லவா. பாட்டன், பூட்டன், தாத்தா காலத்திலிருந்தே சில பிரச்சினைகள் வம்சாவழியாக, பரம்பரையாக தொடர்ந்து வரும். அதற்கு காரணம் இந்த பித்ருசாபம், பித்ருதோஷம் ஆக கூட இருக்கலாம். சில பேருக்கு ஜாதகத்தைப் பார்த்துவிட்டு ஜோதிடர்கள் சொல்லி இருப்பார்கள். உங்களுடைய ஜாதகத்திலும், இப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்தால், இந்த வழிபாட்டை நம்பிக்கையோடு செய்து பாருங்கள்! கண்டிப்பாக விடிவுகாலம் பிறக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.