பிரச்சனையே வாழ்க்கையாக இருக்கிறதா ?? ஒரு கொத்து வேப்பிலையை மட்டும் இப்படி செய்து பாருங்கள் போதும் !! உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும் !!

ஒருவருக்கு வாழ்க்கையில் தான் பிரச்சனை இருக்கும். ஆனால் ஒரு சிலருக்குத் தொடர்ந்து கஷ்டங்கள் வந்து பிரச்சனையே வாழ்க்கையாக மாறி இருக்கும். அது மாதிரி தொடர்ந்து பிரச்சினையே வாழ்க்கையா இருந்தா? நாம் மட்டும் அப்படி என்ன தப்பு செஞ்சுட்டோம்? நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது? என்று வாழ்க்கையை வெறுத்து விடுவார்கள். எப்பவுமே ஒன்ன மட்டும் புரிஞ்சுக்கோங்க! யாருக்கும் தொடர்ந்து கஷ்டம் என்பது இறைவன் கொடுக்க மாட்டார். அப்படியும் நமக்கு கஷ்டம் வருகிறது என்றால் அதற்கு நிச்சயம் ஏதாவது ஒரு காரணம் இருக்கும். அது என்னவென்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது தான். எவ்வளவு யோசித்தாலும் நாம் எந்த தவறும் செய்யாதது போல் தான் இருக்கும்.

ஆனால் நம்மையும் அறியாமல் நாமோ அல்லது நம்முடைய முன்னோர்களோ செய்த பாவத்தின் வினையாக இப்போது தொடர்ந்து கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலைமை நமக்கு வந்திருக்கலாம். இதிலிருந்து விடுபட ஒரு எளிய வழிமுறை உள்ளது. 3 நாட்கள் இதை செய்து பார்த்தால் நம்முடைய பிரச்சினைகள் ஓரளவுக்கு தீர்ந்து விடும். நமக்குள் தன்னம்பிக்கையும், தைரியமும் பிறக்கும் என்பது மட்டும் உறுதி. அதற்கு நமக்கு எதுவுமே தேவையில்லை, ஒரு கொத்து வேப்பிலை இருந்தால் போதும். வேப்பிலையை வைத்து நாம் என்ன செய்ய வேண்டும்? நம்முடைய பிரச்சினை தீர பரிகாரம் தான் என்ன? வாருங்கள் அதைப் பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். தினமும் தொடர் பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டு அடுத்த பிரச்சனையை வரவேற்க காத்திருக்கும் நபர்களுக்கு இந்த பரிகாரம் நிறையவே மன ஆறுதலை தரும். இதை செய்தால் மட்டும் நம் பிரச்சினை தீர்ந்து விடவா போகிறது? என்கிற எண்ணத்துடன் செய்யாதீர்கள்!

இதை செய்தால் நம் பிரச்சினை தீரும் என்று நம்புங்கள். அப்போது தான் இந்த பரிகாரம் உங்கள் மனநிலையை மாற்றும்.ஒண்ணுமே இல்லங்க ஒரு கொத்து வேப்பிலையை எடுத்துக் கொள்ளுங்கள். நல்ல தண்ணீரில் அலசி காய வைத்துக் கொள்ளுங்கள். அது அப்படியே உருவி, ஒரு மஞ்சள் துணியில் வையுங்கள். அதனுடன் ஒரு ரூபாய் நாணயத்தை கையில் வைத்துக் கொண்டு பூஜை அறைக்குச் செல்லுங்கள். தெரிஞ்சோ தெரியாமலோ என்ன தப்பு செய்திருந்தாலும் என்னை மன்னித்துக்கொள் இறைவா! நீ கொடுத்த துன்பங்களை நான் மனதார ஏற்றுக் கொண்டேன். இதற்கு மேல் என்னிடம் தைரியம் இல்லை எனக்கு விமோசனம் கொடு! என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த ஒரு ரூபாய் நாணயத்தையும், வேப்பிலையுடன் சேர்த்து அந்த மஞ்சள் துணியை முடிந்து கொள்ளுங்கள். எந்த கலர் நூல் வைத்து கட்ட வேண்டும் என்று கேட்காதீர்கள். இதில் நிறம் பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை.

எதை வைத்து வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளுங்கள். சிறிது நேரம் அதை சுவாமி படத்தின் காலடியில் வைத்து விட்டு எடுத்துக் கொண்டு போய் நீங்கள் படுக்கும் தலையணைக்கு அடியில் வைத்துக் கொள்ளுங்கள். மூன்று நாட்கள் வரை தலையணையை அங்கிருந்து எடுக்காதீர்கள். அந்த தலையணையில் தலை வைத்து நிம்மதியாக மூன்று நாட்கள் படுத்து உறங்குங்கள். மூன்று நாட்கள் வரை தீட்டு படாமல் பார்த்துக் கொள்ளுங்கள் போதும். மற்றபடி பெரிதாக வேறு எதையும் செய்ய வேண்டாம். அன்றாடம் உங்கள் பணிகளை செய்து வாருங்கள். மூன்று நாட்கள் கழித்து இந்த மஞ்சள் முடிப்பை உங்கள் இஷ்ட தெய்வமான ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு செல்லுங்கள். உங்களுக்கு எந்த அம்மன் பிடிக்குமோ! அந்த அம்மன் கோவிலுக்கு சென்று, இதை வைத்துவிட்டு மனதார வேண்டிக் கொண்டு, உங்களால் முடிந்த காணிக்கையை உண்டியலில் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்து விடுங்கள். இதை செய்த ஒரு வாரத்தில் உங்களுக்கு நிறைய மாற்றங்கள் தெரியவரும். ஒரு வாரத்திற்குள் மாற்றங்கள் தெரிந்தால், உங்களுடைய பிரச்சினைகள் தீர்ந்து விடப்போகிறது என்பதை நம்புங்கள்.